SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவணி மூலம்

2022-09-02@ 15:27:28

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்தில் சிவபெருமாளை போற்றி எடுக்கப்படும் விழா ஆவணி மூல விழாவாகும். ஆவணி மூல நாளில், மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும். செம்மனச் செல்விக்கான வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று, கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று, சொக்கன் பிரம் படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியது. மதுரையில், இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.

பிட்டுத் திருவிழா என்றும், இதனைக் கூறுவர். சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழக்கோயிலுக்கு எழுந்தருளுவார். மூல நட்சத்திரத்தின் அதி தேவதை, `நிருதி’ எனும் அசுரனாதலால் அசுர சக்தியின் செல்வாக்கினை சொக்கனின் மேல் ஏற்படும் பக்தி உணர்ச்சியின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று கருதுவர். தெய்வ பக்தியை வற்புறுத்துவதாக திருவிளையாடல் அமைதல் குறிப்பிடத்தக்கது.

- எஸ்.கிருஷ்ணஜா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்