அழகனுக்கு ஓர் அற்புத ஆலயம்
2022-11-07@ 15:59:07

நன்றி குங்குமம் ஆன்மிகம்
சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: சுப்பிரமணியர்
ஆலயம், பெரிய கோவில் வளாகம், தஞ்சாவூர்.
காலம்: இவ்வாலய முக மண்டபத்தின் கட்டட அமைப்பு, கல்வெட்டில் காணப்படும் தகவல்கள் கொண்டு பொ.ஆ.1560 ல் செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் அதிரவீசி ஆச்சாரி என்ற சிற்பியால் எழுப்பப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு என எழுப்பப்பட்ட ஆலயங்களிலேயே கலையம்சத்திலும், கட்டுமான அழகியலிலும் முதன்மையானது எனக் குறிப்பிடத்தகுந்தது இவ்வாலயம். தஞ்சைப் பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தில் அதிசயித்து, திகட்டுமளவு மனம் நிறைந்துவிடும் ஒவ்வொரு கலை ஆர்வலருக்கும் மற்ற எந்தக் கோயில் கட்டுமானத்தையும் பார்த்து ரசிக்கையில் ஆர்வக்குறைவு ஏற்படுவது இயற்கையே.
அதிலும், பெரிய கோவில் வளாகத்தினுள்ளே வடமேற்கில் அமைந்திருக்கும் இவ்வழகிய சிற்றாலயத்தை அனுபவித்து ரசிப்போர் குறைவே! அதிஅற்புத சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில், முக மண்டபம், அர்த்த மண்டபம், இடைநாழி, கருவறை போன்ற அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ளது. இருபுறங்களிலும் உள்ள அழகிய படிக்கட்டுக்கள் ஆலயத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன.ஆறுமுகன், துர்க்கை, மஹிஷாசுரமர்த்தினி போன்ற தெய்வத் திருவுருவங்கள், எழில் மிகுந்த ‘கும்ப லதா’ அமைந்த வெளிச்சுவர் கோஷ்டத்தை அலங்கரிக்கின்றனர். குதிரை, யாழி, போர் யானை போன்றவற்றின் சிற்ப அழகும், அலங்காரங்களுடன் கூடிய பிரநாளம், அதன் கீழே அமைந்துள்ள ஒரே கல்லிலான தொட்டியின் சிற்ப நுணுக்கமும் குறிப்பிடத் தகுந்தவை.
தஞ்சை நாயக்கர்கள்
விஜயநகரப் பேரரசின் கீழ் சோழமண்டலத்தின் பெரும்பகுதியை ஆளுகை செய்தவர் செவ்வப்ப நாயக்கர் (பொ.ஆ.1532-1560). அப்பேரரசர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளின்போது, இவரின் பெரும்படையும் இணைந்து பணியாற்றியது. பின்னர் விஜயநகரப் பேரரசின் தலைக்கோட்டைப்போர் தோல்விக்குப்பின்னர், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் தனியாட்சி புரியத் தொடங்கினர்.
தஞ்சை நாயக்க மன்னர்களின் (செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர்) 1532 முதல் 1675 வரையிலான ஆட்சிக் காலத்தில் கலை, இசை, இலக்கியம் ஆகிய துறைகள் சிறப்புற்று விளங்கி யிருந்தன. சிறந்த கலை ரசிகர்களான இம்மன்னர்கள் ஏராளமான மண்டபக் கட்டுமான, புனரமைப்புப்பணி களையும், ஆற்றுப் படித்துறைகளையும், ஆலயங்களையும், இராஜகோபுரங்களையும் எழுப்பியுள்ளனர்.
தொகுப்பு: மது ஜெகதீஷ்
மேலும் செய்திகள்
திருமுருகன் அருளும் திருத்தலங்கள்
ஆழ்வார்திருநகரியின் அற்புத சிற்பங்கள்
சப்த விடங்கத் தலங்கள்
ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்
குழந்தை வரமருளும் முத்தான மூன்று ஆலயங்கள்
சூரியக் கோயில்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!