SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! - 2 : கன்னிச்சாமி...

2022-11-18@ 10:44:54

கார்த்திகை முதல் நாள் நேற்று பிறந்து விட்டது. இனி தை 1ம் தேதி மகரஜோதி திருநாள் முடியும் வரை காணும் இடமெல்லாம், கேட்கும் ஒலியெல்லாம் ‘ஐயப்ப சரண கோஷம்’ தான். இந்த மண்டல, மகரஜோதி காலம் என்பது ஐயப்ப பக்தர்களுக்கு சிறந்த பொற்காலம். ஒரு மண்டல சீசன் அல்ல. அனைத்து காலங்களிலும் ஐயனை நினைத்து ஒழுக்க நெறியை பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்கே ஐயப்பன் விரத நெறிமுறைகள் உள்ளன.

 கோயில் என்பது இறை சக்தியை உள்வாங்கிக் கொள்வதற்கு அமைக்கப்பட்ட ஓர் இடம் என்றாலும், இதில் பல கோயில்கள் உள்ளன. ஆனால் சபரிமலைக்கு மட்டும் ஒரு மகத்துவமான தனித்துவம் உண்டு. இதனால் தான் சபரிமலை யாத்திரை என்பதற்கு அகஸ்தியர் முனிவர் சில தனித்துவமான நெறிமுறைகளை வழிவகுத்துள்ளார். யாத்திரையின் மகத்துவம், கோயிலின் மகத்துவம், ஐயப்பன் யார் என்பது பல வருடம் சபரிமலைக்கு சென்று வந்த சாமிக்கும் சில சந்தேகங்கள் வரும். இதனால் தான் ஒரு குருசாமியின் துணையோடு செல்கிறோம். இதனால் ஐயப்பனின் மகத்துவம், தத்துவங்களை நன்கு அறிந்து செல்லும்போது புனித யாத்திரையின் நோக்கம் நிறைவேறுகிறது.

சபரிமலை போகிறோம், வருகிறோம் என்பது விஷயம் இல்லை. சாமி (ஐயப்பன்) நம்மை பார்த்தாரா என்பது தான் மிக, மிக முக்கியம். சாமியை தரிசனம் செய்வது வேறு.  சாமியை உணர்தல் என்பது வேறு. எனவே  அந்த உணர்வை தரக்கூடிய யாத்திரைக்கு தயாராக இருக்கிறோம் என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு உணர துவங்கிவிட்டால் மகர நட்சத்திர நன்னாளில் அந்த பொன்னம்பல மேட்டில் தெரியக்கூடிய ஜோதி, நம்முள் ஒளிர தொடங்கும். எனவே சாமியை உண்மையாக உணர்ந்தால் மோட்சம் (அனைத்திலிருந்தும் விடுதலை) கிட்டும் என அகஸ்தியர் உணர்த்தியுள்ளார். அந்த வகையில் மாலை அணிதல், விரதமிருந்து இருமுடி கட்டுதல், ஐயப்பனின் அவதார கோயில்களுக்கு சென்று கொண்டாடி தரிசனம் செய்தல் முக்கியமானது.

  ஐயப்பன் தன்னை வளர்த்த பந்தள மன்னர் ராஜசேகரபாண்டியனுக்கு, தான் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கும்போது, தன்னை காண வருவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறையில் கூறியவற்றில் முதலாவதும், முக்கியமானதும் மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடி கட்டி வருதல் ஆகும். அந்த வகையில் சபரிமலைக்கு முதன்முதலாக மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்பவர் ‘கன்னிச்சாமி’ என அழைக்கப்படுகிறார். 18 வருடம் ஆகி குருசாமியாக ஆகும் வரை கன்னிசாமியாக தன்னை நினைத்து செல்ல வேண்டும். 18 முறை சபரிமலை சென்றவர்கள் தன்னை ஒரு குருசாமியாக நினைக்காமல், தன்னையும் ஒரு கன்னிச்சாமியாக உணர்ந்து நடக்க வேண்டும்,

(நாளையும் தரிசிப்போம்...)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்