SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சக்திபீட தலங்கள்

2022-09-05@ 16:02:08

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குற்றாலம் அன்னை பராசக்தியானவள் மும்மூர்த்திகளையும் ஈன்ற ஸ்தலமாதலால் இத்தலம் பராசக்தி பீடமாக விளங்குகிறது. இறைவனின் திருவிளையாடல்கள் என்றுமே முடிவதில்லை. வேதகாலம் முதல் இன்று வரை அந்த விளையாட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. தட்சனின் மகளாகப் பிறந்த அம்பிகை தாட்சாயணியாக ஈசனுடன் வாழ்ந்த போது தட்சன் நடத்தும் யாகத்திற்கு தன் கணவனாகிய சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை. கணவனுக்கு ஏற்பட்ட அவமதிப்பு மனைவிக்கும் உண்டு என்ற நியதிக்கு எற்ப தட்சனின் யாகத்தை நிர்மூலமாக்க அந்தயாக குண்டத்திலேயே தாட்சாயணியாக தான் எடுத்த உருவம் மாற வேண்டி அன்னை ஐக்கியமானாள்.

இதையறிந்த ஈசன் கோபம் கொண்டு காலாக்னி போல எழுந்தருளி தேவியின் பதுமாரக உடலைத் தன் தோளில் ஏந்தி ஈரேழு உலகமும் அதிரும்படியாக ருத்ர தாண்டவம் புரிந்தாள். அவ்வாறு ஆடும் போது தேவியின் உடல் 51 இடங்களில் விழுந்தது. உடல் விழுந்த அனைத்து இடங்களும் சக்தி பீடங்களாக மாறின. தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணியாக இருந்த திருவிளையாடல் இத்துடன் முடிந்தது என்பதை விட அன்னை பார்வதியின் திருவிளையாடல் தொடங்கியதே எனலாம்.குமரி பீடம்: கன்னியாகுமரியில் சக்தியானவள் குமரியாக இருந்து தவம் செய்து வருகிறார். எனவே இது குமரி பீடம் என விளங்குகிறது.

சக்ரபீடம்: அன்னை ஈசனை வேண்டித் தவம் செய்த இடம் சங்கரன் கோவில். இது ஸ்ரீ சக்ரபீடம் ஆகும்.குற்றாலம்: அன்னை பராசக்தியானவள் திருக்குற்றாலத்தில் மும்மூர்த்திகளையும் ஈன்றாள். எனவே இத்தலம் பராசக்தி தரணிபீடமாகத் திகழ்கிறது.காந்தி பீடம்: பாவநாசத்தில் அன்னையானவள் விமலை என்று திருநாமம் கொண்டவளாக விளங்குகிறாள்.

குழல்வாய் மொழி அம்பாளுக்கு ஆலயவிழா குற்றாலம் கோயிலில் அருளை அள்ளித் தரும் ஸ்ரீ குழல்வாய் மொழி அம்பாள் உயரமான கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். முன் மண்டப மத்தியில் இறைவன் இறைவி பள்ளி கொள்ளும் மாடம் இருக்கிறது. குழல் வாய் மொழி என்றால் வேய்ங்குழலின் ஒலி போன்று இனிமையான சொல்லுடையவள் என்று பொருள். ஒலித் தத்துவத்தை உள்ளடக்கிய பரம் பொருள் என்னும் பொருள் கொள்ளலாம். இறைவிக்கு இங்கே தனியே பெருவிழாக்கள் கிடையாது. அவள் கோயில் முன் கொடிமரம், பலிபீடம் இல்லை. சண்டேஸ்வரர் சந்நிதியும் இல்லை.

ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குற்றாலநாதர் ஆலயத்தில் அருள் மிகு குழல் வாய்மொழி அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு எண்ணெய் தீபவிளக்குகளுடன் பக்தர்களுக்கு அம்பாள் காட்சியளிக்கிறாள்.ஆடி அமாவாசை அன்று இரவு திருக் கோயில் முழுவதும் எண்ணெய் தீபம் ஏற்றப்பட்டு பத்திர தீப விழா நடத்தப்படுகிறது.

மும்மூர்த்திகளாக காட்சியளிக்கும் திருக்குற்றால நாதர் இந்த கோயில் உறைகின்ற இறைவன் பெயர் திருக்குற்றால நாதர். பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்ற மூவர் பெயர் தாங்கிய மூன்று சிகரங்கள் உள்ளதால் குற்றால நாதரைத் திருகூடமலை என்றும், திருகூட நாதர் என்றும் அழைப்பது வழக்கம்.

எல்லாத் தலங்களிலும் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய அடிப்பாகம் பிரம்ம வாக மென்றும், நடுப்பாகம் திருமால் பாகமென்றும், முடிப் பாகம் உருத்திர பாகமென்றும் சிவ ஆகமங்கள் கூறுகின்றன. இத்தலத்திலிருக்கும் சிவபெருமான் முதலில் பிரம்மனாகவும், இரண்டாவதில் விஷ்ணுவாகவும், மூன்றாவதில் சிவனாகவும் எழுந்தருளியுள்ளது தனிச் சிறப்பு.

இங்கு வேதமே குறும்பலாவாக முளைத்திருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாகிய குறும்பலாவிற்கு தனியாக ஒரு பதிகம் திருஞான சம்பந்தரால் பாடப்பட்டுள்ளது. வேறு எந்தத் தலத்திலுள்ள தலவிருட்சத்திற்கும் இத்தகைய பெருமை கிட்டவில்லை.திருக்குற்றால நாதர் கோயில் சங்கு வடிவமாக அமைந்திருப்பது தனிச் சிறப்பு. திருமாலின் சக்கரம் இக்கோயிலின் சிகரமானது என்று தலபுராணம் கூறுகிறது.

மலைமேல் நின்று பார்த்தால் சங்கு வடிவம் நன்றாகத் தெரியும். நான்கு வாயில்களும் நான்கு வேதங்களாகின. இவற்றில் கிழக்கு வாயிலே பிரதானமானது. இத்தலத்தின் முக்கிய கடவுள் கூத்தன் திருநடராஜப் பெருமான். அவருக்கு வலப்பக்கம், இடப்பக்கம் பராசக்தி கோயிலும் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன.

தொகுப்பு: ஆர் ஜெயலெட்சுமி

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்