SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமதகன புராணம் இடங்கள்

2022-11-04@ 17:29:27

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கொருக்கை கோயில் தென்மேற்கில், ஒரு தோட்டத்தில் விபூதிக்குட்டை என்ற இடத்தில் மன்மதன் எரிக்கப்பட்டு சாம்பலானான். இங்கு தோண்டவெண்மையான சன்னமான விபூதி போன்ற மண் கிடைக்கிறது. சிவன் மீது காமக்கணை வீசும்படி தேவர்கள் வேண்டிக்கொண்ட இடம் தேவனூர் என்றும், அதற்கு மன்மதன் உறுதி பூண்டு கங்கணம் தரித்த இடம் கங்கணம்புதூர் என்றும் வலதுகாலை முன்னூன்றி இடது காலை வளைத்து குறிபார்த்த இடம் கால்வளைமேடு என்றும், வில்லை வளைத்த இடம் வில்லியநல்லூர் என்றும் பஞ்சபாணங்களை எய்த இடம் ஐவாணநல்லூர் என்றும் மன்மதன் எரிந்தது கண்டு அஞ்சித் தேவர்கள் சிவனை வணங்கிய இடம் சோத்தமங்கலம் என்றும் இறைவன் காமனை வென்றபின் வெற்றிக் கூத்தாடிய இடம் கூத்தன் வாழ்க்கை என்றும் அழைக்கப்படுகிறது.

அஜபா ரகசியம்


அஜபா என்பதற்கு ஜெபிக்கப்படாதது என்று பெயர். உயிரின் ஆதாரமான நிலை மூச்சுக்காற்று உள் சென்றும் வெளியே வந்து கொண்டிருப்பதுமாகிய நிகழ்வே அஜபா எனப்பட்டது. இந்த மூச்சுக்காற்று உள்ளே செல்லும் போது ஸோஹம் என்றும் வெளிவரும் போது ஹம்ஸ என்ற ஒலியுடன் நடக்கிறது. இரண்டும் சேர்ந்து ஹம்ஸஸோஹம் என்று வழங்கப்படும். இதுவே ஹம்சமந்திரம் (அ) அன்ன மந்திரம் என்பர். இந்த மூச்சுக்காற்றை யோக சாதனையால் கட்டுப்படுத்தி அதன் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி மூலாதாரத்தினைத் தொடர்ந்து உள்ள ஆறு ஆதாரங்களைக் கடந்து சகஸ்ரதள தாமரையில் உள்ள சந்திரகலா அமுதத்தைப் பெருகவைப்பதே யோகசித்த எனப்படும். இதனை அடையும் யோகக்கலையை விளக்குவதே அஜபா ரகசியம் (அ) அஜபாகல்பம் ஆகும்.

திரிபுர சம்ஹாரம் தத்துவம்

மூன்று கோட்டைபோல் உயிரைச் சூழ்ந்துள்ள ஆணவம், வினைச்செயல், மாயை ஆகிய மூன்றையும் இறைவன் உடைத்துத் தகர்த்து விட்டால், அன்பும், ஆற்றலும், அறிவும் வெளிப்பட்டு உயிர்களுக்கு இன்பத்தை அளிக்கின்றன. முப்புரம் எரித்தபின் அவர்கள் மீண்டும் அறிவு, ஆற்றல், அன்பு வடிவமாகின்றனர். சிவன், தான் குடியிருக்கும் உயிர்களாகிய ஆலயத்திற்கு அறிவையும் ஆற்றலையும் தனது வாயிற்காவலாகவும் நியமிப்பதுடன் தனது இன்ப நடனத்திற்குத் துணை நிற்க அன்பை முழவுவாசிப்பதாக அமைத்தார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே முப்புரம் எரித்தல் என்ற நிகழ்வாகும்.

வீரநடனங்களும் காஞ்சியும்


கொடுகொட்டி (கொட்டிச்சேதம்) திரிபுரம் எரிக்க ஈசன் போர்க்கோலம் பூண்டு வெற்றிக்களிப்பால் ஆடியது.

காலசம்ஹார தாண்டவம்

சிவன் திரிபுரங்கள் எரித்தபின் வெற்றிக்களிப்பால் தேர்ப்பாகனான பிரம்மனும், மற்றைய தேவர்களும் காண ஆடியது. திருக்கடவூரில் யமனை அழித்தபின் ஆடிய தாண்டவம் ‘‘காலசம்ஹார தாண்டவம்’’ என்பர்.

காஞ்சி வீரட்டகாசர்

ஊழிக் காலத்துக்கு பின்னர் உலகைப்படைத்து அந்த வெற்றிக்களிப்பால் எண்தோளும் அதிர பெருஞ்சிரிப்பு சிரித்தார். அது வீரட்டகாசம் எனப்பட்டது. அவர் மகிழ்வுடன் லிங்கத் திருமேனியாக எழுந்தருளிய ஆலயமே வீரட்டகாசர் கோயில்.சிறப்புப் பெயர்பிராகாரம் திருவையாறுகருவறை சுற்றி அமைந்த பிராகாரத்தில் மக்கள் வலம்வருவதில்லை. இதில் பூமிக்கடியில் இறைவன் ஜடாமண்டலம் விரிந்து பரவி உள்ளதால் இதை ஜடாமண்டல பிராகாரம் என்பர்.

சித்திரை பிராகாரம்

திருக்கடவூர், மதுரை, திருவிடைமருதூர், காஞ்சி கயிலாயநாதர் கருவறையைச் சுற்றி மதிலின் உள் வரிசையில் சிற்றாலயங்கள் உள்ளன.

சுவர்க்க பிராகாரம்

காஞ்சி கைலாயநாதர், தஞ்சை பெரிய கோயில் முதலிய சில கோயில்களில் கருவறை விமானத்தை தாங்கும் இரட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. சுவர்க்கும் நடுவில் அமைவது சுவர்க்க பிராகாரம். திருத்தலங்களுக்கு மாடவீதியே பிராகாரமாகும். முர்த்தி தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்குமே சிவபெருமானாக எண்ணப்படுகின்றன.

விருட்ச பிராகாரம்

காஞ்சி ஏகாம்பர் ஆலயம் மாமரம் சுற்றி தளவரிசையுடன் கூடிய பெரிய பிராகாரம் உள்ளது. இங்கு திருமணம் நடக்கும்.

காலசம்ஹாரத் தலங்கள்

திருக்கடவூர், திருச்செங்காட்டங்குடி, திருவீழிமிழலை முதலிய தலங்களில் காலசம்ஹாரர் உலாத்திருமேனிகளாக உள்ளது. காலசம்ஹார மூர்த்தியை மட்டும் நடன கோலத்திலும் மற்ற வீரட்டகாச மூர்த்திகள் நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையில் இருக்கும்.

தொகுப்பு: அருள் ஜோதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்