SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரணி போற்றும் தைப்பூசம்

2015-02-03@ 11:53:19

உலகெங்கும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள், விழாக்கள், விரதங்களுக்கு விஞ்ஞான, மெய்ஞானப்படி சில தத்துவங்களும், புராண  இதிகாச பின்னணிகளும் உண்டு. அந்த வகையில் வெகு விமரிசையாகவும், பக்தி பெருக்குடனும் இன்று கொண்டாடப்படும் விழா தைப்பூச திருநாள்.  தைப்பூசம் சிவனுக்கும், அம்பாளுக்கும் உகந்த நாள். முருகப் பெருமானுக்கும் மிகவும் விஷேசமான நாள். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில்  சிவபெருமான் தனி யாக தாண்டவம் (நடனம்) புரிவார். தைப்பூச தினத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த நிலையையே  உமாமகேஷ்வரர் என்று வழிபடுகிறோம். உமாமகேஷ்வர நடனத்தை பூச நட்சத்திர தினத்தில் அரங்கேற்றியதாக ஐதீகம்.

தைமாதம் சூரியன் மகர ராசியிலும், தைப்பூச நாளில் சந்திரன் கடக ராசியில் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கிறார். சூரியன் பார்வை  சந்திரன் மீதும், சந்திரன் பார்வை சூரியன் மீதும் விழுகிறது. இது மிகவும் உன்னத நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும்  உண்டாகிறது. மேலும் சூரியன் சிவா ம்சம், சந்திரன் சக்தி அம்சம். ஆகவே இறை வனும், இறைவியும் இணைந்து நடனம் புரிந்த இந்த தைப்பூச  திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த தைப்பூசம் காவடி பிரியன் கந்த னுக்கு மிகவும் விஷேச மான நாளாகும். ஒரு தைப்பூச நன்னாளில் தான் முருகப்பெருமான் வள்ளியை மண  முடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய நாளும் தைப்பூச திருநாளே. இன்றைய தினம் முருக பக்தர்கள்  பல்வேறு விதமான காவடிகள் எடுத் தும் அலகு குத்தியும், மெய் சிலிர்க்கும் நேர்த்தி கடன்கள் செலுத்தியும் கந்த பெரு மானை வணங்குவார்கள்.  தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் மற்றும் மருதமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு விஷேச பூஜைகள்  நடக்கின்றன. இந்த நாளை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறை வேறும் நாளாக கொண்டாடுகிறார்கள்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்