அறிவுடையோர் யார்?
2023-01-12@ 14:40:26

இறைத்தூதர் யூசுப் நபியின் அழகிய வரலாற்றைத் திருக்குர் ஆனின் 12-ஆம் அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கிறது. இந்த அழகிய வரலாற்றை முழுமையாக விவரித்த பிறகு, அத்தியாயத்தின் இறுதியில் இறைவன், ‘‘முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் அறிவுடையார்களுக்கு (உலில் அல்பாப்) அரிய படிப்பினை உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளான்.
இறைவன் குறிப்பிடும் அந்த ‘அறிவுடையோர்கள்’ யார் யார்? அவர்களின் தன்மை என்ன? பண்பு நலன்கள் எப்படி இருக்கும்? அவர்களுக்கான வரைவிலக்கணம் என்ன? இதற்கு விடை அடுத்த 13-ஆம் அத்தியாயத்தில் (அர்ரஅத்) உள்ளது. அறிவுடையோர்கள் (உலில்அல்பாப்) எத்தகையவர்கள் எனில்…
1. இறைவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
2. உறுதிப்படுத்திய பிறகு அந்த உடன்படிக்கைகளை முறிக்கமாட்டார்கள்.
3. எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அந்தந்த உறவு முறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள்.
4. தம் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்வார்கள்.
5. மறுமையில், கடுமையான முறையில் தம்மிடம் கணக்கு கேட்கப்படுமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பார்கள்.
6. இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்.
7. தொழுகையை நிலை நாட்டுகிறார்கள்.
8. அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவுசெய்கிறார்கள்.
9. தீமையை நன்மையைக்கொண்டு களைகிறார்கள்.
10. மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது. (குர்ஆன் 13:20-22)
இவைதாம் அறிவுடையோர்களின் பண்பு நலன்கள். இந்தப் பண்பு நலன்கள் நம்மிடம் இருக்கின்றனவா? இருந்தால் நாமும் அறிவுடையோர்கள்தாம்.
- சிராஜுல் ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
‘‘இவர்களுக்கு (இத்தகைய அறிவுடையோர்களுக்கு) நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் நுழைவார்கள்.’’ (குர்ஆன் 13:23)
Tags:
அறிவுடையோர் யார்?மேலும் செய்திகள்
நம்முடைய இயலாமையை உணர்தல்
அண்ணல் நபிகளாரின் அன்பு வெள்ளம்
கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்
புண்ணியங்களிலும் ஆண்-பெண் சமமே!
நம்பிக்கையூட்டும் இறைவாக்கு
தீயோர்க்கு அஞ்சேல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!