லட்சுமி நரசிம்மரை வழிப்பட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்
2023-02-03@ 17:33:02

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு நீரை வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் உள்ளது. சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உழவுக்கும், நெசவுக்கும் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது நங்கவள்ளி. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நரசிம்மர் சுயம்புவாக காட்சியளிக்கும் வைணவத் தலங்களில் இதுவும் ஒன்று.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிராம வடிவகல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள்.
சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள்வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது என கூறினாள்.
ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் லட்சுமிவடிவ கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்து பெரிய கோயிலாக கட்டினார்கள் என்கிறது தலவரலாறு.
கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலக்கட்டத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோயிலில் பல்வேறு கடவுள்களுக்கு தனித்தனியே கோயில்கள் உள்ளன. தீராத நோய்கள், தோல் சம்பந்தமான நோய்கள், கடன் பிரச்னை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயில் சோமேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பது மேலும் சிறப்பு. சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான திருத்தலமாகவும் இது திகழ்கிறது.
மேலும் செய்திகள்
செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிவாள் மகாலட்சுமி..!!
வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கும் யுகாதி பண்டிகை..!!
தீராத கஷ்டங்களை தீர்க்கும் கடவுள் வழிபாடு..!!
இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்
பித்ரு தோஷங்களை நீக்கும் தத்தாத்ரேயர் வழிபாடு..!!
தரித்திரத்தை விலக்கி குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்க செய்வாள் அன்னை சாமுண்டீஸ்வரி..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி