ஐயப்பன் அறிவோம்! - 3 நீ நானாக... நான் நீயாக...
2022-11-19@ 11:47:11

மாலை அணிந்தவர்கள் விரதத்துடன் பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது அவசியம். ஐயப்பன் விரதத்தின் நோக்கமும், பூஜையின் கருத்தும் அமைதியான மனநிலைக்கு நம்மை மெல்ல தயார்படுத்தும் முயற்சியாகும். ஐயப்பன் கூறிய விரதமுறையில் ஒரு மண்டலமாக 41 நாட்கள் கட்டாயம் பிரம்மச்சரிய விரதமும் கடைப்பிடித்திட வேண்டும்.
குளிர்நிறைந்த பகுதியான பம்பை ஆற்றங்கரையில் குழந்தையாக அவதரித்த மணிகண்டனுக்கு விஷ்ணு அளித்த துளசி மாலையில், பரமசிவன் அளித்த மணி (நவரத்தினம்) கோர்த்திருந்த துளசிமணி மாலையே அணிவிக்கப்பட்டிருந்தது. இதுவே முத்திரை (முதல்) மாலையாக கருதப்படுகிறது. 108 சரணகோஷ தத்துவங்களை உணர்த்தும் விதமாக 108 துளசிமணி கோர்க்கப்பட்ட மாலை அல்லது அதில் சரி பாதியான 54 மணி கோர்க்கப்பட்ட மாலை அணிய வேண்டும். துணை மாலை அவரவர் விருப்பத்திற்கேற்ப பாதுகாப்பாக அணிந்து கொள்ளலாம். கடல் மற்றும் ஆறு, அருவி உள்ளிட்ட புனித தீர்த்த தலங்களில் நீராடி விட்டு, அல்லது கோயில்களில் உள்ள புனித நீரில் தீர்த்தமாடி விட்டு மாலை அணிய வேண்டும்.
சர்வ காலமும் ஐயப்பன் நாமத்தை கூறிக்கொண்டு நமக்கு நாமே சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, பயபக்தியுடன் இருப்பதற்கு முக்கியமானது மாலையும், அடுத்தபடியாக உள்ள உடையும் ஆகும். கன்னிச்சாமி முதல் 3 வருட மணிகண்டன் சாமி வரை அனைவரும் சனி பகவானின் அம்சமாக கருதப்படும் கருப்பு நிறம் அணிவது அவசியம். 3 வருடத்திற்கு பிறகு மாலை அணியும் பக்தர்கள் கருப்பு, நீலம், காவி கலரில் உடை அணிவது சிறப்பு. ஒருவர் மாலை அணிந்தவுடன் சாமி ஐயப்பனாகவே அழைக்கப்படுகிறார்.
ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடுவதால் ‘நீ நானாக ஆகிறேன். விரதமுறையை கடைப்பிடித்து சபரிமலை வந்து செல்லும்போது, வாழ்விலும் ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றும்போது நான் நீயாக ஆகிறேன்’ என ஐயப்பனே வலியுறுத்துவதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், ஐயப்பனுக்கு ‘அன்னதான பிரபு’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.
பக்தன் முழு பிரம்மச்சாரியத்தை கடைப்பிடித்து தனது ஐம்புலன்களையும் அடக்கி, மனதை ஒருமுகப்படுத்தி, உடலை வருத்தி, ஒழுக்க நெறிமுறையுடன், சிந்தனை, செயல் எல்லா நேரமும் ஐயப்பனை நோக்கி இருக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் இருப்பதால், ஒரு மண்டல விரதம் என்ற முறையில் ‘அன்னதானம்’ முக்கிய இடம் பெற்றுள்ளது.
அந்த விரத முறையை கன்னிச்சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏழை எளிய மக்கள், அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்பதற்காக கூட்டு பிரார்த்தனை, பஜனை மற்றும் மண்டல விரதம் இருக்கும் கன்னிச்சாமிகள் தங்கள் வீட்டில் ஒரு வேளை, தங்களது வசதிக்கேற்றவாறு, முடிந்தளவு அன்னதானம் வழங்க வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
(நாளையும் தரிசிப்போம்...)
மேலும் செய்திகள்
ஐயப்பன் அறிவோம்! - 2 : கன்னிச்சாமி...
ஐயப்பன் அறிவோம்! - 1 குருவுக்கு மரியாதை
சபரிமலை ஐயப்பன்
அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்
ஆகம நெறியில் ஐயப்பன்
அரவணைப் பாயசம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!