SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 20 முதல் 26 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல சந்தோஷம் பொங்குமுங்க. சின்னத் தடங்கல், குறை, ஆதங்கம் எதுவுமில்லாம சுபவிசேஷங்கள் நடந்தேறுமுங்க. அதேபோல வெளிவட்டாரப் பழக்கத்லேயும் பல நன்மைகள் விளையுமுங்க. ஏதேனும் பொது அமைப்புக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பும் வரும். தொழில், வியாபாரத்ல உங்களோட முயற்சி, உழைப்பெல்லாம் அதுக்கு சமமான பலன்களைத் தருமுங்க. உத்யோகத்ல உங்களோட சிறப்பான யோசனைகள் உங்களுக்கு மட்டுமல்லாம, சக ஊழியர்களுக்கும் நிறுவனத்துக்கும் புகழும் ஆதாயமும் பெற்றுத் தருமுங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதை தெரியுதுங்க. காது சரியாகக் கேட்கலேன்னா அலட்சியப்படுத்தாதீங்க. முழுதாகப் பழுதடையாம பார்த்துக்க வேண்டியது ரொம்ப அவசியமுங்க. சிலருக்கு சளித் தொந்தரவு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் புதிய வரவு மகிழ்ச்சி தருமுங்க. வெள்ளிக்கிழமை பெருமாள் மந்திரம் சொல்லி அவரை வழிபடுங்க; பெருமைகள் நிலைக்கும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இனிமையாகப் பேசணுமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்க, சக ஊழியர்களை நம்பி மேலதிகாரிகளை விமரிசிக்காதீங்க. நீங்க சொல்லாததையெல்லாம் சொன்னதாக கோள் மூட்டப்படுமுங்க; எச்சரிக்கையா இருங்க. வியாபாரம், தொழில்ல போட்டின்னா அது உங்க வார்த்தைகளாகத்தான் இருக்குமுங்க. குறிப்பா வியாபாரம், தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்க எல்லாம் தெரியும்ங்கற அலட்சியத்தாலேயும் அனாவசிய சந்தேகம், தேவையில்லாத கோபத்தாலயும் பெரிய நஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்குமுங்க; அதனால அமைதி, பொறுமையைக் கடைபிடிங்க. எலும்பு உபத்திரவம் தெரியுதுங்க. வயதானவங்களுக்கு எலும்புத் தேய்மானம்னா, சிலருக்கு கால்ஷியம் குறைபாடு அல்லது விபத்துன்னு ஏற்படலாம். சிலருக்கு பற்கள்ல கோளாறு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் உறவினர், நண்பர், அண்டை அயலாரிடம் கவனத்துடன் பேசுங்க. சனிக்கிழமை ஆஞ்சநேயர் மந்திரம் சொல்லி அவரை வழிபடுங்க; மனதில் உறுதி பிறக்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலர் குடும்பத்தை விட்டு விலக வேண்டிய சூழ்நிலைகளும் வரலாமுங்க. இது உத்யோகம், தொழில் அல்லது மேல்படிப்பு காரணமாகத்தான் இருக்குமுங்க; கவலைப்படாதீங்க; விரைவில் குடும்பத்தோடு இணைஞ்சுடுவீங்க. பாரம்பரிய நோய் உபாதை பெரிதாகலாமுங்க. பொதுவாகவே அந்த நோய்க்கான அறிகுறி இருக்கோ, இல்லையோ, உங்க பரம்பரையில் அப்படி ஒரு நோயால் ரத்த உறவினர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாங்கன்னு தெரிஞ்சா, நீங்க பரிசோதனை செய்து தற்காத்துக் கொள்றது நல்லதுங்க. பெற்றோர் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. அவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுங்க. இந்தத் தேதி இளைஞர்களுக்கு பெரியவங்க ஆசியோடு அவங்க காதல் கனியுமுங்க. புதிதாகத் திருமணமானவங்க பிள்ளைப் பேறு பெறுவீங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு மன தைரியம் கூடுவதால முயற்சிகள் பலிக்குமுங்க. புதன்கிழமை பெருமாள்-தாயாரோடு ஆஞ்சநேயரையும் வழிபடுங்க; துடிப்புடன் வாழ்வீங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில்ல எச்சரிக்கையா இருங்க. உத்யோகத்ல அப்பாவியா ஒண்ணும் தெரியாதவராக இருக்கறது பெருமையில்லீங்க; எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு, தெரியாதவர் மாதிரி இருக்கறதுதான் வெற்றி தரும். உடல்ல இடது பக்க சின்ன உபாதையை அலட்சியப்படுத்தாதீங்க. அது வெறும் வாயுக் கோளாறாகவே இருந்தாலும் நீங்க ஐம்பதைக் கடந்தவங்களா இருந்தா, அது வாயுக் கோளாறுதான்னு மருத்துவம் சொல்லட்டுமுங்க. சிலருக்கு கொழுப்பு சேர்வதால ரத்த நாள அடைப்பும் ஏற்படலாம். மறைமுக எதிரிகளின் பலம் அதிகரிச்சிருக்கறதால வியாபாரம், குடும்பத்ல இன்னும் அதிகமான சந்தோஷம் உண்டாகணும்னா நீங்க வெளிவட்டாரப் பழக்கத்ல காட்டற அக்கறையில பாதியளவாவது குடும்பத்ல காட்டுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யார்கிட்டேயும் எதையும் இரவல் வாங்காதீங்க; கொடுக்கவும் செய்யாதீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கை மந்திரம் சொல்லி வழிபடுங்க; துயரங்கள் விலகும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்காலத்துக்காகத் திட்டமிடவேண்டியது இப்ப ரொம்பவும் அவசியமுங்க. முக்கியமா சேமிப்பிலே கூடுதல் கவனம் செலுத்துங்க. உங்க திறமைகள் பளிச்சிடுமுங்க. உங்களை கேலி செய்த உறவுக்காரங்க, நண்பர்கள் மனசு மாறுவாங்க; உங்களைப் புரிஞ்சுகிட்டு சினேகிதமாவாங்க. தோள், கழுத்து, முதுகு எலும்பிலே பிரச்னை தெரியுதுங்க. நடக்கறதுக்காகவே கடவுள் கொடுத்த கால்களை சும்மாவானும் உட்கார்ந்தே அவமானப்படுத்தாதீங்க. ரொம்ப நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யறவங்க, கொஞ்ச நேரத்துக்கு ஒருதரம் சும்மாவானும் நடந்துட்டு வாங்க. சிலருக்கு நீடித்த கண் உழைப்பால பார்வைக் கோளாறும் உண்டாகலாம். சொந்த வீடு அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய இன்னொரு வாடகை வீட்டுக்குக் குடி போவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கேளிக்கைகள்ல அதிக ஆர்வம் காட்டாதீங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரர் மந்திரம் சொல்லி வழிபடுங்க; அற்புதங்கள் நிகழும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கழுத்தில் சின்னதாக சுளுக்கு ஏற்பட்டாலும் அதை என்னன்னு கவனிங்க. வெறும் களிம்பால சரியாகலாம் அல்லது அது நரம்பு பிரச்னையாகவும் இருக்கலாம் - மருத்துவர் சொல்றதைக் கேளுங்க. சிலருக்குக் கழிவுப்பாதையில் சிக்கல் வருமுங்க. உணவுப் பழக்கத்தில் கவனமா இருங்க. சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க. சிலருக்கு திடீர்னு மனக்கவலை, சோர்வு, இனம்புரியாத குழப்பம், எதுவுமே உங்களுக்கு எதிராகுமோங்கற பயம் உருவாகலாம். எந்த விளைவையும் தைரியமாக சந்திக்கப் பாருங்க. இதுக்கு மனசை திடப்படுத்தணுமுங்க. பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி மேற்கொண்டு உறுதியோடு பிரச்னைகளை எதிர்கொள்ளுங்க. இது குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம், வியாபாரம், தொழில், உத்யோகம்னு எல்லா இனங்களுக்கும்
பொருந்துமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யாருக்கும் யோசனை சொல்லி வம்பில் மாட்டிக்காதீங்க. திங்கட்கிழமை சிவபெருமானை மந்திரம் சொல்லி வழிபடுங்க; சிக்கலெல்லாம் சீராகும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. உங்க யோசனைகளும் திட்டங்களும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுமுங்க. இது குடும்பத்ல மட்டுமல்லாமல், உத்யோகம், தொழில், வியாபாரம் மற்றும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் அமையுமுங்க. அதேசமயம் பிள்ளைகளோட உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. அவங்களோட எதுக்காகவும் வாக்குவாதம் பண்ணாதீங்க. அவங்க வாகனத்தை எச்சரிக்கையாக ஓட்டும்படி மென்மையாக அறிவுறுத்துங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க. சிலர் கூடுதல் வசதி கொண்ட புது வாடகை வீட்டுக்குப் போவீங்க; சிலர் சொந்தமாகவே வீடு அல்லது ஃப்ளாட் வாங்குவீங்க. கீழ்முதுகு எலும்புப் பகுதியில சிலருக்கு உபாதை ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு அவங்க மேற்கொள்ளும் வேலைகள் எல்லாம் பெருமை தரும்படி நிறைவேறுமுங்க. வெள்ளிக்கிழமை புற்றுள்ள அம்மன் கோயிலுக்குப் போய் வழிபடுங்க; பாராட்டுகள் குவியும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பூர்வீக சொத்து விஷயத்ல நிதானமாக ஈடுபடுங்க. உங்க தரப்பு வாதத்தை அல்லது உரிமைகளை முன்வைக்கும் போது வார்த்தைகள்ல கடுமை இல்லாம பார்த்துக்கோங்க. ரத்தத்ல தொற்றுக் கிருமிகள் பரவும் பிரச்னை வரலாமுங்க. ஏதேனும் அடிபட்டா உடனே முதல் சிகிச்சை எடுத்துக்கோங்க. அப்படி எடுத்துக்கும்போது எச்சரிக்கையா இருங்க. இந்த முறையில சுத்தக் குறைவால கிருமிகள் அந்தக் காயத்துக்குள்ள புகுந்துக்க வாய்ப்பு இருக்குங்க. வியாபாரம், தொழில், உத்யோகத்ல எந்த சிக்கலும் தெரியலீங்க. புதுப்புது யோசனைகளால நீங்க புது பரிமாணத்துக்குப் போவீங்க. திடமாக சிந்திச்சு, தைரியமாக இறங்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி தருமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு நீண்ட நாள் கனவு நனவாகுமுங்க. கர்ப்பிணிப் பெண்கள் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு வெச்சுக்கோங்க. செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வணங்குங்க; விருப்பமெல்லாம் ஈடேறும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்ப உறவுகளோட சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிக்கோங்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. எதுக்காகவும் குரலை எழுப்பி, சச்சரவுகளை வளர்க்காதீங்க. பசிக்குதேன்னு கண்ட பொருட்களையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுக்காதீங்க. இப்படி சாப்பிடறதால வயிற்றில் அமிலம் முறையில்லாம சுரந்து அஜீர்ணம் தவிர, வேறு கிளை உபாதைகளையும் உருவாக்குமுங்க. செலவுகளையும் கட்டுப்படுத்தணுமுங்க. வரவுக்கு மீறிய ஆடம்பரச் செலவுகள் கடனை வளர்க்கும், எச்சரிக்கையா இருங்க. கொடுக்கல்-வாங்கல்ல மூணாம் நபரை நம்பாம நீங்களே நேரடியாக ஈடுபடுங்க.

இந்தத் தேதிப்பெண்களுக்கு உடனிருப்போரே எதிரியாகலாம்; அதனால எல்லார்கிட்டேயும் சுமுகமாகப் பழகுங்க. சனிக்கிழமை நரசிம்மரை வழிபடுங்க; சங்கடம் எதுவும் நெருங்காமல் அவர் காப்பார்.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்