ஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20
2013-12-11@ 16:00:48

எந்த எதிர்ப்பு இருந்தாலும் இறைவனின் சித்தப்படி நடக்க வேண்டியது எதுவோ அது நடந்தே தீரும், எனவே அச்சமற்றிரு.
ஒருவன் ஆசையில்லாமல், பதறாமல், அகங்காரம் இல்லாமல் செயல்பட முடியும். தேவை, உள்ள உறுதி மாத்திரமே.
நமக்குள் இருக்கும் இருளை முதலில் வெளியேற்றினால்தான் உண்மையான தெய்வீகத்தை உணர முடியும்.
நடந்து முடிந்ததைப் பற்றியும் நடக்கப் போவது பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருப்பது வீண் முயற்சி. அது சோர்வையும் தளர்ச்சியையுமே தரும்.
நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல - எல்லா மனிதருக்குள்ளும் இயற்கையாகவே திறமையின்மை உண்டு. ஆனால், தெய்வ சக்தியில் நீ நம்பிக்கை வைத்தால் திறமையின்மை திறமையாக மாறி, கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனங்களாகி விடும்.
தவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல; இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வ சித்தத்திற்கு தன்னை முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும்.
எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் ஒன்று செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோக செயலாக ஆக்குகிறதே தவிர அந்தச் செயல் அல்ல.
தேவையான ஒன்றின்மேல் முழுக்கவனம் செலுத்து. அதைக் கலைக்கும்படியான அல்லது உன்னை வழியைவிட்டு விலக்கும்படியான எல்லாக் கருத்துகளையும் சக்திகளையும் ஒதுக்கித் தள்ளு.
ஒவ்வொரு உண்மையும் அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இதை உணர்ந்து நீ பொறுமையாக, உண்மையாக, நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
முயற்சியையும் நம்பிக்கையையும் ஒரு போதும் கைவிடாதீர்கள். நம்முடைய லட்சியத்தை நம்மால் அடைய இவை மிகவும் அவசியம்.
எதையும் வெறுக்காதே! எதற்கும் அஞ்சாதே! யாரையும் ஒதுக்காதே! உன் பணியைச் செய்.
தன் குறைகளையும் தவறான செயல்களையும் ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து விலகுவதும் அவற்றை விலக்குவதுமே முக்திக்கு
வழியாகும்.
அறிவு, ஞானம் இரண்டு சக்திகள். அவை ஒன்றோடொன்று இணைந்தவை. அந்த இரண்டும் நமக்குள் உள்ளன. மெய்ப்பொருளில் சிறிதளவு ஊடாடிப் பெறுவது அறிவு. தெய்வீகப் பார்வையில் தேடிக் கொள்வது ஞானம்.
எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்த காலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த வேதனை, எதிர்காலம் குறித்த போர்க்கனவுகள் நிறைந்துள்ளதோ, அந்த தேசம்தான்
முன்னேற்றமடையும்.
இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.
முயற்சியையும் நம்பிக்கையையும் ஒரு போதும் கைவிடாதீர்கள். நம்முடைய லட்சியத்தை அடைய இவை மிகவும் அவசியம்.
அரவிந்தராகிய நான் பத்து வருடங்களில் அடைந்திருக்கக்கூடிய ஸித்தியை ஒரே வருடத்தில் அடைந்திருக்க முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அன்னையின் ஆன்மிக சாதனையே. அன்னை இல்லையேல் இந்த ஆஸ்ரமம் இல்லை.
பிறர் துன்புறுவதைக் காணும்போது நான் வருத்தமடைகிறேன். ஆனால், எனதல்லாத ஒரு விவேகம், அந்தத் துன்பத்தால் வரவிருக்கும் நன்மையைக் காணுகிறது. அதை ஏற்றுக்கொள்கிறது.
இறைவனின் அன்பைப் பெறுவோரைக் கண்டு மகிழ்க. இறைவன் எவரை நேசிக்காததைப் போல் காட்டுகிறானோ அவரிடத்து இரக்கம் கொள்.
மனிதரை நேசி. அவருக்கு சேவை செய். ஆனால், அவர்களுடைய பாராட்டுதலுக்கு ஆசைப்படாதவாறு கவனமாயிரு.
ந.பரணிகுமார்
மேலும் செய்திகள்
பாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20
காயத்ரி தகவல்கள்:ட்வென்ட்டி 20
பிரார்த்தனை : ட்வென்ட்டி 20
கருடன் : ட்வென்ட்டி 20
முருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20
நடராஜர் தகவல்கள் : ட்வென்ட்டி 20
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!