பிறந்த தேதி பலன்கள் : ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உத்யோகத்ல உங்க திறமைகள், முயற்சிகள் பாராட்டப்படுமுங்க. வியாபாரம், தொழில்லயும் தொட்டது துலங்குமுங்க. ஏதேனும் அசையா சொத்து வாங்கறீங்கன்னா. சம்பந்தப்பட்ட ஆவணங்களை அதிலே நிபுணத்துவம் பெற்றவங்ககிட்ட காட்டி, சரிபார்த்து, அவங்க ஆலோசனைப்படி செய்ங்க. பெற்றோர் உடல்நலத்ல இந்த வாரம் அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. பெற்றோர்னு இல்லாம, வீட்ல இருக்கற பெரியவங்க யார்கிட்டேயும் எந்த சின்ன வாக்குவாதமும் வெச்சுக்காதீங்க. நீங்க அடங்கிப் போயிட்டீங்கன்னா, தங்களோட நியாயமற்ற வாதம் குறித்து அவங்களே வருத்தப்பட்டு, உங்ககிட்ட சுமுகமாகப் பழகுவாங்க. உஷ்ண நோய்கள் ஏற்படலாமுங்க; இளநீர், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான இயற்கை உணவுகளை அதிகமா எடுத்துக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் வெளிவட்டாரத்ல மதிப்பு கூடப் பெறுவீங்க. வெள்ளிக்கிழமை பள்ளிகொண்ட பெருமாளை வணங்குங்க; பெருமை கூடும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பொதுவாகவே மனசிலே இருந்த இனம்புரியாத பயம் தீருமுங்க. தைரியமும் தன்னம்பிக்கையும் கூடி, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பீங்க. உத்யோகஸ்தர்களுக்கு மிகவும் ஏற்றமான வாரமுங்க. உங்க யோசனைகளும் திட்டங்களும் சக ஊழியர்களையும் மேலதிகாரிகளையும் வசீகரிக்குமுங்க. அலுவலகத்ல நீங்க சம்பந்தப்படாத துறையின் பிரச்னைக்கும் உங்களால சரியான தீர்வைக் காட்ட முடியுமுங்க. இது, உங்க மதிப்பை மேலும் உயர்த்துமுங்க. வளர்ப்புப் பிராணிங்ககிட்ட எச்சரிக்கையா இருங்க. அதனால கடிபடலாம். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை உடனே முடிச்சுடுங்க; அதனால வியாபாரம், தொழில்ல மற்றும் பிற எல்லா தடைகளும் நீங்கிடும். உணவுக் குழாய்ல பாதிப்பு வரலாமுங்க.
இந்தத் தேதிப் பெண்களோட பாசமான நடவடிக்கையால பிரிந்த குடும்பமும் சேருமுங்க. திங்கட்கிழமை சிவனை வணங்குங்க; சிறப்புகள் தேடி வரும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வெளிநாட்டிலிருந்து வரும் செய்திகள் பல ஆதாயங்களைத் தருமுங்க. இந்தத் தேதி இளைஞர்கள் வெளிநாடு போகும் வாய்ப்புப் பெறுவீங்க - அது மேல்படிப்பு, உத்யோகம் அல்லது தொழில் காரணமாக இருக்கலாம். வேற்று மொழியினரால் நன்மைகள் உண்டுங்க. அதேசமயம், யார் என்ன ஆசை காட்டினாலும் சட்டப்புறம்பான விஷயங்கள்ல கொஞ்சமும் ஆர்வம் காட்டாதீங்க. வயிற்று உபத்திரவம், நீங்க இந்த வாரம் கவனிக்க வேண்டிய பிரதான பிரச்னைங்க. இதுக்கு முக்கிய காரணம், மிஞ்சிப் போகுதே, வீணாகப் போகுதேன்னு பழைய உணவுகளை எடுத்துக்கறதுதாங்க. அதோட வெளியில சாப்பிடற வழக்கம் இருக்கறவங்க உணவுச் சாலையையும் உணவையும் தேர்ந்தெடுத்துதான் சாப்பிடணுமுங்க. ஏன்னா, உணவே நஞ்சாகக்கூடிய காலமுங்க இது.
இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப விஷயத்தை அக்கம் பக்கத்தாரிடம் சொல்லாதீங்க. புதன்கிழமை பெருமாளை வணங்குங்க; பெருமகிழ்ச்சி கூடுமுங்க.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அடிக்கடி குடும்பத்தாரோடோ, தொழில், உத்யோக நிமித்தமாகவோ பயணம் மேற்கொள்வீங்க. குழப்ப நிலை மாறுமுங்க. எடுத்த முயற்சி, செய்த காரியம் சரியா, இல்லையான்னு தீர்மானிக்க முடியாத தடுமாற்றம் விலகுமுங்க. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. அதனால எந்த பிரச்னைக்கும் முதல்ல தோணற யோசனையையே தீர்வாக வெச்சுக்கோங்க. பிறர் தாமே முன்வந்து சொல்ற ஆலோசனைகளை சுத்தமாக நிராகரிச்சுடுங்க. இஷ்டப்பட்ட தெய்வத்தை சரணடைந்து உங்க திட்டங்களை சமர்ப்பித்து செயலாற்றுங்க; வெற்றி உங்க பக்கம்தான். அதேபோல மகான் தரிசனமும் அனுகூலம் தருமுங்க. சரியான குருகிட்ட முறையாக யோகா, தியானம் பயிலுங்க. மன உறுதி மேலும் வலுப்பெறும். முதுகு எலும்பு, சருமத்தில், உபாதை தெரியுதுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பிரச்னை தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வணங்குங்க; துர்பலன்கள் தூர ஓடும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வாகனத்தை ஜாக்கிரதையாக செலுத்துங்க. இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்திடுங்க. ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க மருத்துவப் பரிசோதனை செய்துக்கோங்க. வயிற்றில் அமில ஏற்றத் தாழ்வால அஜீர்ணக் கோளாறும் வரும். குடும்பம், உத்யோக இடத்ல ரொம்பவும் பொறுமையாக இருக்கணுமுங்க. உங்களை சீண்டிப் பார்க்கறவங்க கிட்டேயிருந்து விலகியே இருங்க. யார் எப்படி கேலி பண்ணினாலும் அது உங்களையில்லேங்கறா மாதிரி இருந்திடுங்க. அது கஷ்டம்தான்; ஆனாலும் முயற்சிக்கணுமுங்க. பின்விளைவுகளை யோசிச்சு இப்படி நடந்துக்கோங்க. மனதை ஒருமுகப்படுத்த பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி மேற்கொள்ளுங்க. சூரிய உதயத்துக்கு முன்னால எழுந்திருந்து அன்றன்றைய வேலைகளைத் திட்டமிட்டு, நிதானமாக ஆரம்பிங்க.
இந்தத் தேதிப் பெண்கள் சமயோசித புத்தியால ஆதாயம் பெறுவீங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குங்க; அச்சம் தவிர்த்து வாழ்வீங்க.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வீடு மாற்றக்கூடிய வாய்ப்பு வந்தால், உடனே மாறிடுங்க. இதனால இப்போதைய அண்டை வீட்டார் தொல்லைகள்லேர்ந்து விடுபடலாம். ஆனா அப்படி வீடு மாறுவது கூடுதல் வசதி உள்ள வேறொரு வாடகை வீட்டுக்கோ அல்லது சொந்த வீட்டுக்கோ இருக்கலாம். உத்யோகத்ல இடமாற்ற வாய்ப்பு வந்தாலும் உடனே ஏற்றுக்கோங்க. இது ஏதோ பழிவாங்கற நடவடிக்கையா உங்களுக்குத் தோன்றினாலும், வேறு இடம் போறதும் நல்லதுதாங்க. முகத்துக்கு முன்னால சிரிச்சுகிட்டு, முதுகுக்குப் பின்னால புறம் பேசறவங்களைக் கொஞ்ச நாளைக்குப் பார்க்காம இருக்கறதும் உங்களுக்கு நல்லதுங்க. எப்படியிருந்தாலும், மாற்றங்கள் உங்க நல்லதுக்குதான்; ஏற்றுக்கோங்க. ரத்தத் தொற்று அல்லது பாரம்பரிய நோய் விஷயத்ல எச்சரிக்கையா இருங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டுங்க. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்குங்க; வெற்றிகள் அணிவகுக்கும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ஒவ்வாமை, உபத்ரவம் தருமுங்க. சரும நிறமாற்றம் ஏற்படலாம். இது பூச்சிக்கடியாலும் உண்டாகலாம். அதோடு, வெயில் சூட்டைத் தணிக்க குளிர்ப்
பதன உணவுகளை அதிகமாக உட்கொள்ளாதீங்க; அப்புறம் அவஸ்தைதான். கோபப்படறதால எந்த லாபமும் இல்லேங்கறதை பல அனுபவங்கள் உணர்த்தியும் சிலர் சரியா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நியாயமான விஷயத்துக்காகவே இருந்தாலும் கோபத்ல வெளியே வர்ற வார்த்தைகள் பலரோட மனசை பலவிதங்கள்ல தாக்கறதை இப்பவாவது கட்டாயம் உணரணுமுங்க. இதை குடும்பம், உத்யோகம், வியாபாரம், தொழில்னு எல்லா இனங்கள்லேயும் கடைப்பிடியுங்க. முக்கியமா கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க பாகஸ்தர்களோட அனாவசியமா சண்டை போடாதீங்க.
இந்தத் தேதி கர்ப்பிணிகள் நிதானமா நடங்க; அயலாரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்க. செவ்வாய்க்கிழமை பிள்ளையாரை வணங்குங்க; மனம் பக்குவப்படும்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வாகன மாற்றம் உண்டுங்க. தொழில், வியாபாரத்ல விரிவாக்கத்துக்கோ, மாற்றத்துக்கோ வாய்ப்பு இருக்குங்க. பெரிய அளவிலே புது முதலீடு செய்யறபோது குடும்பத்தாரை கலந்தாலோசிச்சுக்கோங்க. அரசாங்க வேலைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு அது கைகூடுமுங்க. விட்டுப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டை முடிச்சிட்டீங்கன்னா நன்மைகள் அணிவகுக்குமுங்க. ரத்த பந்த உறவில் அனுசரிச்சுப் போயிடுங்க. பூர்வீக சொத்து விஷயத்ல குடும்பத்துப் பெரியவங்களோட யோசனைக்கு எதிர்வாதம் பண்ணாதீங்க. உங்களுடையது உங்களுக்குக் கிடைக்குமுங்க. அதனால விட்டுக் கொடுத்து பொறுமையா இருந்தா, உங்களுக்குரியதை யாராலும் மறுக்க முடியாதுங்க. அதேபோல கொடுக்கல்-வாங்கல் விஷயங்கள்ல மூன்றாம் நபரை மத்தியஸ்தத்துக்காக அணுகாதீங்க. நீங்களே பேசி முடிவுக்கு வாங்க.
இந்தத் தேதிப் பெண்களின் முக்கிய விருப்பம் நிறைவேறுமுங்க. சனிக்கிழமை சிவனை வணங்குங்க; சங்கடம் எதுவும் சேராது.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ஏற்கெனவே கண் நரம்புகள்ல பாதிப்பு இருக்கறவங்க எடுத்துகிட்டிருக்கற சிகிச்சையைத் தொடருங்க. பொதுவாகவே தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருந்திடறது ரொம்ப உத்தமமுங்க. பொறுமை கடலினும் பெரிதுங்கற வாசகம், பொறுமையால் கடலளவுக்கு கிடைக்கக்கூடிய நற்பலன்களைத்தான் சொல்லுதுங்க. அனுபவத்தால அது உண்மைங்கறதைப் புரிஞ்சுப்பீங்க. நீங்க யாரையாவது பழி வாங்கவோ, அல்லது ‘உங்க பொறுமை பலவீன’த்தை நையாண்டி செய்யறவங்களை தடாலடியா எதிர்க்கவோ நினைச்சீங்கன்னா, இப்போதைக்கு எதிரிகள் பலம் கூடியிருக்கறதால, உங்களுக்குதான் நஷ்டமுங்க. அதனால
நிதானமாகவே இருங்க. குடும்பத்தார் யோசனைப்படி நடக்க வேண்டியதும் இல்லீங்க. நீங்களே அமைதியா யோசிச்சு முடிவு பண்ணுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பேச்சில் கவனமாக இருங்க. ஞாயிற்றுக்கிழமை லட்சுமி நரசிம்மரை வணங்குங்க; நலமெலாம் சேரும்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!