SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடராஜர் தகவல்கள் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

திருக்குற்றாலம் சித்திரசபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும், மதுரை வெள்ளிசபையிலும், சிதம்பரம் கனகசபையிலும், திருவாலங்காட்டில் ரத் னசபையிலும் நடராஜப் பெருமான் திருநடனம் புரிகிறார்.

நடராஜரின் பிரம்ம தாண்டவத்தை திருமுருகன்பூண்டியிலும், ஊர்த்வ தாண்டவத்தை அவிநாசியிலும், சுந்தர தாண்டவத்தை மதுரையி லும், அஜபா தாண்டவத்தை திருவாரூரிலும், ஆனந்த தாண்டவத்தை தில்லையிலும் தரிசிக்கலாம்.

திருவிற்கோலம் எனும் தர்ப்பைக் காட்டிலும், திருப்போரூர் எனும் மூங்கிற் காட்டிலும், திருவெவ்வூர் எனும் ஈக்காட்டிலும், திருவெண்பாக்கம் எனும்  இலந்தைக் காட்டிலும், திருவாலங்காடு எனும் ஆலங்காட்டிலும் ஆடும் பரம்பொருள், நடராஜர்.

திருநெல்வேலியில் காளிகா தாண்டவம் (படைத்தல்), திருப்பத்தூரில் கவுரி தாண்டவம் (காத்தல்), குற்றாலத்தில் திரிபுர தாண்டவம் (மறைத்தல்),  திருவாலங்காட்டில் ஊர்த்வ தாண்டவம் (அருளல்), நள்ளிரவில் சங்கார தாண்டவம் (அழித்தல்) தில்லையில் ஆனந்த தாண்டவம் எனும் ஐந்தொழில்க ளையும் புரியும் வடிவில் நடராஜர் விளங்குகிறார்.

சித்திரை திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி வளர்பிறை சதுர்தசி மாலை சந்தி, புரட்டாசி வளர்பிறை அர்த்த ஜாமம், மார்கழி திருவாதிரை உஷத்காலம், மாசி வளர்பிறை காலை சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.

சிதம்பரம் கருவறையின் வலதுபுறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப்பெருமான், ஸ்படிகலிங்கம் என மூன்று வடிவங்களில் நடராஜர் அருள்கிறார்.

சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை.

உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை.

ஊர்த்வதாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. இது கொடிமரத்தின் தென்புறம் உள்ளது, நிருந்தசபை எனப்படுகிறது.

ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்குமிடம் ஆயிரம்கால் மண்டபம். இது ராஜசபை.

புஜங்கலலிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார், ஊர்த்வ தாண்டவர்,  ஆனந்த தாண்டவர்  ஆகிய நவ தாண்டவ சிற்பங்களை தஞ்சையிலுள்ள திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம்.

ஒரே கல்லால் வடிக்கப்பட்ட நடராஜரின் அற்புத திருவுருவம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயன்மாருக்காக நடராஜர் தன் தில்லைத் திருநடனத்தை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிக் காட்டியதால் பேரூர் நடராஜர், குட கத் தில்லை அம்பலவாணன் எனப்படுகிறார்.

அருணகிரிநாதருக்காக ஆறுமுகன் நடராஜ தாண்டவத்தை ஆடிக்காட்டியதை நினைவுகூர திருச்செந்தூர் ஏழாம் நாள் பெருவிழாவில் ஷண்முகர்  சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜ திருக்கோல தரிசனம் தருகிறார்.  

தேவர்களின் பகல் பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை  செய்வதே ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது.

மதுரையில் நடராஜர் கால்மாறி திருநடனம் புரிவதை பரஞ்ஜோதி முனிவர், திருவிளையாடற் புராணத்தில் 25ம் படலமாக விவரிக்கிறார்.

நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயிலில் ஐந்து படிகள் அமைந்துள்ளன.

தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற் றவை.

நெல்லை ஆழ்வார்குறிச்சி கோயிலில் உள்ள ஒரே கல்லினாலான நடராஜரின் சிலையை தட்டினால் வெண்கல ஓசை எழுகிறது.

ஆனித்திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்