SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 13 முதல் 19 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல இருக்கறவங்க அவங்கவங்க எண்ணப்படி உயர்வுகளைப் பெறுவீங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க தனியே வந்து தொழில் மேற்கொண்டால் மேன்மையடைலாமுங்க. உங்க வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்குமுங்க. குடும்பத்லேயும் சரி, தொழிலிடத்திலேயும் சரி, வெளிவட்டாரப் பழக்கத்லேயும் சரி, உங்க யோசனையை மிச்சவங்க கேட்டுப்பாங்க. பொதுவாகவே உங்க குரல்ல கம்பீரமும் வசீகரமும் கூடுமுங்க. உங்களை எந்த காரணத்துக்காகவாவது பிடிக்காம இருந்தவங்ககூட, இந்த காலகட்டத்ல, உங்க சொல்லை விரும்பிக் கேட்பாங்க. வீட்டுமனை, விவசாய மனையில் முதலீடு செய்யலாமுங்க. தொண்டை, உணவுக் குழாய்ல பாதிப்பு வரலாமுங்க; உணவுப் பழக்கத்ல எச்சரிக்கையா இருங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு கௌரவம், மரியாதை கூடுமுங்க. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; ஏழை மாணவர்களுக்கு முடிந்த உதவி செய்ங்க. இன்னும் ஏற்றம் பெறுவீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல இருக்கறவங்க சக ஊழியர்கள் கிட்டேயும் அதிகாரிகள்கிட்டேயும் ஏட்டிக்குப் போட்டியா விவாதம் பண்ணாதீங்க. பழைய காழ்ப்புணர்ச்சிகள்லாம் இப்ப விஸ்வரூபம் எடுக்குமுங்க. உணர்ச்சிவசப்படறது உங்களோட பொதுவான இயல்புங்க. ஆனா, இந்த வாரம், முடிந்தவரை அமைதி காக்க வேண்டியது அவசியமுங்க. குடும்பத்திலோ, தொழிலிடத்திலோ, வெளிவட்டாரப் பழக்கத்திலோ வீண் வாக்குவாதம் வேண்டாங்க. தினமும் பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி மேற்கொண்டு, உள்ளத்தையும் உடலையும் சலனமில்லாம வெச்சுக்க முயற்சி பண்ணுங்க. ஏற்கெனவே கண் உபாதை இருக்கறவங்க கண்டிப்பாக மருத்துவரைப் பார்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும்; கர்ப்பப்பை கோளாறு ஏற்படலாம். ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்க; பார்வையிழந்த ஏழைக்கு உதவுங்க. வாழ்வில் புத்தொளி பிறக்கும்.
 
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வீடு மாறும் எண்ணம் இருந்தா அதை உடனே செயல்படுத்துங்க. அது எதிர்கால நன்மைகளுக்கு வழிவகுக்குமுங்க. பெற்றோர், கூடப்பிறந்தவங்களொட உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. பூர்வீகச் சொத்து விவகாரத்ல ஏதாவது பிரச்னை இருந்தா அதை அப்படியே ஆறப்போட்டிடுங்க. அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு நீங்களா ஏதாவது செய்யப்போக அது குளறுபடியாகி, வரவேண்டிய பங்கும் இல்லைன்னு ஆகிடாம பார்த்துக்கோங்க. நீங்க பொறுமையா இருந்திட்டீங்கன்னா நஷ்டப்படமாட்டீங்க. வெளிநாட்ல இருக்கற உறவுக்காரங்க, நண்பர்களாலேயும் ஆதாயம் உண்டுங்க. கழிவுப் பாதையில பிரச்னை வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறந்த வீட்டார் தூண்டுதல்ல புகுந்த வீட்ல பிரச்னைகளை உருவாக்காதீங்க; இதனால பாதிக்கப்படப்போவது நீங்கதாங்க. புதன்கிழமை விநாயகரை வழிபடுங்க; ஏழை முதியவருக்கு முடிந்த உதவி செய்ங்க. முன்னேற்றம் பெறுவீங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்ப விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கோங்க. சில குழப்பங்கள் ஏற்படலாங்கறதால எச்சரிக்கையாகவும் இருங்க. குறிப்பா உங்க சொந்தக்காரங்கள்ல, நண்பர்கள்ல வம்புக்குன்னே அலையறவங்களை கொஞ்சம் ஒதுக்கியே வையுங்க. உங்க பிரச்னைகளுக்கு இசகு பிசகா தீர்வுகளைச் சொல்லி உங்களை மேலும் குழப்புவாங்க, கவனமா இருங்க. முக்கியமா வீட்ல நடக்கற சுபவிசேஷ நாட்கள்ல இந்த ஏடாகூட சம்பவங்கள் உருவாகலாமுங்க. முதுகு தண்டில் உபத்திரவம், கழுத்தில் பிரச்னைன்னு தெரியுது. சிறு அளவிலாவது ஏதேனும் உடற்பயிற்சி செய்யணுமுங்க. பழைய வாகனத்தைத் தூக்கிப் போட்டு புதுசாக வாங்குவீங்க; இது நல்லதுக்குதான்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு யோகமான காலந்தான்னாலும், உடல்நலத்ல ஜாக்கிரதையாக இருங்க; அதோட விட்டுக் கொடுத்தா நிம்மதிங்கறதையும் புரிஞ்சுக்கோங்க. செவ்வாய்க்கிழமையில் புற்று அம்மனை வழிபடுங்க. ஏழை சுமங்கலிக்கு உதவுங்க. மங்கலம் நிலைக்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தைரியமாக ஈடுபடற எல்லா முயற்சிகளும் வெற்றி தருமுங்க. அதுவா, இதுவா, அப்படியா, இப்படியான்னு குழம்பாம எந்த பிரச்னைக்கும் உங்களால ஒரு முடிவுக்கு வர முடியுமுங்க. இதுக்கு முதல்ல உங்களுக்கு தோணற யோசனையை மட்டும் செயல்படுத்துங்க. பிறர் யோசனையாலேயோ, முதல் யோசனை நல்ல பலன் தராதுன்னு நீங்களாகக் கற்பனை பண்ணிக்கறதாலேயோ குழப்பம்தான் அதிகமாகும். இந்த உறுதியான மனநிலையால வியாபாரம், தொழில், உத்யோக இடங்கள்ல உங்க திறமை பாராட்டு களையும் கூடுதல் சலுகைகளையும் பெற்றுத் தருமுங்க. பிரிந்த தம்பதியர் இணையும் நல்ல காலம் இது. உடம்பில் இடது பக்கத்ல ஏதேனும் உபாதை தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி நற்பலன்களைப் பெறுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; உடல் ஊனமுற்ற ஏழைக்கு உதவுங்க. பல உயர்வுகள் கிட்டும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அவ்வப்போது வாழ்க்கைத் துணையோடு ஏதேனும் வாக்குவாதம் வரும்னாலும் அது பொதுவான குடும்ப நன்மைக்காகத்தான் இருக்குமுங்க. குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிலுவை பிரார்த்தனைகளை நிறைவேற்றிடுங்க. தொழில், வியாபாரமெல்லாம் உற்சாகமாக முன்னேறுமுங்க. உப தொழில் தொடங்கவோ, வியாபார விரிவாக்கத்துக்கோ தேவையான நல்ல யோசனைகள், கடன் தொகைகள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை உதவிகள் எல்லாம் தாமே வந்து சேருமுங்க. உத்யோகத்ல இருக்கற நீங்க ஏற்கனவே சொன்ன யோசனையை அப்போது தட்டிக் கழிச்சோ, நிராகரிக்கவோ செய்த மேலதிகாரிகள், இப்ப அப்படியே ஏற்றுப்பாங்க. நரம்பு உபாதை தெரியுதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்பத்தாரோடு அன்யோன்யமாகப் பழகி மதிப்பு பெறுங்க. வெள்ளிக்கிழமை பார்வதி தேவியை வழிபடுங்க; கோயில் அன்னதானத்ல பங்கு பெறுங்க. அற்புதங்கள் நிகழும்.


7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில், உத்யோக இடங்கள்ல அவதி அவதியா ஏழெட்டு வேலைகளை செய்து ஒண்ணுமே நிறைவேறாம போறதைவிட, நிதானமா ஒண்ணொண்ணா எடுத்துகிட்டு எல்லாத்திலேயும் வெற்றி பெறுங்க. நிதானப் போக்கு வெற்றிக்கான கால நேரத்தை அதிகப்படுத்தினாலும், அந்த வெற்றி நிலையானதாகத்தான் இருக்குமுங்க. படபடன்னு பேசறதும், கால்ல வெந்நீர் கொட்டினாற்போல பரபரப்பாக இயங்கறதும் ஏமாற்றத்தைதான் தருமுங்க. ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ங்கற இறுமாப்பையும் ஒதுக்கி வெச்சீங்கன்னா உங்களுக்கு உபயோகமான தகவல்களும் ஆதாயங்களும் கிடைக்குமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பெற்றோர் அறிவுரையைக் கேட்டு நடந்துக்கறது நல்லதுங்க; கூடா நட்பால் குடும்பத்துக்கும் உங்களுக்கும் பெரிய அபவாதத்தைத் தேடிக்காதீங்க. வெள்ளிக்கிழமை பிள்ளையாரை வழிபடுங்க; கணபதி ஹோமத்ல பங்கு பெறுங்க. நிதானம் பிறக்கும்; நல்லது நடக்கும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில்ல பெரிய முதலீடு எதையும் செய்ய வேண்டாங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க பாகஸ்தர்களோட அனாவசியமா வாக்குவாதம் பண்ணாதீங்க. இந்த வாரம் பண விஷயத்ல எச்சரிக்கையா இருக்கணுமுங்க. எந்த நிர்ப்பந்தம் இருந்தாலும் பழைய கடனை அடைக்கப் புதுக் கடன் வாங்காம இருக்கப் பாருங்க. அதேபோல கைமாத்து விஷயத்லேயும் எச்சரிக்கையா இருங்க. நீங்க கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ, நம்பிக்கைக்குரிய யாரையாவது சாட்சியாக வெச்சுக்கறது நல்லதுங்க. ரத்தத்ல கொழுப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துக்கோங்க. உடம்பிலிருந்து வியர்வை வருமாறு செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் ரொம்பவும் அவசியமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை, அயலாரிடம் கவனமாகப் பேசுங்க. திங்கட்கிழமை சிவனை வழிபடுங்க; தினக்கூலி தொழிலாளர்களுக்கு முடிந்த உதவி செய்ங்க. மனம் ஒருநிலைப்படும்; மேன்மைகள் வந்து செரும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காதுங்க. உத்யோகத்ல உங்க திறமை ஆதாயம் பெறுமுங்க. வேலை தேடறவங்களுக்கு அவங்க தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்குமுங்க. வியாபாரம், தொழில் அமைப்புகள்லாம் அனுகூலமான போக்கிலேயே காணப்படுதுங்க. அரசாங்க சலுகைகள், அனுமதி, அங்கீகாரம் எல்லாமே கிடைக்கும். புதிதாக நிலம் வாங்கியோ அல்லது வாடகைக்கு இடம் பார்த்தோ வியாபாரத்தையும் தொழிலையும் விஸ்தரிப்பீங்க. விசுவாசமான வேலைக்காரர்களும் பணியாளர்களும் அமைவாங்க. போட்டிகள் இருந்தாலும் அதெல்லாம் உங்களுக்கு பெரிய சவாலாக இருக்காதுங்க. வெளிநாட்ல வியாபாரம், தொழில் நடத்தறவங்க கூடுதல் மேன்மை பெறுவீங்க. வயிற்றில் கொஞ்சம் உபாதை தெரியுதுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் புதிய வரவு சந்தோஷம் தரும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோயிலில் தாயாரை வழிபடுங்க; ஏழை முதியவர்களுக்கு உதவுங்க. நன்மைகள் நிரந்தரமாகத் தங்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்