SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பிரம்மசாரிணி

2022-10-07@ 12:49:33

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிரம்மமாக அதாவது தவத்தின் வடிவாகத் திகழ்வதால் இவள் பிரம்ம சாரிணி. பர்வத ராஜகுமாரியாக இவள் பிறந்த போது விருத்தன் வடிவில் இவளை சந்தித்த விடைவாகனன், ‘‘பரமனே உன் பதியாவார். அதற்காக நீ தவம் புரிவாயாக’ என்று சொன்னார். மகாதேவனை மணவாளனாக அடைய தவமிருந்தாள் மகேஸ்வரி. அந்தத் தவக்கோல வடிவே இது. வியாழன் எனும் குருபகவான், இவள் பக்தர்களுக்கு அருள்வாள். நவராத்திரி நாட்களில் வியாழக்கிழமையில் இவளைப் போற்றி வணங்குவது ஞானமும் கல்வியும் அமைதியான வாழ்வும் கிட்டச் செய்யும் தபசு காமாட்சி இவள் வடிவே.

சந்திர காந்தா

முக்கண்ணனின் பத்தினியாக முக்கண்களுடன் காட்சியளிப்பவள். சந்திரகாந்தக் கல்போல், ஈரமான நெஞ்சமுடையவள். வெப்பத்தை தான் பெற்று குளிர்ச்சியைப் பொழிவது சந்திர காந்தக் கல். அதைப்போல் வினை எனும் வெப்பம் தணித்து பக்தர்களை தன் கருணை மழையில் நனையச்செய்பவள். பிறைச்சந்திரனைத் தரித்தவள். தீவினை அசுரரைத் தடுக்க பல்வேறு ஆயுதங்கள் ஏந்தியவள் அரவ கிரகமான ராகு இவளை அண்டுவோரை அச்சுறுத்தமாட்டாள். நவராத்திரி நாட்களில் செவ்வாய்க் கிழமைகளில் இந்த அம்பிகையைத் துதிப்போர். துன்பம் யாவும் நீங்கி, தடைகள் யாவும் நீங்கி வாழ்வில் செல்வர்.

கூஷ்மாண்டா

கஷ்மம்-அண்டம் எனும் இருவார்த்தைகளின் பொருளாகத் திகழ்பவள். அதாவது அண்டம் எனும் பிரபஞ்சத்தினை உருவாக்கும். கூஷ்மம் எனும் முட்டை இவளிடமிருந்தேதோன்றுகிறது. கூஷ்மாண்டம் எனும் பெயர் பூசணிக்காய்க்கும் உண்டு. தான் இருக்கும் இடத்தில் உள்ள தீவினை திருஷ்டிகளை ஈர்த்து பிறரை பாதிக்காமல் செய்வது பூசணிக்காய். இந்த அம்பிகையும் அப்படியே தன் பக்தர்களை தீயசக்திகள் அண்டாமல் காக்கிறாள். வெள்ளிக் கிரகமான சுக்கிரன் அள்ளித் தருவான். இந்த அன்னையை வணங்குவோர்க்கு நவராத்திரி வெள்ளிக்கிழமையில் இந்த தேவியை வழிபடுவோர், தீய சக்திகளின் இடைஞ்சல்களிலிருந்து விடுபட்டு இனிமை நிறைந்த வாழ்வு அமையப் பெறுவர்.

தொகுப்பு: ஜெயலட்சுமி

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்