SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘‘மனிதர் வழியே மகத்துவம் நிறைந்த செய்தி’’

2023-01-18@ 12:00:18

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி மேய்ப்பர்கள் வான தூதர் வழியாகத் தாங்கள் கேட்டவற்றை பெத்லகேமிற்கு நேரில் சென்று கண்டார்கள். வானதூதர் வழி கேட்டவற்றை மரியாள் யோசேப்பிடம் சொன்னார்கள்.  பதிலுக்கு அவர்கள் தங்களிடம் சொன்னதையும் கேட்டபின் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் வழி நெடுகப் பாட்டாகப் பாடிச் சொல்லி சென்றார்கள். இவர்கள் பாடிச்சென்றது தான் முதல் கிறிஸ்மஸ் பாடல் பவனி என்று கூட கூறலாம்.

மேய்ப்பர்கள் அக்காலத்தில் சொந்தத்திற்கும் கூலிக்கும் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டனர். இவர்கள் ஊருக்கு வெளியே தங்கி மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இரவில் காட்டு விலங்குகள் மற்றும் திருடர்கள் அச்சத்தினால் இரவு நேரங்களைக் கால்தூக்கம் அரைத்தூக்கமாகக் கழிப்பார்கள். குளிர் காலங்களில் இரவில் கம்பளிப் போர்வை கொண்டும் தீ மூட்டியும் குளிரைப் போக்கிக் கொள்வர்.

மேய்ப்பர்கள் அதிகம் படிக்காதவர்கள். இவர்கள் படித்தவர்களை விட திறன்படைத்தவர்கள் என்பது பெரும்பாலும் நமது கவனத்திற்கு வருவதில்லை. இன்றும் இவர்கள் பேசும் மொழியை, எழுப்பும் ஒலிகளை விலங்குகள் புரிந்து கொண்டு செயல்படுகின்றன. கீழ்படியவும் செய்கின்றன. அன்பு காட்டவும் செய்கின்றன. இத்தகைய அதீதத் திறமை படித்தவர்களுக்கு இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இயேசுவின் பிறப்பில் மேய்ப்பர்களுக்கு முக்கிய இடம் தரப்பட்டது ஏன்? அவர்கள் மேய்ப்பர்கள் என்ற காரணத்தினாலேயே சமூக இழிவை சந்தித்தார்கள் என்பது உண்மை. கடவுள் அதிகாரம், பதவி, பணம் உள்ளவர்களைப் புறக்கணித்து ஏழைகள், இழிவுபடுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுகிறார் என்பதின் வெளிப்பாடாகவே இது நடந்தது.

ஆனால் அது மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. இயேசுவின் காலத்து மேய்ப்பர்கள் ஊருக்கு வெளியே வாழ்ந்து கொண்டு ஊரைப்பற்றி சிந்தித்தவர்கள். ஊரை நேசித்தவர்கள். நாட்டு நடப்புகளை அச்சமின்றி தங்களுக்குள் விவாதித்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஊருக்குள் சென்று திரும்பும் போது நாட்டு நடப்புகள் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள்.

தங்கள் நாடு இவ்வாறு அந்நியர் கட்டுப்பாட்டிலும், கொள்ளைக்காரர் கையிலும் மக்களை தவறாக வழிநடத்தும் சமயத் தலைவர்கள் கையிலும் இருந்ததை நினைத்து வேதனை அடைந்தனர். கடவுள் வாக்களித்திருந்த மேசியா வரவேண்டும் என்றும் அவர் நிச்சயம் வருவார் என்றும் எதிர்பார்த்திருந்தனர். எனவே தான் இவ்வாறு மேசியா வருகையை உண்மையான வாஞ்சையோடு எதிர்பார்த்திருந்த மேய்ப்பர்களுக்கு இயேசு பிறப்பின் செய்தி முதலாவதாக அறிவிக்கப்பட்டது.

நாட்டில் நமக்கு எத்தனை ஏமாற்றங்கள் இருந்தாலும். மாற்றம் என்று ஒன்று உண்டு என நம்புவோம். மாற்றங்களுக்காக நம் மனதை எப்போதும் தயாராக வைத்திருப்போம். மாற்றங்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்படுகிறவர்களை அங்கீகரிப்போம் ஆதரிப்போம். கிறிஸ்து பிறப்பு நம்பிக்கை அளிக்கும், நலம் பயக்கும் மாற்றங்களை உறுதி செய்தே ஒவ்வொரு ஆண்டும் வருகிறது.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்