SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோற்றத்தால் பிறரை விரும்பச் செய்வோம்!

2022-11-21@ 15:54:16

பிறருக்குத் துன்பம் விளைவிப்பதை இஸ்லாமியத் திருநெறி எப்போதும் விரும்புவதில்லை. பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களைப் பச்சையாகச் சாப்பிட்டுவிட்டு தொழுகைக்குக்கூட போகக் கூடாது என்று அண்ணலார் தடுத்துள்ளார்கள். அந்த வாடையால் பிற சகோதரர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக. ‘‘உங்களில் சிறந்தவர் யார் என்றால், யாருடைய கைகளாலும் நாவாலும் அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்கள்தாம்’’ என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தோற்றத்திலும் கூட மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது என்பது அண்ணலார் கற்றுத்தந்த அழகிய பாடம். சிலர் வேலைப்பளு காரணமாகவோ, சோம்பல் காரணமாகவோ தலைமுடியை ஒழுங்கு செய்யாமலும் தாடியை ஒதுக்காமலும் அழுக்குத் துணியுடனும் வியர்வை நாற்றத்துடனும் இருப்பார்கள். இப்படி இருப்பதை மார்க்கம் விரும்புவதில்லை. பிறர் ஆர்வத்துடன் நெருங்கி வந்து பேசும் அளவுக்கு ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் வெறுக்கும் அளவுக்கு ஆடை அமைப்பையும் தோற்றத்தையும் அலங்கோலமாக வைத்துக் கொள்ளக்கூடாது.

நபியவர்களின் வாழ்வில் இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஒரு முறை ஒரு மனிதர் நபியவர்களைக் காண வந்தார். அழுக்கு உடை அணிந்திருந்தார். உடனே நபியவர்கள், ‘‘தமது ஆடையைத் தூய்மை செய்து கொள்ள இவருக்கு (சோப்பு போன்ற) எந்தப் பொருளும் கிடைக்க
வில்லையா?’’ என்று கேட்டு ஆடையைத் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒருமுறை இறைத்தூதரைச் சந்திக்க ஒரு மனிதர் தலைவிரி கோலமாகவும், தாடியை ஒழுங்குபடுத்தாமலும் வந்தார். அப்போது நபியவர்கள் தலை முடியையும் தாடியையும் ஒழுங்குசெய்து வருமாறு சைகையால் உணர்த்தினார்.

அந்த மனிதரும் திரும்பிச் சென்று அவ்வாறே செய்தார். பிறகு அண்ணலார் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போல் தலைவிரி கோலமாக வருவதைவிட தோற்றப் பொலிவுடன் வருவது சிறந்தது அல்லவா?’’ அதாவது, மற்றவர்களுக்கு அவலட்சணமாகத் தோன்றும் அளவுக்கு ஆண்கள் தமது தாடியைக்கூட அலங்கோலமாக வளரவிடுவது நபி வழியல்ல. மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது அவர்களின் மனங்களில் மதிப்பையும் கண்ணியத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு நம் தோற்றம் இருக்க வேண்டும் என்று இஸ்லாமியத் திருநெறி அழகாக வழிகாட்டுகிறது.

- சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத் தலங்களை மறைப்பதற்காகவும் உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கிறோம். ஆயினும் இறையச்சம் எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். (குர்ஆன் 7:26).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்