பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
முயற்சிகளில் மட்டும் எந்தத் தொய்வும் வேண்டாங்க. அடுத்தடுத்த முயற்சிகள் பலன் கொடுக்கறதில்லையேங்கற ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் மனசிலேர்ந்து கழட்டி விட்டிடுங்க. 99 அடி கிணறு தோண்டி, விரக்தியால முயற்சியைக் கைவிட்டவனுக்கு, அதனால, அடுத்த 100வது அடியில தண்ணீர் இருந்தும் கிடைக்காத நிலைமைதாங்க. அதனால, முயற்சிகளுக்கு நஷ்டமேயில்லேங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. இந்த நிலைமை வியாபாரம், தொழில், உத்யோகம்னு எல்லா இனங்களுக்கும் பொருந்துமுங்க. விடா முயற்சிகள்தான் உங்க தகுதிக்கு நல்ல பலம்ங்க. இந்தத் தேதி இளைஞர்களுக்கு அவங்க விரும்பிய துறையிலேயே வேலை கிடைக்குமுங்க. புதிதாக சொத்து வாங்கறவங்க தாய் பத்திரத்தை சரிபார்த்துக்க வேண்டியது ரொம்பவும் அவசியமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பெற்றோர் அறிவுரைப்படி நடந்துக்கறது நல்லதுங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுங்க; மகோன்னதம் பெறுவீங்க.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
இடமாற்றம் நன்மை தருமுங்க. வீடு மாறுவது, தொழில், உத்யோகம் மாறுவதெல்லாம் எதிர்கால பலனுக்கு வழிகாட்டுமுங்க. வாடகை வீட்டிலேயே வசிக்கறவங்கன்னாலும் வேறொரு பகுதியில கொஞ்சம் வசதிக்குறைவாயிருந்தாலும் வீடு மாறிக்கலாம். பிள்ளைகளோட நடவடிக்கையை கவனிச்சு அவங்களை சரியான வழிக்குத் திருப்பப் பாருங்க. கூட்டுத் தொழில் செய்யறவங்க சூழ்நிலையை உத்தேசிச்சு நாசுக்காக கழண்டுக்கலாங்க. வியாபாரத்ல வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பொருட்களைக் கொள்முதல் செய்யறதுதான் புத்திசாலித்தனம்; இந்த முதலீடு நிச்சயம் லாபம் தரும். உத்யோகத்ல இடமாற்றல் அல்லது உத்யோகமே மாறுதல்னு வாய்ப்பு வந்தா உடனே பயன்படுத்திக்கோங்க. சரும உபாதை தெரியுதுங்க. தலைவலி, தலைமுடி உதிருதல்னு பாதிப்புகள் வரலாம்.
இந்தத் தேதிப் பெண்களின் நீண்ட நாளைய கனவு நனவாகும். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; செல்லும் இடமெலாம் சிறப்புப் பெறுவீங்க.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சுபவிசேஷங்களால ஏற்படக்கூடிய செலவுகளை சந்தோஷமா ஏற்றுக்கோங்க. ரொம்ப நாளா தொடர்பு இல்லாம இருந்த உறவுக்காரங்களும் நண்பர்களும் இந்த சமயங்கள்ல சேர்றதால பல எதிர்கால நன்மைகள் அணிவகுக்குமுங்க. மனதில் புதுத் தெம்பு வளருமுங்க. குடும்பத்துப் பெரியவங்களோட ஆசியும், அரிதான யோசனைகளும் உங்களை புது உயரத்துக்குக் கொண்டு போகுமுங்க. உத்யோக இடத்ல அனுபவம் மிகுந்த வயதான உயர் அதிகாரி அல்லது சக ஊழியரின் வழிகாட்டல் உங்களுக்குப் பல விஷயங்கள்ல பிரயோசனமாக இருக்குமுங்க. வியாபாரம், தொழில், வியாபாரத்ல வயதில் மூத்த வாடிக்கையாளரோட யோசனைகள் உங்களுக்கு உதவியா இருக்குமுங்க. பற்கள்ல ஏற்கெனவே உபாதை இருக்கறவங்க அதை உடனே கவனிங்க. சிலருக்கு ஈரல்ல பாதிப்பு வரலாம்.
இந்தத் தேதிப் பெண்கள் சிலருக்கு உத்யோக ப்ராப்தம் அமையுமுங்க. திங்கட்கிழமை சிவனை வழிபடுங்க; சீராகச் செல்லும் வாழ்க்கை.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குடும்பத்தார் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணுமுங்க. முக்கியமா வாழ்க்கைத் துணையின் யோசனைகளை எந்த ஈகோவும் பார்க்காம கேட்டுக்கோங்க; ஆரோக்கியமா விவாதம் பண்ணுங்க; அப்புறமா செயல்படுத்துங்க. உங்களைச் சார்ந்திருக்கறவங்க உங்க நன்மைக்காகவும் அதனால தங்களோட நன்மைக்காகவும்தான் பேசறாங்கங்கறதை புரிஞ்சுக்கோங்க. வெளிவட்டாரத்ல போலி கௌரவத்துக்காக பிறரை அனுசரிச்சுப் போகிற நீங்க, குடும்பத்ல ஒட்டாம இருக்கறது உங்களுக்குதான் நஷ்டமுங்க. அதேபோல வியாபாரம், தொழில், உத்யோக இடத்ல உங்களைச் சார்ந்தவங்களை விட்டுக்கொடுக்காம நடத்துங்க. அயல்நாட்ல தொழில் நடத்தறவங்களுக்கு இது யோகமான காலமுங்க. சுவாசக் கோளாறு ஏற்படலாமுங்க. சளித் தொந்தரவை அலட்சியப்படுத்தாதீங்க.
இந்தத் தேதிப் பெண்கள் அக்கம்பக்கத்தார்கிட்ட குடும்ப விஷயங்களைப் பேசாதீங்க. சனிக்கிழமை நரசிம்மரை வழிபடுங்க; நல்லதே நடக்கும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உற்சாகமாக செயல்படுவீங்க. உங்க யோசனைகள் குடும்பத்லேயும் சரி, வெளிவட்டாரப் பழக்கத்லேயும் சரி, பலருக்கும் உதவியாக இருக்குமுங்க. சிந்தனையில் வேகம் இருந்தாலும் செயலில் நிதானமாக இருக்கறது உங்க ஸ்பெஷாலிட்டி. அதை அப்படியே பழக்கப்படுத்திக்கோங்க. இந்தத் தன்மையை மேலும் வலுவடையச் செய்ய பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி செய்யலாமுங்க. தொலைதூரச் செய்தி நன்மை சுமந்து வருமுங்க. வெளிநாட்டில் இருக்கற நண்பர்கள், உறவுக்காரங்களால பல ஆதாயங்களை அடைவீங்க. உத்யோகத்ல சக ஊழியர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீங்க. பூர்வீக சொத்து விவகாரத்ல விட்டுக் கொடுத்து கூடுதல் லாபம் அடைவீங்க. பித்தக் கோளாறால் மயக்கம் உண்டாகலாம்; உணவில் கட்டுப்பாடு வையுங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் சேருமுங்க. வெள்ளிக்கிழமை விநாயகரை வழிபடுங்க; தள்ளிப் போகும் துயரமெல்லாம்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
விவசாய நிலம், வீட்டு மனை அல்லது ஏதேனும் கட்டிடம், வீடு என்று வாங்கும் எண்ணம் இருந்ததுன்னா அதை இப்ப தீவிரமா முயற்சிக்கலாமுங்க. குறைந்தபட்சமாக சிலர் கூடுதல் வசதியுள்ள பெரிய வீட்டிற்கு வாடகைக்குக் குடி போகிற வாய்ப்பு பெறுவீங்க. தெய்வ நம்பிக்கை உங்க முயற்சிக்கு உறுதுணையா இருக்குமுங்க. அதனால பாக்கி வெச்சிருக்கக்கூடிய குலதெய்வ அல்லது வேறு பிரார்த்தனைகளை இப்ப நிறைவேற்றிடுங்க. வியாபாரம், தொழில், உத்யோக இடங்கள்ல பொறுப்பான பதவியிலிருக்கறவங்க ரகசியத்தைப் பரம ரகசியமாகப் பாதுகாக்கணுமுங்க. சிலருக்கு ஏற்கெனவே இருக்கக்கூடிய ஒற்றைத் தலைவலி இம்சை தரும்; சிலருக்கு தலையில் பொடுகு, தலை, சருமத்தில் அரிப்புன்னு ஏற்படும்; சிலருக்கு முதுகெலும்பில் பிரச்னை வரலாமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் நினைச்சதெல்லாம் மனம்போல நிறைவேறுமுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்க; ஆனந்தமாக வாழ்வீங்க.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மனசிலிருந்த குழப்பம் விலகுமுங்க. புது நம்பிக்கையும் மன உறுதியும் ஏற்படுமுங்க. பழைய அனுபவப் பாடங்களால, புது முயற்சிகளில் எச்சரிக்கையுடன் கால் பதிப்பீங்க. புரிந்துகொள்ள முடியாத விஷயத்தைக் கேட்டாலோ, நிறைவேற்றத் தயங்கும் பொறுப்பு கிடைத்தாலோ பளிச்னு கோபப்பட்ட நீங்க, இனிமே நிதானமா நடந்துப்பீங்க. கோபத்தால ஆகப்போறது ஒண்ணுமில்லேங்கற உண்மை புரியறதால இனிமே எந்த இழப்பும் இருக்காதுங்க. சட்ட சிக்கல்கள், பூர்வீக சொத்து விவகாரங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே முடியுமுங்க. அமைதியான அணுகு முறையால வியாபாரம், தொழில், உத்யோகத்ல இடையூறுகள் எல்லாம் விலகி, நன்மைகள் வந்து குவியுமுங்க. சிலருக்கு காது- மூக்கு- தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாமுங்க; சிலர் ஒவ்வாமையால அவதிப்படுவீங்க.
இந்தத் தேதிப் பெண்களோட யோசனைகள் பாராட்டப்படுமுங்க. திங்கட்கிழமை விநாயகரை வழிபடுங்க; திடமாக வாழ்வீங்க.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உடல்நலத்ல அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. ஏற்கெனவே இருக்கக்கூடிய உபாதைகளை அலட்சியம் செய்யாதீங்க. சிலருக்கு இடது பக்க தேக நலம் ஒரு பிரச்னையாகலாமுங்க. சிறிய அளவிலாவது உடற்பயிற்சி அவசியமுங்க; அதைத் தவிர்க்காதீங்க. முக்கியமா ஆரோக்கியமான உணவு, அளவான தூக்கத்துக்குக் குறைவில்லாம பார்த்துகிட்டாலேயே உடல் நலம் தேறிடுமுங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல புது அறிமுகங்கள்கிட்ட எச்சரிக்கையா இருங்க. சிறு வாக்குவாதமும் பெரிய கைகலப்பில் முடியலாம். வியாபாரம், தொழில் இனத்ல மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை எதிர்பார்த்தே செயல்படணுமுங்க. உத்யோகத்ல சக ஊழியர்கள்கிட்ட அளவாகப் பேசுங்க; சாதாரணமா நீங்க செய்யற விமரிசனங்கள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்தத் தேதிப் பெண்கள் எதிலும் அவசரப்படாதீங்க - அவசரம், மறதிக்கு வழிவகுக்கும். செவ்வாய்க்கிழமை புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; ஏற்றம் உறுதி.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குடும்பத்ல பெரியவங்க மனசு கோணாம நடந்துக்கப் பாருங்க. உங்க கோணத்லேர்ந்து அவங்க சொல்றதும் செய்யறதும் தவறாகவே பட்டாலும் அவங்க கோணத்லேர்ந்தும் கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. குறிப்பா பெரியவங்க எப்பவோ ஏற்பட்ட காயத்தோட வலியை இன்னும் மறக்காம இருப்பாங்க; அது என்னவாயிருக்கும்னு யோசிச்சு, அதுக்கு மருந்து தடவ முடியுமான்னு பாருங்க. மற்றபடி குடும்பத்ல சுபவிசேஷங்கள் நிறைவாக நடந்தேறுமுங்க. நட்பு வட்டாரத்ல கொஞ்சம் சுயநலத்தை ஒதுக்கி வெச்சுட்டீங்கன்னா, நீங்க எதிர்பார்க்கற உதவிகள்லாம் கிடைக்குமுங்க. இது வியாபாரம், தொழில், உத்யோகம்னு இனங்களுக்குப் பொருந்துமுங்க. எலும்புப் பிரச்னைக்கு வாய்ப்பு இருக்குங்க - கால்சியம் குறைபாட்டால் அது ஏற்படலாம். வாகனத்தை நிதானமா ஓட்டுங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்குப் புதிய வரவு சந்தோஷம் தருமுங்க; சிலருக்கு கௌரவம் கூடும். புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; பெருமைகள் கூடும்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 20 முதல் 26 வரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி