சப்த விடங்கத் தலங்கள்
2023-01-19@ 16:45:15

நன்றி குங்குமம் ஆன்மிகம்
சப்த விடங்கத் தலங்களாக திருவாரூர், திருநள்ளாறு, திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு முதலிய தலங்கள் நடராஜப் பெருமானுக்குரிய தலங்களாகும். ஒவ்வொரு தலத்திலும் அவரது தனித்தன்மையான நடன முறைகள் உள்ளன.
திருநள்ளாறு : இத்தலத்தில் இறைவன் ஆடுவது பித்து கொண்டவன் தலையைச் சுற்றி ஆடுவது போல் ஆடும் நடனம். இவ்வகையான நடனத்திற்கு ‘உன்மத்த நடனம்’ என்று பெயர்.
திருவாரூர்: மேலும் கீழும் ஏறி இறங்கியும், முன்னும் பின்னும் சென்று வந்தும் அடியவர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்த இறைவன் இங்கே ஆடுவது ‘‘அஜபா நடனம்’’.
திருமறைக்காடு: அன்னப்பறவை நடப்பது போன்று ஆடும் நடனம். இத்தலத்தில் ஈசன் ஆடிய இந்த நடனத்திற்கு ‘‘ஹம்சபாத நடனம்’’ என்று பெயர்.
திருக்காறாயில் : சேவற்கோழி நடப்பது போன்று ஆடும் நடனம். இதற்கு ‘குக்குட நடனம் என்று பெயர். இறைவனின் இவ்வகையான நடனம் இத்தலத்தில் நடந்தேறியது.
திருநாகைக் காரோணம்: கடலில் தோன்றும் அலைகளின் அசைவை நிகர்த்த நடனம் இங்கே ஈசன் ஆடுவது. இதற்கு பாராவர தரங்க நடனம் என்று பெயர்.
திருவாய்மூர்: நீர் நிறைந்த குளத்தில் ஒற்றைத் தாளில் நிற்கும் தாமரை மலர் காற்றால் தள்ளுண்டு மெல்லென ஆடுவது போன்ற நடனம் ‘கமல நடனம்’ இங்கே பரமன் ஆடுவது இதுவே.
திருக்கோளிலி: மலர்களுக்குள் வண்டு குடைந்து சென்று ஆடுவது போன்ற நடனம். இவ்வகையான நடனம். விருங்க நடனம். இது இக்கோயிலில் நடராஜப் பெருமானால் நிகழ்த்தப்பட்டது.
தொகுப்பு - ஆர்.ஜெயலட்சுமி
Tags:
சப்த விடங்கத் தலங்கள்மேலும் செய்திகள்
தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!
அஷ்ட பைரவத் தலங்கள்
தோஷ நிவர்த்தி தலங்கள்
ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள்
நந்தி வடிவ தொந்தியுடன் துவாரபாலகர்கள்
சிவஸ்தலம் அறிவோம்!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!