SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண வரமருளும் முகூர்த்த மாலை பிரசாதம்

2023-01-12@ 14:32:57

நல்லாத்தூர்

புதுச்சேரி அருகே உள்ள, நல்லாத்தூரில் ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீலட்சுமி நாராயண வரதராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஊரின் முற்காலப் பெயரால் சுவர்ணபுரி மருவி, நல்லாத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தியது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக  கருதப்படுகிறது. இங்குள்ள எம்பெருமாளை ருத்ரன், பிரம்மா, இந்திரன் ஆகியோர் சேவித்து சென்றிருப்பதாக, பிரம்மா கூறிய தியான ஸ்லோகம் ஒன்று  சொல்கிறது.

108 திவ்ய தேசங்களில், நடுநாட்டில் உள்ள திருவஹிந்திரபுரம் தேவநாத சுவாமிகளின் திருக்கோயிலுக்கு அபிமான ஸ்தலமான இந்த கோயில், தென் பெண்ணையாற்றுக்கும், சங்கராபரணி ஆற்றுக்கும் இடையே கம்பீரமாக அமைந்துள்ளது. சிங்கிரி கோயில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கிலும், பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் மேற்கிலும் அமைந்து இந்த தலத்தை மேலும் சிறப்பிக்கிறது.

கோயிலின் முன்புறமும், பக்கவாட்டிலும் அழகிய நந்தவனம் பூத்துக் குலுங்குகிறது. நுழைவாயில் சுதை வேலைப்பாடுடனும், ராஜகோபுரம் மூன்று கலசங்களுடனும் காணப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இந்த தலத்தில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். அது இந்த ஆண்டு 14.1.2023 சனிக்கிழமை போகிப் பண்டிகை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்புக்கு: வெங்கடசாமி  98941 99562.

இந்த உற்சவத்தில் முகூர்த்த மாலை பெற்றுச் செல்பவர்களுக்கு, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்றும் சொல்லப்படுகிறது. முகூர்த்த மாலை வேண்டுவோர் காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.00 முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது. மாலை ஒன்றினை வாங்கி வரவும். புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

- வெங்கடசாமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்