SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

2022-09-02@ 15:17:12

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இது திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள அரும்பாத்தை என்னும் சிற்றூராம் திருத்தலத்தில் கோயில் கொண்ட வேதவிநாயகர் மீது பாடப் பெற்ற பிள்ளைத் தமிழ்ப்பிரபந்தமாகும். இப்பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்திலே காப்புப் பருவம் நீங்கலான செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வஞ்கை, அம்புலி, சிறுபறை, சீற்றில், சிறுதேர்ப் பருவங்களில் பருவத்திற்குப் பத்துப் பாடல்களாகத் தொண்ணூறு பாடல்கள் உள்ளன. இப்பருவத்தில் தனித்தனியே திருமால், சிவபெருமான், உமை, திருமகள், சரஸ்வதி, பிரமன், இந்திரன், சந்தமாதர்கள், துர்க்கை, முப்பத்து முக்கோடி தேவர்கள் காப்பு வேண்டப்பட்டுள்ளனர். எனவே இப்பிள்ளைத்தமிழிழ் 101 பாடல்களைக் கொண்டது.

அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத் தமிழ் ஆசிரியரை அறியமுடியவில்லை. ஆயினும் அவர் காலம் அபிராமிப்பட்டருக்கும், கவிராட்சச கச்சியப்பருக்கும் பிற்பட்டது என்பது தெளிவாகும். கச்சியப்பரின் விநாயக புராணத்திற்கு பயிற்சியுடவராய் ஆசிரியர் காணப்படுகிறார். அபிராமிப்பட்டர் செய்தி அம்புலிப் பருவத்திலே (செய்யுள்-7) காணப்படுகின்றது.

- எஸ்.கிருஷ்ணஜா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்