SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பாராத இடத்திலேர்ந்து நன்மையான செய்திகள் வருமுங்க. வெளிநாட்டுப் பயணத்துக்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியுமுங்க. மேல்  படிப்புகாகவோ, உத்யோக ரீதியாக குறைந்த கால இடைவெளியில் பணியை மேற்கொள்ளவோ, வியாபாரம் செய்யவோ, இங்கிருந்தவாறே  ஏற்றுமதி-இறக்குமதி தொழில் புரியவோ அல்லது சுற்றுலாவாகவோ போறவங்க அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களைச் சரியாகத் தெரிஞ்சுக்கோங்க.  அங்கே போய் எந்த சட்டச் சிக்கல்லேயும் மாட்டிக்காதீங்க. தடைபட்ட சுபவிசேஷங்கள் மனம் மகிழ நிறைவேறுமுங்க. பெரியவங்க முயற்சியால பிரிந்த  குடும்பம் ஒன்று சேரும். இந்தத் தேதி இளைஞர்களின் காதல் பெற்றோரால் அனுமதிக்கப்படுமுங்க. சளித் தொந்தரவு, காய்ச்சல்னு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பெரியோர் அறிவுரைப்படி நடந்து மேன்மை பெறுவீங்க. புதன்கிழமை நவகிரக வழிபாடு செய்து கோளறு திருப்பதிகம்  படிங்க; எல்லாக் கோளாறும் நிவர்த்தியாகும்.
 
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத் துறையில் வீண் பழிக்கு ஆளாகியிருந்தவங்க அதிலேர்ந்து விடுபட்டு உங்களோட விசுவாசத்தையும் திறமையையும் நிரூபிக்க முடியுமுங்க.  இதனால ஏற்பட்டிருந்த இழப்புகள், கூடுதல் ஆதாயத்தோட கிடைக்குமுங்க. உத்யோக மாற்றல் வாய்ப்பு வந்தா உடனே எடுத்துக்கலாமுங்க; இதிலே  இப்போதைக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் எதிர்கால நிம்மதியைத் தருமுங்க. வியாபாரம் அல்லது தொழில் விரிவாக்கத்துக்குத் தேவையான  வங்கி அல்லது தனியார் கடனும் கிடைக்கும். அடிவயிறு முதல் பாதம்வரை தோன்றக்கூடிய உபாதை அறிகுறிகளை மருத்துவர் கவனத்துக்குக்  கொண்டுபோங்க. சிலர் விஷப்பூச்சியால் கடிபட நேரலாம்; காட்டுப் பகுதியிலோ, வீட்டுத் தோட்டத்திலோ புழங்கும்போது கவனமா இருங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு மகிழ்ச்சி தருமுங்க. திங்கட்கிழமை சிவனை வழிபட்டு, சிவ ஸ்லோகங்கள் படிங்க;  சிரமங்கள்லாம் சிவ, சிவான்னு காணாமப் போயிடும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத் தொல்லைகள்லேர்ந்து விடுபடுவீங்க. முக்கியமா வீட்டுப் பெரியவங்க உடல்நலம் உங்க கவலையை வளர்த்தது இல்லையா, அவங்க  பூரணமா குணமாகி மனசுக்கு நிம்மதி தருவாங்க. ஏதேனும் சிகிச்சை காரணமா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவங்க சொஸ்தமாகி வீடு  திரும்புவாங்க. சிலர் கடன் உபாதைகள்லேர்ந்தும் விடுதலை பெறுவீங்க. குறைந்த வட்டிக்குக் கிடைக்கற புதுக் கடனால பழைய, அதிக வட்டிக்  கடனைப் பைசல் செய்வீங்க. தடைகள் நீங்கி, வீட்ல விசேஷங்கள் நடக்கும். வாகனம், வீடு, உத்யோக மாற்றம் வாய்ப்பு கிடைச்சா உடனே எடுத் துக்கோங்க. தொலைதூர செய்திகளால பல நன்மைகள் விளையுமுங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாம். சிலருக்கு சரும  நிறமாற்றம் ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் ஆடம்பரத்ல அதிக நாட்டம் செலுத்தாம இருங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபட்டு, துர்காஷ்டகம் படிங்க; தொல் லைகள் தொலையும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தைரியம், தன்னம்பிக்கை வளருமுங்க. சிலருக்குத் தற்காலிகப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மனம் தளர வேண்டாங்க. சாட்சிக்காரன் கால்ல  விழறதைவிட சண்டைக்காரன் கால்ல விழறது நல்லதுங்கற சூட்சுமத்தைப் புரிஞ்சுக்கோங்க. கடந்தகாலத்ல ஈடுபட்ட சில துரோக செயல்களால இப்ப  உருவான அவமானங்கள்லேர்ந்து விடுபட அந்த சூட்சுமம் கைகொடுக்குமுங்க. புது உத்யோகம், கூட்டாளிகளை விட்டுத் தனியே தொழில் அல்லது  வியாபாரம் தொடங்கறதுன்னு முயற்சிக்கலாமுங்க. நீங்க உதாசீனப்படுத்தினவங்களும் இப்ப உங்களுக்கு உதவ முன்வருவாங்க. குடும்பத்ல பிள்ளை களுக்கு ஆர்வமான துறையில அவங்களை ஈடுபடுத்துங்க; எதையும் திணிக்காதீங்க. பித்த உபாதையால மயக்கம் வரலாம். சிலருக்கு ஈரல் பாதிப்பும்  ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் பழைய சிக்கல்கள்லேர்ந்து விடுபடுவீங்க. வெள்ளிக்கிழமை விநாயகரை வழிபட்டு விநாயகர் அகவல் படிங்க. வெற்றிகள்  அணிவகுக்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பப் பெரியவங்களோட அனுசரணையாகப் போகணுமுங்க. முக்கியமா பெற்றோருடன் எந்த வாக்குவாதமும் வேண்டாம். சிலரோட தவறான  ஆலோசனையால சகோதரரிடமும் வீண் பகை ஏற்படலாமுங்க. பூர்வீக சொத்து விஷயத்ல உங்களுக்கு உரிமையானது பறிபோயிடுமோன்னு  அனாவசியமாக பயப்பட வேண்டாங்க.  குடும்பத்தின் எந்தப் பிரச்னைக்கும் மூன்றாம் மனிதர் யாருடைய உதவியையும் கோராம, நீங்களே  யோசிச்சீங்கன்னா உங்களாலேயே சரியான தீர்வைக் காணமுடியுமுங்க. நட்பு ஒரு எல்லையைத் தாண்டாதபடி பார்த்துக்கோங்க. அப்படி எல்லை  மீறினா அது வீட்டுக்குள்ளேயும் புகுந்து குழப்பத்தை உண்டாக்குமுங்க, எச்சரிக்கை. உணவுக் குழாய்ல உபத்திரவம் தெரியுதுங்க. சாத்வீகமான  உணவுகளையே எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு வரலாம். சனிக்கிழமை சிவனை வழிபட்டு சிவாஷ்டகம் சொல்லுங்க; சிவம் துணையிருக்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பாராத, தவிர்க்கமுடியாத செலவுகளால நீங்க கொஞ்சம் தடுமாறித்தான் போவீங்க. ஆனாலும் இழப்போ, நஷ்டமோ இல்லாதவகையில் அந்தச்  செலவு ஆக்கபூர்வமானதாகவே அமைவதால ஆறுதலும் கொள்ளலாமுங்க. சிலசமயம் இந்தச் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டி வந் தாலும் வரலாம். அதுக்காக பயப்பட வேண்டாங்க; விரைவாக கடனைப் பைசல் செய்துடலாம். தொழில் மேன்மை உண்டுங்க. வியாபாரம் எதிர்பார்த் ததைவிட சிறப்பாக அமையுமுங்க. உத்யோகத்ல உங்க திறமைக்கு சரியான வகையில் அங்கீகாரம் கிடைக்குமுங்க. இழுபறியாக இருந்த பூர்வீக  சொத்து விஷயம், ஒருவழியாக, சாதகமாகத் தீர்வாகுமுங்க.  ஏற்கெனவே கண்கள்ல கோளாறு இருக்கறவங்க பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு உறவினர் மத்தியிலும் வெளிவட்டாரத்லேயும் கௌரவம் கூடுமுங்க. புதன்கிழமை பெருமாளை வழிபட்டு கோவிந்த  நாமாவளி படிங்க; கோலாகலமாக வாழ்வீங்க.  

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்ப விஷயத்ல அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. குடும்ப ஒற்றுமைக் குறையலாம்ங்கறதால அதுக்கான எந்த வாய்ப்புக்கும் இடம் கொடுத் திடாதீங்க. முக்கியமா உங்க நலன்ல கவலை இருக்கறா மாதிரி நடிக்கற உறவுக்காரங்க, நண்பர்களை அடையாளம் தெரிஞ்சுகிட்டு ஒதுக்கி வெச்சுடு ங்க. இதுக்கு முக்கியமா, பிறர் குடும்ப விவகாரங்கள்ல நீங்க தலையிடாம இருக்கணுமுங்க; அந்த உரிமையில உங்க வழிக்கு வர்றவங்களை உங்க ளால தடுக்க முடியாமலும் போயிடும். ‘தான்’ங்கற அகங்காரத்தை மூட்டை கட்டி வெச்சுடுங்க. இது தொழில், வியாபாரம், உத்யோகம்னு எல்லா  இனங்களுக்கும் பொருந்துமுங்க. சிலருக்கு வயிற்றில் அமிலச் சுரப்பில் பாதிப்பு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் எந்த ஆறுதலுக்காகவும், யாரிடமும் போய் குடும்ப விஷயங்களைச் சொல்லிகிட்டிருக்க வேண்டாங்க. வியாழக்கிழமை மகான்  தரிசனம் செய்து அவர் அஷ்டோத்திரத்தைப் படிங்க. கஷ்டமெல்லாம் கரையும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சின்னச் சின்ன விளையாட்டு விஷமங்களால சில பேருடைய வெறுப்பை சம்பதிச்சுக்கறீங்கங்கற உண்மையை சில அனுபவங்களுக்குப் பிறகும் நீங்க  புரிஞ்சுக்காம இருக்கக்கூடாதுங்க. எல்லாரும் விளையாட்டை ரசிச்சாலும் விஷமத்தைப் பொறுத்துக்க மாட்டாங்க. அதனால உள்ளர்த்தம் வெச்சுப்  பேசறது, குறிப்பிட்டவங்க மேல நல்ல அபிப்ராயம் வெச்சிருக்கறவங்களைப் பத்தி அவங்ககிட்டேயே புறம் பேசறதையெல்லாம் விட்டுடுங்க. பெரிய  மனிதர்கள் அல்லது மகான்கள் சந்திப்பு மனக்குழப்பத்தை விலக்கும். வாய்க் கட்டுப்பாடு ரொம்பவும் அவசியமுங்க; இது பேச்சுக்கும் பொருந்தும்;  சாப்பாட்டுக்கும் பொருந்தும். வராதோன்னு நினைச்சுகிட்டிருந்த பணம் திரும்ப வருமுங்க. ஒவ்வாமை, அஜீர்ணக் கோளாறு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு அலங்காரப் பொருள் சேர்க்கை ஏற்படுமுங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வணங்கி, கனகதாரா ஸ்தோத்திரம்  படிங்க; மகிழ்ச்சி நிலைக்கும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழிலிடத்ல, குறிப்பா உத்யோகத்ல மேலதிகாரிங்களோட எந்த மனவருத்தமும் வெச்சுக்காதீங்க. உங்கமேல தவறே இல்லேன்னாலும் இந்த காலக ட்டத்ல அடங்கிப் போயிடறது ரொம்பவும் நல்லதுங்க. சக ஊழியர்கள்கிட்டேயும் எந்த உரசலும் வேண்டாங்க. சருமத்தில் கொப்புளங்கள், கட்டிகள்னு  வரலாமுங்க. அந்த உஷ்ணம், கோபமாக வெளிப்படாமலும் பார்த்துக்கோங்க. எந்த முடிவையும் குடும்பத்தாரைக் கலந்தாலோசிக்காம எடுக்காதீங்க.  வயசில் சின்னவங்களா இருந்தாலும் குடும்ப உறுப்பினர் சொல்ற யோசனையில பல நல்ல அம்சங்கள் இருக்கலாமுங்க; அது உங்க குடும்பத்து  எதிர்கால நன்மைகளுக்கும் வழி காட்டுமுங்க. அதனால யாரையும் அலட்சியப்படுத்தாம அன்பு பாராட்டுங்க. சிலருக்கு ரத்தத் தொற்று உபாதை  வரலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு நீண்டநாள் ஆசைப்பட்ட பொருள் கைவருமுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டு அனுமன் சாலீஸா படிங்க;  அனைத்தும் ஆனந்தமாகும்.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

watching my girlfriend cheat open my girlfriend cheated

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்