SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சூரியன் ஆதிக்கத்ல நீங்க பிறந்திருக்கீங்க தான்; அதுக்காக எப்பவுமே சூடாகத்தான் இருக்கணுமா? முக்கியமா உத்யோகஸ்தர்கள் தங்களோட  மேலதிகாரிங்ககிட்ட நிதானமாகப் பேசுங்க; எதிர்ப்பையும் இனிமையாகக் காட்டுங்க; இல்லாட்டி, நீங்க பல நன்மைகளை இழக்க வேண்டியிருக்கும்.  யார்கிட்ட பழகினாலும் தமாஷா பேசறதா நினைச்சுகிட்டு அவங்க மனசைப் புண்படுத்தாதீங்க. ஏற்கெனவே கண் உபாதை உள்ளவங்க முறையான  மருத்துவத்தை அலட்சியப்படுத்தாதீங்க - சிலருக்கு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு இருக்கு. பூர்வீக சொத்து விவகாரத்ல ஆவேசப்படாதீங்க;  நியாயமானதும் கிடைக்காம போயிடும்!

இந்தத் தேதிப் பெண்கள் கூடுமானவரை மௌன விரதம் இருக்கறது நல்லதுங்க. செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுங்க; மன ஆற்றல் அதிகரிக்கும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அப்படியா, இப்படியா; இதுவா, அதுவான்னு சந்திர ஆதிக்கத்ல பிறந்திருக்கற நீங்க குழம்பறது உங்க அடிப்படை குணாதிசயமுங்க. ஆனா,  ஏற்கெனவே உண்டான அனுபவத்திலே, சரியானதை மட்டும் தேர்வு செய்யும் பக்குவமும் உங்களுக்குள்ள வளர்ந்திருக்குமுங்க. சிலருக்கு வருமானம் குறைவதால மன வருத்தம் ஏற்படலாம்; ஆனா, இது தற்காலிகம்தான்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. உழைப்புக்கேற்ற வருவாய் நிச்சயம் உங்களுக்கு உண்டு. அரசுக்குக் கட்டவேண்டிய வரிகளை முறையாக செலுத்திடுங்க; ஒத்திப் போடாதீங்க. இதனால் அரசு பொல்லாப்பிலிருந்து தப்பிக்கலாம். அடிவயிறு, ஜீரண உறுப்புகள்ல பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மேற்கொள்ளும் தைரிய முயற்சிகள் வெற்றி பெறுமுங்க. திங்கட்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்ங்க; அற்புதங்கள் நிகழும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குருவின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கற நீங்க, இப்ப வரவுக்கு மேல செலவு வருதேன்னு வருத்தப்பட வேண்டாங்க; அந்தச் செலவுகளும் உங்களுக்குப்  பெருமை தேடித் தருமுங்க; போதுமான வருமானமும் கிட்டுமுங்க. சிலர் குடும்பத்தாரோடு தொலைதூரப் பயணம் மேற்கொள்வீங்க.  உத்யோகஸ்தர்கள், தனியே தொழில் செய்யறவங்க நிறைய ஆதாயங்களை எதிர்பார்க்கலாமுங்க. பெரிய முதலீட்டையும் செய்யலாம். மறைமுக  எதிரிகளின் சேட்டை கொஞ்சம் மன வருத்தம் தரும்; ஆனாலும் எளிதாக சமாளிச்சுடுவீங்க. உணவில் எச்சரிக்கையா இருங்க; வயிற்றை  வேதனைப்படுத்தாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்படலாம்; மற்றபடி வாழ்க்கை சீராகப் போகும். புதன்கிழமை பெருமாள்-தாயார்-அனுமன் தரிசனம் பண்ணுங்க; பெருமை பொங்க வாழ்வீங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சிலருக்கு அரசு சலுகைகள், விருதுகள் கிடைக்க வாய்ப்பு இருக்குங்க. ராகுவின் ஆதிக்கத்திலே பிறந்திருக்கறதால, இந்த வாரம் வாழ்க்கைத்  துணையின் உடல்நலம் கொஞ்சம் சங்கடம் தரும்; முறையான சிகிச்சையால சரிபண்ணிடலாம், கவலைப்படாதீங்க. அப்பப்ப மனசில் தேவையில்லாத,  இனம்புரியாத பயம் தோன்றலாம்; அதுக்கு மதிப்பு கொடுக்காதீங்க. தடைகள் நிவர்த்தியாகி சுபவிசேஷங்கள் மனம் மகிழ நடைபெறுமுங்க. வசதி  மிகுந்த புது வாகனத்துக்கு மாறுவதற்கு இது சரியான காலமுங்க. தினமும் ஏதேனும் குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை ஜபிப்பவரானால் அதைத்  தொடர்வது பெருந்துணையாக இருக்குமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சோம்பலை விரட்டி, வெற்றி அடையணுமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மேன்மை அடைவீங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


புதன் பகவான் அருளால கொடுக்கல்-வாங்கல்ல இருந்த பிரச்னையெல்லாம் நீங்கிடுமுங்க. அதேசமயம், தகுதியில்லாம ஆசையை மட்டும்  வளர்த்துக்காதீங்க. அதை அடக்கிட்டீங்கன்னா நிறைய வருமானத்துக்கு வழி பார்க்கலாமுங்க. யாரைப் பார்த்தும் பொறாமைப்பட வேண்டாங்க;  அதனால் கோபத்தையும் வளர்த்துக்காதீங்க. இந்த வாரம் சிறு கோபமும் விரும்பத்தகாத பின்விளைவு களை உருவாக்கிடுமுங்க.  உத்யோகம்,  தொழிலிடத்தில் நிதானமாக யோசிச்சு செய்யற வேலைகள் உயர்வைக் கொடுக்குமுங்க. சிலருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் வரலாம்; சிலர் ஒவ்வாமை,  ஒற்றைத் தலைவலின்னு அவதிப்படுவீங்க. உரிய மருத்துவத்தால சரி பண்ணிக்கலாம், கவலைப்படாதீங்க.

இந்த தேதிப் பெண்கள் பறப்பதைப் பிடிக்கப் போய், கையில் இருப்பதை விட்டுவிடாதீங்க. செவ்வாய்க்கிழமையில துர்க்கையை வழிபடுங்க; சீராகும் வாழ்க்கை.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சுக்கிரனின் கைங்கர்யத்தால இந்த வாரம் உங்க தைரியம், தன்னம்பிக்கை வளருமுங்க. உத்யோகத்ல தடைகள் விலகி, சலுகைகள், உயர்வுகள் கிடைக்குமுங்க. சிலருக்கு முதன்முறையாக அயல்நாட்டுப் பயணம் கைக்கூடுமுங்க. நிலம், வீடு மாதிரியான ஸ்திர சொத்து வாங்கறவங்க  அல்லது விற்கறவங்க, சம்பந்தப்பட்ட ஆவணங்கள்ல எந்த வில்லங்கமும் இல்லாம பார்த்துக்கோங்க. சூரிய உதயத்துக்கு முன் எழுந்து அன்றாட  வேலைகளை ஆரம்பிங்க; மனசில் புதுத் தெம்பு பிறக்கும், வெற்றியும் எளிதாகும். சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாம்.  

இந்தத் தேதிப் பெண்கள் தைரியமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீங்க. வெள்ளிக்கிழமை சிவன்-அம்பிகையை வணங்குங்க; அனைத்தும் நன்மையாகும்.   

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


உத்யோகஸ்தர்களுக்கு அருமையான வாய்ப்புகள் காத்திருக்குங்க. இருக்கும் வேலையிலேயே உயர் பதவி, வருமானம், சலுகைகள்னு சிலர்  அடைவீங்க. கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த வாரம், புது வேலை கிடைக்கும்; வேறு ஆதாயமிக்க வேலையும் கிடைக்கும்.  அனாவசியப் பேச்சுகளைக் குறைச்சுகிட்டு, தொழில் நுணுக்கத்தில் புது வளர்ச்சிக்கேற்ப உங்களை நீங்க தயார்படுத்திக்கணுமுங்க. சிலருக்கு எலும்பில்  அடிபட வாய்ப்பு இருக்குங்க. முதுகு எலும்பில் வலி தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. வாகனத்தை நிதானமாக செலுத்துங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு குடும்பத்திலும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் மதிப்பு கூடுமுங்க. ஞாயிற்றுக்கிழமை அனுமனை வழிபடுங்க; நலம் நிலைக்கும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சனி பகவான் இந்த வாரம் உங்களைக் கொஞ்சம் சீண்டி விடுவாருங்க. அதனால சிந்தனையிலும், பேச்சிலும் செயலிலும் நிதானம் ரொம்பவும்  அவசியமுங்க. யாரையும் எதுக்காகவும் பகைச்சுக்காதீங்க. பழைய வன்மத்தை முற்றிலுமாக மறந்திடறதுதான் நல்லதுங்க. சட்டத்துக்குப் புறம்பான  வழியை கனவில்கூட நினைக்காதீங்க. சிலர் புது முதலீட்டால் ஆதாயம் அதிகம் கிடைச்சு சந்தோஷமடைவீங்க. சிலருக்கு வெளிநாட்டு ஒப்பந்தம்  கூடுதல் வருமானத்தையும் மதிப்பையும் தருமுங்க. சிலர் நரம்பு உபாதையால் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவீங்க. ரத்தக் கொதிப்பு,  சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சாமர்த்தியமான பேச்சால் அனைவரையும் கவருவீங்க. சனிக்கிழமை நவகிரக வழிபாடு செய்யுங்க; நன்மைகள் நீடிக்கும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

செவ்வாய் ஆதிக்கத்ல பிறந்த உங்களுக்கு மறைமுக எதிரிகளால பாதிப்பு ஏற்படலாமுங்க. அதனால யாரையும் பழிவாங்க நினைக்காதீங்க. நியாயமா  கிடைக்கவேண்டியது கிடைக்கலேன்னா, ஆக்ரோஷப்படாதீங்க. தாமதமாகவே கிடைச்சாலும் அதனால லாபம் அதிகம் உண்டுங்க. வருமானத்துக்குக் குறைவிருக்காதுங்க; ஆனா, முதலீட்டை கவனமாக செய்ங்க. குறிப்பா விவசாய நிலத்ல முதலீடு செய்யறவங்க அந்த சொத்து எந்த  வில்லங்கமும் இல்லாம இருக்கான்னு பார்த்துக்கோங்க - அவசரப்படாதீங்க; யாரையும் முழுமையாக நம்பாதீங்க. சர்க்கரை நோயாளிகள் பாதத்திலே ஏதாவது வீக்கம், அடிபடுதல்னு தெரிஞ்சா உடனே மருத்துவரை சந்திச்சுடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சால எதிரிகளையும் நண்பர்களாக்கிப்பீங்க. வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க; நல்லதே நடக்கும்.

watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்