பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
2022-11-23@ 16:41:17

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் “திருவருணை” ஸ்ரீகிருஷ்ணா
? என்னுடைய நட்சத்திரம் மிருகசீரிஷம், நாற்பது வயதாகின்றது. இனி என் வாழ்க்கை எப்படி போகும் பயமாக உள்ளது.
- சுந்தர், மயிலாடுதுறை
பொதுவாகவே எல்லா ஜோதிடர்களும் மிருகசீரிஷ நட்சத்திரத்தை மிகச் சிறந்த நட்சத்திரம் என்பார்கள். பிரச்னைகள் வந்த வண்ணம் இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் நண்பர்கள் கூட்டத்தால் தீர்த்துக் கொள்வீர்கள். கூட்டுத் தொழில் எப்போதும் சரியாக இருக்கும். உங்களின் அடிப்படை ஜாதகம் வலுவில்லாமல் இருந்தாலும் கூட கவலைப்படாதீர்கள். நாலுபேர் மத்தியில் கௌரவத்தை உண்டு பண்ணும். செவ்வாயை சீற்றமுள்ள கிரகமாகத்தான் சொல்வது வழக்கம். ஆனால், உங்கள் ராசியாதிபதி சுக்கிரனாக வருவதால் சீற்றத்தை ஆக்க வழியில்உபயோகப்படுத்துவீர்கள். அவசரப்பட மாட்டீர்கள்.
செவ்வாயின் உணர்ச்சிக் கொந்தளிப்பை, சுக்கிரனின் ரம்மிய குணமும் கைகோர்த்துக் கொள்ளும். அது பசுமைப் புரட்சியாக வெளிப் படும். ‘‘நீ புத்திசாலிதான். ஆனா, நேரம் பார்த்து, மனுஷாள பார்த்து பேசணும்’’ என்று உங்களை சுக்கிரன் நெறிப்படுத்துவார். அடுத்து வரும் தசையான சனிதசை 41 வயதிலிருந்து 59 வரை நடைபெறும். நாலாவது தசை சனி தசையாக வரக்கூடாது என்று சொல்வதுண்டு. அதாவது உங்கள் உயிருக்கு கண்டம் என்று எவரேனும் சொன்னால் அதை நம்பி விடாதீர்கள். ஏனெனில் உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு சனி பகவான் நெருங்கிய நண்பராக இருப்பதால் சனி தசை இடமாற்றம், பொருள் இழப்புகள் மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாக இருப்பார்.
கையில் லிஸ்ட்டை வைத்துக் கொண்டு 45, 46, 50, 51 போன்ற வயதுகளில் வேண்டுவதை வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டியதிருக்கும். 43, 44 வயதுகளில் வாதம், கொழுப்புக் கட்டிகள் தோன்றும். சாதாரணமாக இருக்காமல் உடனே வைத்தியம் பார்ப்பது நல்லது. பிறந்த மண், பேசும் மொழி, சாதி சனம் என்ற சமூகப் பற்று அதிகமிருக்கும். ‘‘அவர் ரொம்ப பெரியாளு’’ என்று யாரையேனும் அடையாளம் காட்டினால் ஆரம்பத்தில் பவ்யமாக மதிப்பீர்கள். கொஞ்ச நாட்களிலேயே அவர்களைப்பற்றி ஆராய ஆரம்பித்து விடுவீர்கள். ‘‘சொல்லப்போனா எனக்கு தெரிஞ்சது கூட அவருக்கு தெரியலை’’ என்று இறுதியாக சொல்லுவீர்கள்.
அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மகம், ஹஸ்தம், மூலம், உத்திரம், உத்திராடம், திருவோணம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தோர்களால் நீங்கள் உயர்வீர்கள். உங்களைப்பற்றிய ஒரு விசாரம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஸ்டார்ட் செய்யும்போதே எங்குபோய் முடிக்கப் போகிறீர்கள் என்று கணிப்பீர்கள். எது செய்தாலும் தன்னலம் பாதிக்காது பாதுகாத்துக் கொள்வீர்கள். பக்கத்து இலைக்கு பாயசம் என்று தன் இலையை நிரப்பிக் கொள்ளும் சாமர்த்தியத்தனம் இருக்கும். உங்களை நிறைய பேர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். காசு பணம் வந்தாலும் தனக்கென்று வைத்துக் கொள்ள மாட்டீர்கள்.
பணத்தை கஷ்டப்பட்டுத்தான் சேர்க்க வேண்டியிருக்கும். இம்மாதிரி காலங்களில் குருவாயூர் சென்று வாருங்கள். துலாபாரம் கொடுங்கள். எங்கேயாவது உட்கார்ந்து புத்தகம் எழுதுவீர்கள். அதை ரிலீஸ் பண்ண முடியாமல் தவிப்பீர்கள். நிறைய ஆர்டர்கள் கைவசம் இருக்கும். ஆனால், மெட்டீரியல் வாங்க பணமிருக்காது. மிருகசீரிஷம் 2 ம் பாதத்தில் பிறந்த நீங்கள் தந்தைக்கு உபதேசம் செய்த தலமான, கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்க்கை படிப்படியாக உயரும்.
வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள்
தினகரன் ஆன்மிக மலா்
229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம்.
பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
மேலும் செய்திகள்
குழந்தை பாக்கியத்திற்கான தாந்தீரிக பரிகாரம்
பிரச்னைகள் பரிகாரங்கள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி