SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 22 முதல் 28 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வெளிவட்டாரப் பழக்கத்ல ஒரு அந்தஸ்தோட வலம் வரும் நீங்க, குடும்பத்ல மட்டும் அப்பப்ப எதுக்காக கோபத்தைக் காட்டறீங்க? மேலே போகப் போக அமைதியை அதிகமா கடைபிடிக்கறதுதான் அந்த உயர்வுக்கும் மதிப்புங்க. உத்யோகஸ்தர்களுக்கு இது ரொம்பவும் அனுகூலமான வாரமுங்க.  உங்க மதிப்பும் மரியாதையும் கூடும். புதுப் புது யோசனைகளால உங்களுக்கும் நீங்க சார்ந்த நிறுவனத்துக்கும் பெருமை தேடிப்பீங்க. அதேபோல  வியாபாரம், தொழில் வகைகள்ல புது உத்திகளால புது உயரத்துக்குப் போவீங்க. ரத்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்குங்க; எச்சரிக்கையா இருங்க.  சிலருக்கு தொண்டை, உணவுக் குழாய் பாதிப்பும் ஏற்படலாம். இந்தத் தேதி இளைஞர்களோட காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவாங்க.  

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை அயலாரிடம் ரொம்பவும் பெருமைபட்டுக்காதீங்க. புதன்கிழமை குருவாயூரப்பனை வழிபடுங்க; குற்றமில்லாத  வாழ்க்கை அமையும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில், உத்யோகம் எல்லா இடத்லேயும் உங்களோட ஆக்கபூர்வமான பரபரப்பு எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். உயர் அதிகா ரிக்கு உங்க மேல இருந்த மனக்கசப்பு முற்றிலுமாக விலகி, உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள், பதவி, வருமான உயர்வுகள் எல்லாம்  தடையில்லாம கிடைக்குமுங்க. புத்துணர்வோடு செயல்படுவீங்க. மனசிலே தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. அப்படி ஆயிடுமோ, இப்படி  ஆயிடுமோன்னு சந்தேகம் வளர்ந்து மனசில் பயத்தையும் வளர்த்ததே, அந்த நிலைமை மாறி, புது உற்சாகம் கூடுமுங்க. வெளிநாட்டுக்குப் பயணம்  போகிறவங்க பாஸ்போர்ட் முதலான ஆவணங்களை முறைப்படுத்தி வெச்சுக்கோங்க; உடன் பயணிப்போர் மீதும் உடைமைகள் மீதும் கவனம்  வையுங்க. வயிற்றில் கோளாறு ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஒவ்வாமை பாதிப்பு வரலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துடிப்போடு வாழ்வீங்க.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல துணையோடு வாக்குவாதம் பண்ணாதீங்க. அவங்க உடல்நலத்லேயும் அக்கறை எடுத்துக்கோங்க. ஏற்கெனவே கண்கள்ல உபத்திரவம்  இருக்கறவங்க பார்த்துகிட்டு வர்ற மருத்துவத்தை ஒத்திப்போடறதோ, அலட்சியப்படுத்தறதோ கூடாதுங்க. அதேபோல நரம்புக் கோளாறு இருக்கறவங் களும் மருத்துவர் யோசனைப்படி எளிமையான உடற்பயிற்சி மேற்கொள்ளுங்க. உத்யோகஸ்தர்கள் ரொம்பவும் எச்சரிக்கையா நடந்துக்கணுமுங்க.  அனாவசிய பழிச்சொல்லுக்கு ஆளாக நேரலாம். அதனால யார்கிட்டேயும் சண்டை போடாதீங்க; யாரையும் புறஞ்சொல்லாதீங்க. எந்தக் கையெழுத்தை யும் ஒருமுறைக்குப் பலமுறையாக யோசிச்சு போடுங்க. வியாபாரம், தொழில்ல இருக்கறவங்க வேலையாட்கள், கூட்டாளிகள்கிட்ட அதிக உரிமை எடுத் துக்கிட்டுப் பேசாதீங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு சுபதடைகள் நீங்குமுங்க; ஆடை ஆபரணம் சேரும். ஞாயிற்றுக்கிழமை அனுமனை வழிபடுங்க; மனதில் உறுதி பிறக்கும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கடந்த கால கஷ்டங்கள்லாம் நிவர்த்தியாகுமுங்க. அந்தத் துயரங்களையே நினைச்சுப் புலம்பிகிட்டிருக்காம புது சாதனைகள்ல ஆர்வம் காட்டறது எதிர் கால நன்மை தருமுங்க. யாரோடேயும் கூட்டு சேராம நீங்க எடுக்கற தனிப்பட்ட முயற்சிகள் வெற்றி தருமுங்க. அனுபவஸ்தர்கள் கிட்டேயும் குடும்பத் துப் பெரியவங்க கிட்டேயும் மட்டும் நீங்க யோசனை கேட்டுக்கலாம்; ஆனா ,உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ, அதை நிறைவேற்றினீங்கன்னா  வெற்றி நிச்சயமுங்க. எந்த சந்தோஷத்தையும் நெருங்கினவங்ககிட்ட மட்டும் பகிர்ந்துக்கோங்க; வாகனத்ல வேகம் வேண்டாங்க. அவசியமற்றப் பயணத் தையும் தவிர்த்திடுங்க. உத்யோகத்ல யார்கிட்டேயும் பகைமை பாராட்டாதீங்க; அதனால உங்களுக்கும் மேலதிகாரி உட்பட பிற ஊழியர்களோட இ ருந்த இடைவெளி நீங்கிடுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யார் மேலேயும் அனாவசியமா பொறாமைப்படாதீங்க. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; புது உயரம் எட்டுவீங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

முயற்சிகள்ல எந்தக் குறையுமில்லாம இருந்தும் பலன்களுக்கு முழு தகுதியானவராக இருந்தும் அவை கிடைக்க தாமதமாகுதேன்னு வருத்தப்படா தீங்க; ஆதங்கத்ல அவசரப்படாதீங்க. தொழில், வியாபாரம், உத்யோகம், குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம்னு எல்லா இனங்களுக்கும் இது பொருந்து முங்க. இப்படி அமைதி காப்பது ஒரு நல்ல மனப் பயிற்சிங்கறதையும் புரிஞ்சுக்கோங்க. எவ்வளவுக்கெவ்வளவு நிதானம், பொறுமையைக் கைக்கொள் றீங்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஆதாயம்தாங்க. சும்மாவானும் சீண்டிப் பார்க்கறவங்களுக்கும் ‘கல்லுளிமங்கனா உட்கார்ந்திருக்கானே’ன்னு விமர்சிக்க றவங்களுக்கும் நீங்க ஒரு புதிராகவே தோன்றினாலும் தப்பில்லீங்க. நீங்க உண்டு, உங்க வேலை உண்டுன்னு இருந்திடறதுதான் இப்ப நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் எதிர்பார்ப்பு களைக் குறைச்சுக்கணுமுங்க. புதன்கிழமை சிவன்-அம்பிகையை வழிபடுங்க; நிதானமானாலும் நிலைத்த பலன்  உறுதிங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல பெற்றவங்க, பெரியவங்களோட யோசனைகள் உங்க கண்ணோட்டத்துக்கு எதிரா இருந்தா, அதைப் பக்குவமாகச் சொல்லி அவங்களை  உங்க வழிக்குத் திருப்புங்க. அதேபோல உத்யோகத்ல மேலதிகாரிகள், கூட வேலை செய்யறவங்களை அனுசரிச்சுகிட்டுப் போயிடுங்க. நிலத்தால  ஆதாயமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் அடைவீங்க. முடங்கிவிட்ட தொழிலும் புது வேகத்தோடு ஓடுமுங்க. எல்லா விஷயங்களும் மனதுக்கு சந்தோஷம்  தருவதாகவே அமையுமுங்க. பொருளாதார அபிவிருத்தி, புகழ் மேன்மை, உறவுகள் பலப்படுவது, நட்பு அரவணைப்பதுன்னு மகிழ்ச்சி, அணையிடப்ப டாத ஆறு போலப் பெருக்கெடுக்குமுங்க. நன்மைகள் கூடி வரும்போது, கொஞ்சம் திருஷ்டி மாதிரி, மறைமுக நோய் பாதிப்பு தெரியுமுங்க; மருத்து வரை அணுகி சரி பண்ணிக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கனவெல்லாம் நனவாகுமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வணங்குங்க; மகிமை பொங்க வாழ்வீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சகோதரர்களோட எதுக்கும் கருத்து வேறுபாடு கொள்ளாதீங்க. அது பூர்வீக சொத்து விவகாரமாக இருந்தாலும் நீங்க எந்த உரிமையையும் கோராம,  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோட நடந்துகிட்டீங்கன்னா உங்க மேல பிறருக்கு மதிப்பு கூடும்; உங்களுக்கு உரிய சொத்து பங்கும் நிச்சயமாகக்  கிடைக்குமுங்க. எதிர்பாராத இடத்லேர்ந்து மகிழ்ச்சியான செய்தி வருமுங்க. அது மறந்தே போயிருந்த கைமாற்றுப் பணமாக இருக்கலாம்; எப்போதோ  விண்ணப்பித்திருந்த வேலை வாய்ப்பாக இருக்கலாம்; ஏன், சிலருக்கு லாட்டரி மாதிரியான அதிர்ஷ்டப் பரிசாகவும் இருக்கலாம். பயணங்கள்ல உருவா கக்கூடிய நட்பு, எதிர்கால நன்மைகளுக்கு அடித்தளம் இடுமுங்க. கழுத்து, தோள் எலும்புகள்ல உபாதை வருமுங்க. வியாபாரம், தொழில், உத்யோ கம் எல்லாமே நல்லாத்தான் போகுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது அதிர்ஷ்டத்தால மகிழ்வீங்க. வெள்ளிக்கிழமை விநாயகரை வழிபடுங்க; வெற்றிகளைக் குவிப்பீங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிரச்னைகளும் சவால்களும் நீங்க சந்திக்காததில்லதான். ஆனா, நடுநிலையா நிற்காம, சிலசமயம், ஆதாயம் கிடைக்கற பக்கம் சாய்ந்து உங்க மரியா தையையும் மதிப்பையும் கெடுத்துகிட்டீங்க; அந்த நிலை வராம பார்த்துக்கோங்க. உங்க நிழலையே சந்தேகப்படற அளவுக்கு எச்சரிக்கையா இருக்க ணுமுங்க. வியாபாரத்ல வேலையாட்களை அவங்க மனசு நோகாதபடி கண்காணிக்கணுமுங்க; விசுவாசத்தை நாசூக்கா அறிவுறுத்துங்க. அதேபோல  தொழில்ல, குறிப்பா கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க, கூட்டாளிங்ககிட்ட மென்மையாக உங்கக் கருத்தைத் தெரிவிக்கலாமுங்க. கடுமையைக் காட்டி னீங்கன்னா அது பெரிய பிரச்னையிலேயும் பழி தீர்த்துக்கற வன்மத்திலேயும் கொண்டு விட்டிடுமுங்க. ரத்தக் கொதிப்பு, இதய உபாதையை உடனே  பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அறிமுகமில்லாதவங்களை கிட்ட நெருங்க விடாதீங்க. சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க; அல்லல்கள் தொலையும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால எழுந்து குளிச்சிட்டு அன்றைய வேலைகளை கவனிங்க; இது எதிர்கால நன்மைகளைத் தருமுங்க. அதிகா ரப் பதவியில் இருக்கறவங்க, நிறைய விஷயங்களை சாதிக்க முடியும்னாலும் அடக்கி வாசிக்கறதுதான் நன்மைங்க. ஏன்னா, நீங்க யார் உதவியால  அப்படி சாதிக்கறீங்களோ, அவங்களே உங்களுக்கு எதிராகலாம். உத்யோகத்ல இருக்கறவங்க ஆர்வக் கோளாறிலே, தேவையில்லாம, முடிவெடுத்துப்  பெயரைக் கெடுத்துக்காதீங்க. சிலர் முதல் முறையா வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. விடுபட்டிருந்த தெய்வ வழிபாட்டை நிறைவேற்றிடுங்க.  ரொம்ப நாளா விற்காமலிருந்த அசையா சொத்து, விற்பனையாகி நல்ல லாபமும் தருமுங்க. இள வயதினரின் திருமணத்துக்கு இந்த வாரம் அச்சாரம்  கொடுக்குதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தாய் வீட்டிலேர்ந்து அனுகூலம் அடைவீங்க. திங்கட்கிழமை சிவனை வழிபடுங்க; திருப்தியான வாழ்க்கை அமையும்.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்