திருப்பணிக்காக காத்திருக்கும் திருத்தலம்
2023-02-02@ 12:41:44

மாவடி ஈஸ்வரன்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே - பழஞ்சூர் கிராமத்தில், விஜயநகர பேரரசரால், “அருள்மிகு ஸ்ரீமாவடி ஈஸ்வரன் கோயில் கட்டப்பட்டது. இதற்கான சான்றுகளை இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்போது இந்த கோயில் மிகவும் சிதில மடைந்து காணப்படுகிறது.
1946 - ஆம் ஆண்டில், காஞ்சிப் பெரியவர், இந்த ஊருக்கு வந்த போது, இந்த கிராமத்தின் அமைப்பு நன்றாக இருக்கிறது என்றும், மேற்கு நோக்கிய சிவன் கோயிலும், கிழக்கு நோக்கிய குளமும், அதன் கீழ் மயானமும் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாக கூறினார். மேலும், இங்கு இரண்டு பெரிய மகான்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாகவும் கூறினார்.
அதன் பிறகு, சிதிலமடைந்த ஜீவசமாதிகளுக்கு பிருந்தாவனம் அமைக்கவும், சிவாலயத்தை புதுப்பிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சில காரணங்களால் நிறைவேறவில்லை. பல வருடங்கள் கழித்து தற்போது கிராம மக்கள் ஒன்று கூடி, ஆர்வத்துடன் இந்தக் கோயிலை புதுப்பிக்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளனர்.
கைங்கரியம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் கீழேயுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 9443233502, 9448452788 இரு மகான்களின் ஜீவசமாதிகளில் ஒன்று மட்டும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலைச் சுற்றி கடக்கால் எடுத்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. சிவன் மற்றும் அம்மாள் ஆலயத்தை கற்களால் எழுப்பி, அதன்மேல் கோபுரத்தை அமைக்க உள்ளனர். இதற்கான வேலைகளும் நடந்து வருகின்றது. .
தொகுப்பு: ரங்கராஜன்
மேலும் செய்திகள்
ஸ்ரீராம தரிசனம்!
வளங்களை அள்ளித் தரும் வசந்த நவராத்திரி
பனை உறை தெய்வம்
செழிப்பான வாழ்வருளும் செல்லியம்மன்
ராஜயோகம் தரும் கும்பகோணம் ராமஸ்வாமி
துயர் நீக்கி அருள் சேர்க்கும் லலிதாம்பிகை அம்மன்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி