SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலில் உற்சாக திருவிழா : சிவனுக்கு தங்க மீன் அர்ப்பணிப்பு

2013-12-11@ 16:00:48

நாகை: நாகை கடலில் சிவபெருமானுக்கு தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. கி.பி. 8ம் நூற்றாண்டில் சென்னை கடற்கரையில் இருந்து குமரி கடற்கரை வரை 63 மீனவர் குப்பங்கள் இருந்தன. இந்த குப்பங்களின் தலைவர், நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வசித்து வந்தார். அந்த பரம்பரையில் வந்தவர் அதிபத்தர். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த இவர், தினமும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரியதும், சிறந்ததுமான மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விடுவது வழக்கம்.

ஒரு நாள் அதிபத்தர் வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் சிக்கியது. அந்த ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் சிக்கிய ஒரே ஒரு மீனை சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது அன்பை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்தரின் வலையில் நவரத்தினமும், பொன்னும் பதித்த அதிசய மீனை சிக்க செய்தார். விலை மதிப்பற்ற அந்த மீனையும் அதிபத்தர் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். அவரது அன்பில் மயங்கிய சிவபெருமான் பார்வதி சகிதம் வந்து அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி, நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா நேற்று மாலை நடந்தது. நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி மற்றும் அம்மன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புதிய கடற்கரை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். நம்பியார் நகரில் இருந்து அடியார்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்து கடற்கரை வந்தனர். கடற்கரையில், அதிபத்தனார் பரம்பரையை சேர்ந்த ஒருவர் படகில் ஏறி தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக கடலில் வீசினார். இந்த விழாவில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்