SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கம் கோயிலில் 14 கோபுரங்களில் திருப்பணிகள்

2014-07-07@ 13:03:51

நாளை மறுநாள் துவங்குகிறது

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்திபெற்ற ரங்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், கடந்த 5ம் தேதி துவங்கியது. கோயிலின் முக்கிய மண்டபங்கள், மேல்தளங்களில் சாரம் அமைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள் உள்ளன. முதற்கட்டமாக 7 கோபுரங்களில் திருப்பணிகள் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது.

ராஜகோபுரம், இதையடுத்துள்ள 2 கோபுரங்கள், ரங்கா, ரங்கா கோபுரம், கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம், வடக்கு வாசல் தாயார் சன்னதி கோபுரம், மேல வாசல் கோபுரம் ஆகிய 7 கோபுரங்களில் பாலாலயம் செய்யப்பட்டு சாரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 கோபுரங்களுக்கும் நாளை மறுதினம் (9ம் தேதி) பாலாலயம் செய்து  திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ராஜகோபுர திருப்பணிகளுக்காக சாரம் அமைக்கும் பணி நேற்று  துவங்கியது. இதற்காக ஏராளமான சவுக்கு கட்டைகள் கோபுர வாசல் அருகே கொண்டுவரப்பட்டுள்ளன.

சமயபுரம்: திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அதிக வருவாய்  உள்ள கோயில். இங்கு ராஜகோபுரம், 3 நிலை கோபுரம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி  கிடைத்துள்ளது. இதன்படி கிழக்குப்புறம் ரூ.3.15 கோடியில் 7 நிலை கொண்ட ராஜகோபுரமும், மேற்குப்புறம் ரூ. 75 லட்சத்தில் 3 நிலை கொண்ட கோபுரம் கட்டும்  பணியும் அடுத்த மாதம் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

  • baloon111

    பலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்