SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளி விடுதலை பெறுதல்!

2022-11-15@ 14:26:31

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இயேசு தொழுகைக் கூடத்திற்கு வந்தவுடன் அங்கு மாற்றுத்திறனாளி ஒருவரைக் கண்டார். தொழுகைக் கூடங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இயேசுவின் கவனம் இது போன்ற நோயுற்றோர், விளிம்புநிலை மக்கள், மற்றும் புறந்தள்ளப்பட்டோர் மீது இருந்து வந்தது. தொழுகைக் கூடத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரைக் கண்ட இயேசு, அவரிடம் ‘‘எழுந்து நடுவே நில்லும்’’ என்று கூறினார். இவ்வாறு கூறி விளிம்புநிலை மனிதரை மய்யத்திற்கு வர அழைத்தார். அக்காலத்தில் ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் ஒருவர் இருந்தால், அது பாவத்தின் விளைவு என்று கருதப்பட்டது.

எனவே அவரைப் பிறர் இழிவாகவும், பரிதாபத்திற்குரியவராகவும் பார்த்தனர். இதன் காரணமாக இப்படிப்பட்டவர்கள் தொழுகைக்கூடத்திற்கு வெளியிலோ அல்லது ஒரு ஓரத்திலோ அமர்ந்திருப்பர். இயேசு, அந்த மாற்றுத்திறனாளியை மய்யத்திற்கு அழைத்து நிமிர்ந்து நிற்க ஊக்கமளிக்கிறார். இயேசுவின் குணமாக்கும் நிகழ்ச்சிகள் எப்போதும் ஒரு கற்பித்தலோடு தொடர்பு கொண்டிருக்கும். அதன்மூலம் அவர் மக்களுக்குக் கடவுள் பற்றியும், சமயச் சட்டங்கள் மற்றும் மரபுகள் பற்றியும் சரியான புரிதலை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிகழ்ச்சியிலும், மாற்றுத்திறனாளியை குணமாக்கும் முன், ஓய்வுநாள் பற்றிய கேள்வியை எழுப்பினார். ‘‘ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை? என்று கேட்டார். அதற்கு இயேசுவின் மீது குற்றம் சுமத்தக் காத்திருந்தவர்கள் எந்தப் பதிலையும்
அளிக்காமல் அமைதிகாத்தனர்.

அவர்களின் நேர்மையற்ற தன்மை கண்ட இயேசு, அவர்கள் மீது தமது கோபப்பார்வையை வீசினார். அவர்களின் கடின உள்ளத்திற்காக மனம் வருந்தினார். இன்று கூட நமது சமூகத்தில் நன்கு படித்த சமூகத்தினர், எது உண்மை என்று தெரிந்தும் அதைக் கூற முன்வருவதில்லை. உண்மையைப் பிறர் எடுத்தியம்பினாலும் அதை ஆதரித்துப் பேசாமல் அமைதி காக்கின்றனர். ஏனென்றால் உண்மையை ஒத்துக்கொண்டால், பொய்களால் கட்டப்பட்டிருக்கும் அவர்களின் சாம்ராஜ்யம் நொறுங்கிவிடும் என்பதுதான்.

இந்த நிகழ்ச்சியில், இயேசு மாற்றுத்திறனாளியை தொடவில்லை. மாறாக அவரைப் பார்த்து கையை நீட்டு என்றார். இயேசு, அவரிடமிருந்த முடக்கப்பட்ட ஆற்றலை உணரவும் அதை அவர் வெளிப்படுத்தவும் உந்துதல் அளித்தார். மாற்றுத்திறனாளி, இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார். இயேசு, தமது திருப்பணியில் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்டிருந்த மக்களுக்கு, சமூகத் தகுதியையும், தன்னம்பிக்கையையும், சுயசார்பையும், ஆற்றலையும் அளித்து அவர்கள் விடுதலை வாழ்வை அடைவதற்கு உதவினார்.

மாற்றுத்திறனாளி, நலமடைந்த நிகழ்ச்சி பரிசேயருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை ஒழிக்க சூழ்ச்சி செய்தனர். இதற்குக் காரணம் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது புரட்சிகரமான பார்வையும், ஓய்வுநாள் குறித்த அவரது புரட்சிகரமான அணுகுமுறையும்தான்.

இயேசுவின் செயல்களால் தூய்மை தீட்டு, உயர்வு தாழ்வு அமைப்பில் கட்டப்பட்டிருந்த பரிசேயர் மற்றும் சமயத் தலைவர்களின் சாம்ராஜ்யம் நொறுங்கத் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் செயல் இறையரசு எனும் சமத்துவ சமுதாயம் வளர்ந்துவருவதை உறுதிப்படுத்தியது எனலாம்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்