SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்திலேயும் இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் இனிமே மனம் திருந்துவாங்க; புது புகழையும் ஏற்றத்தையும் பெறுவீங்க. அதேசமயம், உணர்ச்சிவசப்பட்டு பேசறதோ, தேவையில்லாம கோபப்படறதோ வேண்டாங்க. இனிமையான பேச்சால நன்மை பெறுங்க. உங்க எண்ணங்களெல்லாம் பூர்த்தியாகும். தொழில் மேன்மையடையும். புதுத் தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ செய்வீங்க. இதுக்கான அரசாங்க மற்றும் பிற சலுகைகள், உதவிகள் எல்லாம் எளிதாகக் கிடைக்குமுங்க. நல்ல செய்திகள் பல திக்குகள்லேர்ந்தும் வந்து சேரும். குடும்ப விஷயங்கள்லேயும் அந்நியர் தலையீட்டை அனுமதிக்காதீங்க. காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல சிறு பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களோட நீண்டநாள் கனவு நிறைவேறுமுங்க. புதன்கிழமை பெருமாளை வழிபட்டு அன்னதானம் செய்ங்க. மங்கலம் நிறையும்.
    
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பேச்சில் கவனம் வையுங்க. எந்த விஷயத்துக்கும் இரண்டு யோசனைகள் வரலாம்; ஆனா அந்த இரண்டுமே ஆக்கபூர்வமானதாக அமைய பயிற்சி எடுக்கணுமுங்க. புதிய அறிமுகங்களிடம் அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, எச்சரிக்கையா இருங்க. சொத்து வாங்குமுன் ஆவணங்களை சரிபார்த்துக்கவேண்டியது ரொம்பவும் முக்கியமுங்க. பணவரவு மகிழ்ச்சி தருமுங்க. எதிர்பாராத இடத்லேர்ந்தும் ஏற்கெனவே உங்களுக்கு வரவேண்டிய இடத்லேர்ந்தும் பணம் வந்து நிம்மதி தருமுங்க. அதேசமயம் தவிர்க்க முடியாத செலவினங்களை இந்த வரவு சமாளிக்குமுங்க. பணம் கொடுத்தல்-வாங்கலில் எந்த சிக்கலும் தெரியலீங்க. நரம்பு உபாதை தெரியுதுங்க; உரிய மருத்துவம் எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் நகைச்சுவையாகப் பேசறதாக நினைச்சுகிட்டு பிறர் மனதைப் புண்படுத்தாதீங்க. செவ்வாய்க்கிழமை, கோயில்ல அம்பாள் பூஜைக்கு முடிந்த பொருள் வாங்கித் தாங்க. மனம் உறுதிப்படும்.
 
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில், உத்யோக இடத்லேயும் நீங்க நேரடியாக எல்லாத்திலேயும் ஈடுபட்டு, உங்க தனித்தன்மையை நிரூபிக்கணுமுங்க. யாரையும் சார்ந்திருந்தாலோ அல்லது பொறுப்பை யாரிடமாவது கொடுத்தாலோ அது உங்களுக்கு தான் பாதகமா முடியும், எச்சரிக்கை. அதாவது, நீங்க சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் உங்களோட நேரடி ஈடுபாடு அவசியம் தேவைங்க. அலட்சியம் காரணமாகவோ, நேரமில்லாததாலோ, மூன்றாம் நபரை உங்க சார்பாக அனுப்பி வைக்காதீங்க. குறிப்பாக கொடுத்தல்-வாங்கலில் யாரையும் நம்பாம நீங்களே செயல்படுங்க. யாருடனாவது ஏதாவது பிரச்னை இருந்தா, கட்டப் பஞ்சாயத்துக்குப் போயிடாதீங்க; அநாவசியமா நஷ்டப்படுவீங்க. ஒவ்வாமையால பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப ஒற்றுமையை குலைக்க நினைக்கறவங்களை அடையாளம் தெரிஞ்சுகிட்டு ஒதுக்கிடுங்க. கணபதி ஹோமத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுங்க; கணபதி காப்பார்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசிலிருந்த அனாவசிய பயமெல்லாம் காணாமப் போயிடுமுங்க. உங்க நிதானமான போக்கு உங்களுக்கு பல மேன்மைகளைத் தருமுங்க; வியாபாரம், தொழில், உத்யோக வகையில, எந்த நஷ்டத்தையும் சரிசெய்யுமுங்க. செலவுகளையெல்லாம் சுலபமாக சமாளிப்பீங்க. அந்த அளவுக்கு பணவரவு உங்களை சந்தோஷப்படுத்துமுங்க. உங்க உள்மனசுக்குத் தெரிஞ்ச மறைமுக எதிரிகள் திடீர்னு உங்க மேல அன்பு பாராட்டுவாங்க. அவங்களுக்கு முற்றிலும் விரோத முகம் காட்டாம, சூழ்நிலைக்கு ஏற்ப அதை ஏற்றுக்கோங்க. குலதெய்வம் உங்களை வழிநடத்தும்ங்கறதால ஏதேனும் பிரார்த்தனை விடுபட்டிருந்தா அதை உடனே நிறைவேற்றிடுங்க. கழிவுப்பாதை, மூட்டு பகுதிகள்ல தொந்தரவு ஏற்படுமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் மனம் மகிழ நடந்தேறுமுங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபட்டு அன்னதானம் செய்ங்க; தொலைந்துபோகும் துன்பமெல்லாம்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்க வார்த்தைகளுக்கும் செயல் திட்டங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கூடி, ஜெயக்கொடி நாட்டுவீங்க. இது குடும்பம், வியாபாரம், தொழில்னு எல்லா இனங்களுக்கும் பொருந்துமுங்க. கூட்டு வணிகம் அல்லது தொழில் மேற்கொண்டிருக்கறவங்க, புது உயர்வும் புகழும் பெறுவீங்க. தைரியமா ஈடுபடற எல்லா முயற்சிகளும் வெற்றி தருமுங்க. உத்யோகத்ல ஏற்பட்டிருந்த பிரச்னைகளும் சுலபமாகத் தீர்ந்திடுமுங்க. முக்கியமாக இதுவரைக்கும் ஏதாவது குறை சொல்லி, குற்றம் கண்டுபிடித்து இடைஞ்சல் செய்துகிட்டிருந்த மேலதிகாரி உங்க பாதையிலிருந்து, விலகிடுவாருங்க. வாகனம் ஓட்டும்போது ரொம்பவும் எச்சரிக்கையா இருங்க; கவனத்தை சிதறவிடாதீங்க. ரத்தக் கொதிப்பு, ரத்தத்ல சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களோட மன விருப்பங்கள் ஈடேறும். கோயில்ல பிள்ளையார் அபிஷேகத்துக்குப் பொருள் வாங்கித் தாங்க. சிகரத்தை எட்டுவீங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பக் குழப்பங்கள்ல அந்நியர் குளிர் காயறதைக் கண்டுபிடிச்சு அவங்களை ஒதுக்கி, குடும்பத்ல அமைதியை நிலைநாட்டுவீங்க. சட்ட சிக்கல் ஏதாவது இருந்தா, அது இப்ப உங்களுக்கு சாதகமாகத் தீர்வாகுமுங்க. ஏதேனும் வழக்கு இழுபறியா இருந்தாகூட அதுவும் நீங்க சந்தோஷப்படறா மாதிரி தீர்ப்பாகுமுங்க. தொழிலிடத்திலே இருந்த மனசங்கடங்கள் எல்லாம் நிவர்த்தியாகி, உங்க திறமைக்குத் தகுந்த சிறப்புகள் உன்களை வந்து சேருமுங்க. வாகனப் பழுதை, அலட்சியப்படுத்தாம, தாமதப்படுத்தாம, உடனே சரிபண்ணிடுங்க. அடிவயிறு முதல் பாத நகம் வரை ஏதேனும் உபாதை அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. சிலருக்கு இடுப்பில் சுளுக்கு பிடிக்க வாய்ப்பிருக்கு.

இந்தத் தேதிப் பெண்களுக்கு உறவுக்காரங்க மத்தியில மதிப்பு கூடுமுங்க. வியாழக்கிழமை, கோயில்ல தட்சிணாமூர்த்தி பூஜைக்கு பூக்கள் வாங்கிக் கொடுங்க; வாழ்க்கையில் மணம் வீசும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்தத் தேதி படைப்பாளிகள், மக்கள் மனதில் நிலைக்கும்படி சாதனை புரிவீங்க. சிலருக்கு உள்ளூர் அல்லது மாநில அல்லது தேசிய அளவில் விருது கிடைக்கலாமுங்க. ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க மருத்துவர் சிபாரிசு செய்த சிகிச்சை முறைகளையோ, மருந்துகளையோ, உடற்பயிற்சிகளையோ அப்படியே தட்டாமல் மேற்கொள்ளுங்க. சிலருக்கு அஜீர்ண உபாதைகள் வரலாம். உத்யோகத்ல இருக்கறவங்க சிலர் ஒப்பந்த பணியாக வெளிநாடு போகலாம். குடும்பத்ல சந்தோஷம் நிறையுமுங்க. இது வெளியிடங்கள்லேயும் பிரதிபலிக்குமுங்க. அயல்நாட்டுத் தொடர்புகள் நன்மைகள் தருமுங்க. அங்கே வியாபாரம், தொழில் மேற்கொண்டிருக்கறவங்களுக்கு அந்தந்த நாட்டு கொள்கைகள் சாதகமாக அமையுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தம் திறமையால பிறர் கவனத்தைக் கவருவீங்க. வெள்ளிக்கிழமை பெருமாள் கோயில்ல ஏதாவது பணி மேற்கொள்ளுங்க; அள்ளி வழங்குவார் பெருமாள்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வாகனம், வீடு மாற்றும் எண்ணமிருந்தா அதை இப்ப செயல்படுத்தலாமுங்க. குடும்பத்ல பிரிந்த உறவுக்காரங்க ஒண்ணு சேருவாங்க; இதுக்கு வீட்ல நடக்கற விசேஷம் உறுதுணையா அமையுமுங்க. குடும்பத்ல குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெரியவங்க உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கணுமுங்க. உங்களுக்கு ஆயிரம்தான் வேலையிருந்தாலும் குடும்பத்தார் நலத்தை அலட்சியப்படுத்தாதீங்க. கடனேன்னு மருத்துவர்கிட்ட அனுப்பி வைக்கறது, மருந்து வாங்கிக் கொடுக்கறதுன்னு மட்டும் பொறுப்புகளைக் குறுக்கிக்காம, அவங்க மனசு சந்தோஷப்படறா மாதிரி அன்போட விசாரிங்க. இந்த விசாரிப்பு, பல ரூபாய் மதிப்புள்ள மருந்தைவிட உயர்ந்ததுங்க. கண்ணில் பட்ட உணவையெல்லாம் சாப்பிட்டு வயிற்று உபத்திரவத்தை வரவழைச்சுக்காதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அன்பால் குடும்பத்தாரை வசப்படுத்துவீங்க. கோயில்ல சிவபூஜைக்கு வில்வத் தளங்களை வாங்கிக் கொடுங்க. வெற்றிகள் குவியும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வங்கி அல்லது அரசாங்க உதவிகள் எதிர்பார்த்த படி கிடைச்சு, தொழில் மேன்மையடையுமுங்க. பணியாளர்கள் கூடுதல் விசுவாசத்தோடு வேலை செய்வாங்க. அதனால தடுமாறிகிட்டிருந்த தொழில் சீராகுமுங்க. எங்கே தவறு நடந்ததுன்னு உட்கார்ந்து யோசிச்சா முடிச்சு சரியாகத் தெரிஞ்சு, அதை அவிழ்க்கறதும் சுலபமாகிடுமுங்க; சிக்கல் இனி வராது. வியாபாரத்ல புது உத்திகளால புது வாடிக்கையாளர்களைக் கவர முடியுமுங்க. உத்யோகத்ல மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரிச்சுப் போய் ஒரு கூட்டு முயற்சியாக சாதனைகள் படைப்பீங்க. தடைபட்டிருந்த கல்வி இனிமே தடம் புரளாது. காது, மூக்கு, தொண்டைப் பகுதிகள்ல உபத்திரவம் வரலாமுங்க. சிலருக்கு உணவு செரிமானத்ல சிக்கல் வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் விரும்பியபடி மேல் படிப்பு, உத்யோகம், மற்றும் வாழ்க்கைத் துணையைப் பெறுவீங்க. புதன்கிழமை விநாயகரை வழிபட்டு, கோயிலில் ஏதேனும் தர்மம் செய்ங்க; தலை சிறந்து விளங்குவீங்க.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்