SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம் உங்க வார்த்தைகளாலேயே உபத்திரவத்தைத் தேடிப்பீங்க. பேச்சிலே தேன் தடவிக்கோங்க. தேவையில்லாத பயம், அதனால கோபம்,  தவறுதல்னு ஏற்படுமுங்க. வீட்டு விசேஷம், வெளியிட பொது கொண்டாட்டத்ல சந்திக்கக்கூடிய நீண்ட நாள் தொடர்பில்லாத உறவையும் நட்பையும்  இனிய பேச்சால புதுப்பிச்சுக்கோங்க. இது எதிர்காலத்ல பல நன்மைகளை உருவாக்குமுங்க. படிப்பு, உத்யோகம், தொழில், வியாபாரமெல்லாம் நல் லாவே போய்க்கிட்டிருக்குங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யாரையும் புறஞ்சொல்லாம, எல்லோரிடமும் தன்மையாகப் பழகி, மதிப்பை உயர்த்திக்கோங்க. புதன்கிழமை பெருமாள் கோயில்ல, பெருமாள், தாயாரோடு அனுமனையும் மனதார வணங்குங்க; வாழ்வில் இனிமை சேரும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலருக்கு ஒவ்வாமையால சுவாசக் கோளாறு வருமுங்க. சிலருக்கு சரும நிறமாற்றமும் ஏற்படலாம். உத்யோகஸ்தர்கள் தானுண்டு, தன் வேலையுண்டுன்னு பொறுமையைக் கடைப்பிடிக்கணுமுங்க. வீண் பழியும் அவப்பெயரும் வர வாய்ப்பு இருக்குங்க. கடன் விஷயங்கள், கொடுக்கல்-வாங்கல்ல சரியான, நடுநிலையான சாட்சி இல்லாம இந்த விவகாரங்கள்ல இறங்காதீங்க. சிலருக்குக் கடன் பெரிய தொல்லையாகலாம். கடன் வாங்கினவங்ககிட்ட வாக்குவாதம் பண்ணாதீங்க. அதனால அனாவசிய பகைதான் உருவாகும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை உடனே செய்ங்க; இது ரொம்பவும் முக்கியம். யாருக்கும் உத்தரவாதக் கையெழுத்துப் போடாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் செலவைக் கட்டுப்படுத்தணுமுங்க. லட்சுமி நரசிம்மர்-அனுமனை வழிபடுங்க; அனுமன் சாலீஸா சொல்லுங்க; அல்லல்கள் அகலும்.  

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நீங்க புத்திசாலிதான், தந்திரக்காரர்தான்; ஆனால், அந்த ஆணவத்தை ஏன் மனைவியிடம் காட்டறீங்க? ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அவங்க  மேல கோபப்படறதும் அவமானப்படுத்தறதும் எதுக்காக? வீட்டிலே உங்களுக்குக் கிடைக்கற நிம்மதிதான் வெளியேயும் கிடைக்கும். அதனால தன்மையாக, மென்மையாக குடும்பத்தாருடன் பழகுங்க. உத்யோகத்ல வீணாகப் பொறாமைப்படாதீங்க; ஆக்ரோஷப்படாதீங்க. உங்களுக்கான அங்கீகாரம் விரைவில் கிட்டும்; அவசரப்படாதீங்க. தேவையில்லாம விரக்தியை வளர்த்துக்காதீங்க. எளிதான உடற்பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ளுங்க. ஒருநாள் பயிற்சி செய்துட்டு ஒன்பது நாள் ஓய்வெடுக்காதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கிடைத்தவரைக்கும் சந்தோஷப்பட்டுக்கோங்க; இல்லாட்டி, கிடைத்ததும் கைவிட்டுப் போயிடலாம். வியாழக்கிழமையில  மகான் ராகவேந்திரரை தரிசனம் செய்து அன்னதானம் அளியுங்க; மேன்மை பெருகும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அரசு அங்கீகாரம், கௌரவம், விருது என்று படைப்பாளிகள்ல சிலர் பெருமையடைவீங்க. சோம்பலை முற்றிலுமாக அகற்றிவிட்டு சுறுசுறுப்பாக செய ல்பட்டீங்கன்னா லட்சுமி கடாட்சம் தாராளமாகப் பரவுமுங்க. சிலருக்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு இருக்குங்க.
உத்யோகஸ்தர்கள் உடன் வேலை செய்யறவங்களை தாழ்ச்சியாக நினைக்காதீங்க; புறஞ்சொல்லாதீங்க. அதனால உங்களுக்குதான் பாதிப்பு வரும்!
சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும். சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள் பாதிக்கப்படலாம். சர்க்கரை நோய் இருக்கறவங்க முறைவைத்துப் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தங்களைப் பத்தி உயர்வாக நினைச்சுக்கறதையும், பேசறதையும் விட்டீங்கன்னா நட்பும், உறவும் வலுப்படுமுங்க. செவ்வாய்க் கிழமையில துர்க்கையை தரிசனம் செய்து அன்னதானமும் செய்ங்க. துன்பமெல்லாம் தொலைந்து போகும்.


5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரியின் அன்பும் ஆதரவும் கிடைப்பதால, புது உயரத்துக்குப் போவீங்க. இதைப் பிறர் பொறாமை கொண்டு, வக்கிரமாக  கேலி செய்தால், பொருட்படுத்தாதீங்க. மனசுக்குள் இருந்த மன அயர்ச்சி விலகிடும்; நிம்மதி கிட்டும். தடைகள் நீங்கி சுப விசேஷங்கள் வீட்டில் மங்களகரமாக நடந்தேறுமுங்க. சட்ட ரீதியாக விவாக ரத்து பெற்றவங்க மறுமணத்துக்கு முயற்சிக்கலாம் - வெற்றியடைவீங்க; புதுவாழ்க்கை பல நன்மைகளைத் தருமுங்க. சிலருக்கு திடீர் பொருள் சேர்க்கை ஆனந்தம் தரும். சிலர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுவீங்க. சிலருக்குக் கழிவுப் பகுதி தொந்தரவு அதிகமாகலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் சுப நிகழ்ச்சிகளால சந்தோஷமடைவீங்க. வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுங்க; ஆனந்தம் நிலைக்கும்.  

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொலைதூரச் செய்திகள் நன்மை கொண்டு வரும். சிலருக்கு பெரிய மனிதர் சந்திப்பு புதிய நல்வாய்ப்புகளைத் தரும். விஐபி தொடர்பு கிடைத்த  உற்சாகத்ல யார்கிட்டேயும் பெருமை பேசாதீங்க. தன்னம்பிக்கை அதிகரிச்சு, மன அழுத்தத்திலேர்ந்து விடுபடுவீங்க. அலுவலக, தொழில், படிப்பு  ரீதியாக குடும்பத்தைவிட்டுப் பிரிஞ்சவங்க அப்படிப் பிரிந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற, மீண்டும் குடும்பத்ல சந்தோஷமா சேருவீங்க. சிலருக்கு வாய் உறுப்புகளில் உபாதை ஏற்படலாமுங்க. சிலருக்கு உணவுக்குழாய்ல பிரச்னை வரும். கடன் தொல்லை தீர்ந்துவிடும். பிள்ளைகள்கிட்ட அன்யோன்யமாக நடந்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சுமுகமான குடும்ப சூழ்நிலையால் மன நிம்மதி பெறுவீங்க. செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுங்க; சிறப்புகள் கூடும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல பெற்றோர் மற்றும் பெரியவங்க உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. அவங்களுக்கு வேண்டியதை செய்துகொடுத்து, ஆசிகளைப் பெறணுமுங்க. அது உங்க வாரிசுகளுக்கும் நன்மை தருமுங்க. மனசில் தைரியமும் தன்னம்பிக்கையும் பொங்குமுங்க. பூர்வீக சொத்து வந்து  சேரும். தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் நடந்தேறுமுங்க. கால்நடை, விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கறவங்க அபிவிருத்தி காண்பீங்க. சிலருக்கு,  கூடா நட்பின் விளைவாக அரசாங்க விரோதம் ஏற்படலாம். போனில்கூட ஜாக்கிரதையா பேசுங்க.  உத்யோகத்ல சிலருக்கு விடுபட்ட பதவி உயர்வு  கிடைக்குமுங்க. ரத்த தொற்று, ரத்தக் கொதிப்புன்னு சிலர் அவதிப்படலாம்.

இந்தத் தேதிப் பெண்களின் நீண்ட நாளைய கனவு நிறைவேறுமுங்க. சனிக்கிழமை பெருமாள்-தாயாரை வழிபடுங்க; பெருவாழ்வு வாழ்வீங்க.
 
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள், சக ஊழியர்களை அனுசரிச்சுப் போய், உயர்வுகளுக்கு உங்களைத் தகுதியானவராக ஆக்கிக்கோங்க. குடும்பத்ல பிள்ளைகளோட உடல்நலம், மனநலம், படிப்பு, நட்பு வகைகள்ல கவனம் செலுத்துங்க. அவங்ககிட்ட பக்குவமாகப் பேசி திசை திருப்பப் பாருங்க. இதுக்குக் குடும்பப் பெரியவங்க, உங்கக் குடும்பத்ல அக்கறை இருக்கற வெளி வட்டார அன்பர்களோட உதவியையும் யோசனையையும் கேட்டுக்கலாமுங்க. எதிரிகள் பலம் அதிகமா இருக்கறதால விளையாட்டான கேலிப் பேச்சும் உங்களுக்கு பாதகமாகத் திரும்பிடுமுங்க, எச்சரிக்கையா இருங்க.. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கூடவோ, குறையாமலோ பார்த்துக்கோங்க.

இந்தத் தேதி கர்ப்பிணிகள் கவனமா அடியெடுத்து வையுங்க; எதிர்ப்புகளை பொறுமையோடு சமாளிங்க. திங்கட்கிழமை சிவனை வழிபடுங்க; சிறப்பான வாழ்க்கை அமையும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலர் தங்களுக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கறதா கற்பனை பண்ணிகிட்டு எந்த முகாந்திரமுமே இல்லாம சாபம் விடுவீங்க; ஆனா, அந்த சாபம்  உங்களையே வந்து சேருமுங்க, கொஞ்சம் அடக்கி வாசிங்க. பொதுவாகவே தெய்வ அருளை நம்பற நீங்க இப்படி குடும்பத்தார், பிற பழக்கத்தினர்  எல்லோரிடமும் சந்தேகம், கோபம், காழ்ப்புணர்ச்சி கொள்றதிலே அர்த்தமே இல்லீங்க. எந்த சட்ட விரோதமான முயற்சியும் எதிர்காலத்தை பாதிக்குங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. சிலருக்கு முதுகு எலும்பில் வலி உண்டாகலாம். சிலர் உணவுக் குழாய் பாதிப்பால அவதிப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ‘எல்லாம் தெரியும்’ங்கற மனப்பான்மையை விட்டு, யதார்த்த உலகுக்கு வாங்க. ஞாயிற்றுக்கிழமை லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து அன்னதானம் செய்யுங்க; புதிய வாழ்க்கை மலரும்.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்