SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பிரச்னைகள் பரிகாரங்கள்

2022-09-17@ 14:50:05

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  “திருவருணை” ஸ்ரீ கிருஷ்ணா
 

என் வாழ்வில் எப்போது யோக காலம் வரும். ஏனெனில், எப்போதுமே கஷ்டமான வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எந்தெந்த கிரகங்கள் எனக்கு நன்மைகள் செய்யும்.
 - சூர்யா, திருத்தணி.


நீங்கள் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்கு சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார். சூரியன் கிட்டத்தட்ட உங்களுக்கு கிடைக்க வேண்டிய சகல பாக்கியங்களையும் கிடைக்கச் செய்வார். பெரும்பாலான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவார். அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய அத்தனை கௌரவங்களையும் கிடைக்கச் செய்வார்.

அடிப்படை ஜாதகத்திற்கு வலிமையைக் கொடுப்பார். உங்கள் ஜாதகத்தில் சூரியன் எப்படி இருந்தாலும் சரிதான் சில நடைமுறை பரிகாரங்களை கைக்கொள்ளுங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு எல்லா விதங்களிலும் உதவுங்கள். பார்வை இழந்தவருக்கு தேடிப்போய் உதவுங்கள். உணவுகளை எப்போதும் சூடாக எடுத்துக் கொள்ளுங்கள்.

கோதுமை உணவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மாணிக்க கற்களை அணியுங்கள். தந்தையின் சொத்துக்களை விற்காமல் வைத்துக் கொள்ளுங்கள். பரம்பரை பரம்பரையாக செல்லும் கோயிலுக்கு விடாமல் சென்று வாருங்கள். சொந்த ஊர் கிராமத்துக் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.
சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக உதவப் போகிறார்.

ஐந்தாமிடமான பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். அவர்களை எந்த விஷயத்திலும் எதிலும் நிர்ப்பந்தப்படுத்த மாட்டீர்கள். அவர்களுக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ அதிலேயே முழுவதுமாக ஈடுபாடு காட்டச் சொல்வீர்கள். தாத்தா பாட்டி வாழ்ந்த இடம் என்று பூர்வீகச் சொத்துக்கள் எதையும் விற்காமல் வைத்திருப்பீர்கள்.

புரட்சி கரமான சிந்தனை உண்டு. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றிக் கொண்டு செல்வீர்கள்.
செவ்வாய்க் கிழமையன்று விரதம் இருக்கலாம். மலையேற்றம் நல்லது. பவழத்தை அணியுங்கள். துவரை தானியத்தை தானம் கொடுங்கள். உணவில் அவ்வப்போது பூண்டு மற்றும் மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அன்னம் நீரில் நீந்துவதுபோல படம் வரைந்து பார்வையில் படுவதுபோல வைப்பது நல்லது. வீட்டில் செம்பருத்தி, செண்பகப் பூச்செடிகளை வளர்க்க முயற்சியுங்கள். இந்த யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய தலமே வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும் இவர் அருள்பாலிப்பதாக புராண ஐதீகம் நிலவுகிறது.

நட்சத்திரங்கள் பூஜிக்கும் நாயகனாக விளங்குகிறார். கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேர காட்சி தருகின்றனர். இத்தலம் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
 
பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் கோயில்கள்
தினகரன் ஆன்மிக மலா்
229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம்.
மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப: palanmagazine@gmail.com
பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக பெயா், பிறந்த ஊர், பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்