SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஒரு நாள் தரிசனத் தலங்கள்

2022-09-01@ 17:25:53

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம் வாழ்நாளில் எத்தனையோ சுற்றுலாக்களுக்குச் சென்று வருகிறோம். ஆனால், நம் வாழ்க்கையில் அமைதி, பேரானந்தம் அருளும் `ஒரு நாள் தரிசனத்தலங்களை’  தரிசிக்க மறந்து விடுகிறோம். புராணத் தொடர்பும், புவிவழித் தொடர்பும் கொண்ட திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகத் தரிசிப்பவர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே! என்றார் தாயு மானவ சுவாமிகள். அவர் வாக்கின்படி திருத்தலங்களின் மகிமை அறிந்து தரிசித்து சகல சௌபாக்யங்களையும் பெறுவோம்.

ஒரு நாள் தரிசனம் சேவை என்பது சூரிய உதயகாலத்திலிருந்து தொடங்கி, அஸ்தமன காலத்திற்குள் ஒரே வரிசையிலோ, நதிக்கரையிலோ உள்ள ஆலயங் களில் தீபமேற்றி அந்தந்த ஆலயங்களில் அருள்பாலிக்கும் மூர்த்தங்களின் துதிபாடி வணங்கி  பிரார்த்தனை செய்துவருவது.வடநாட்டில் ‘பரிக்ரமா’ என்ற பெயரில் புண்ணிய நதிக்கரையைச் சுற்றி வணங்குவதால் பிறவிப்பயன் கிடைப்பதாக நம்புகின்றனர்.

* நலம் தரும் நவகயிலாய தரிசனம்


திருநெல்வேலி  தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் அமைந்து அருள்பாலிக்கும் நவகயிலாயங்களான பூ மங்கலம் இராசபதி, தென்திருப்பேரை, திருவைகுண்டம், முறப்பநாடு,  குன்னத்தூர், கோடக நல்லூர், சேரன்மாதேவி, பாபநாசம் ஆகிய சிவஸ்தலங்களை ஒரே  நாளில் தரிசிக்க வேண்டும்.

* நவக்ரஹதோஷம் அகற்றும் நவதிருப்பதிகள்

தூத்துக்குடி மாவட்டத்தினுள் அமைந்த ஒன்பது திருப்பதிகளான திருவைகுண்டம், நத்தம்,  திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, பெருங்குளம், திருக்கோளூர், தென் திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆகிய பெருமான் தலங்களை ஏகாதசி, சனி, செவ்வாய்க்கிழமைகளில் தரிசிக்க நவநாயகர்கள் மங்களங்களை அளிப்பார்கள்.

* சௌபாக்யம் அருளும் சுயம்புலிங்கங்கள்

சேலம்  மாவட்டத்திற்குள் மணிமுத்தாறு நதியின் மேற்குக் கரையில் உள்ள சுயம்பு லிங்கத் தலங்களை ஒரே தினத்தில், தரிசிக்க சௌபாக்யம் கிடைக்கும். சேலம் சுகவனேஸ்வரர் கோயில், பரமத்தவீமேஸ்வரர் கோயில், திருவேலிநாதர் கோயில் ஆகிய சிவவடிவங்களைத் தரிசிக்க வேண்டும்.

* முன்வினை தீர்க்கும் மூன்று சிவன்தலங்கள்

புதுக்கோட்டை  - திருச்சி மாவட்ட எல்லைக்குள் அமைந்த சிவபுண்ணிய பூமிகளில், ஒரே நாளில்  கல் பதிக்க நமது முன்வினைகள், பாவங்கள் களையப் படுவது உறுதி. காலை சூரிய  உதயத்தில் கடம்பந்துறை கடம்பநாதரையும், மதிய வேளையில் சிவன் மலை சொக்க நாதரையும், மாலையில் திருஈங்கோய்மலை, திருவேங்கை நாதரையும் கண்குளிர  தரிசித்து தீபம் ஏற்ற வேண்டும்.

* மங்களம் அருளும் மூன்று மகாசக்திகள்


சென்னை மாவட்டத்தின் வடக்கு எல்லையிலும், திருவள்ளூர் மாவட்டத்திலும் நின்று  அருள் தரும் சக்தி தேவியர்களான மேலூரில் காட்சி தரும் திருவுடை நாயகியையும், திருவொற்றியூரில் அருள் தரும் வடிவுடை தேவியையும், வட  திருமுல்லைவாயிலில் அருள் வழங்கும் கொடியிடை நாயகியையும் முறையே காலை,  மதியம், மாலையில் சென்று தரிசிக்க வேண்டும்.

* திருமகள் அருள் கூட்டும் திரிசக்கர தரிசனம்


காஞ்சி  - திருவள்ளூர் மாவட்டத்திற்குள் அமைந்துள்ள தொண்டை மண்டலத்தில்  அமைந்திருக்கும் புகழ்பெற்ற மூன்று சக்கரங்களுடன் அருள் தரும் தேவியர்களை  ஒரே நாளில் தரிசித்து தீபம் ஏற்றிவர திரு மகள் அருட் பார்வை கிடைக்கும்.  திருவேற்காடு கருமாரி அம்மனைக் காலையில் வணங்கி புற்றுமண் பிரசாதம் பெற்று, மாங்காட்டில் காட்சி தரும் ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசித்து  எலுமிச்சங்கனி பெற்று, குன்றத்தூர் தென்பாகத்தில் காட்சி தரும் ஸ்ரீ காத்யாயனி அம்மனை வணங்கி மஞ்சள் குங்குமம் பிரசாதமாகப் பெறுவது நலம்  கூட்டும்.

* நாகதோஷம் அகற்றும் நாகதேவ தரிசனம்

தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள திருக்குடந்தை என்கின்ற கும்பகோணம் நாகேஸ்வர ஈசனையும், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமியையும், திருப்பாம்புரம் பாம்புரேஸ்வர சிவனையும், நாகூரில் உள்ள நாகேஸ்வரரையும், சோமவாரம் (திங்கட்கிழமை) மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி காலங்களில் தரிசித்துவர  நாகதோஷங்கள், கிருஹ தோஷங்கள் அகன்று சுபபலன்கள் உண்டாகும்.

* சிவாலய ஓட்டம் சிவன் ராத்திரியில்

கன்னியாகுமரி  மாவட்டத்தில் காவி உடை அணிந்த பக்தர்கள், கோவிந்தன் நாமத்தை உச்சரித்தபடி காலையில் தொடங்கி மாலைக்குள் திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை,  பொன்மனை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு,  திருவிதாங்கோடு, திருபன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பன்னிரு சிவாலயங்களை தரிசிப்பதால் திருக்கயிலாய தரிசனம் செய்த பலன் கிட்டும்.

தர்மபூமி எனவும், ஆன்மிக வளம் கொண்ட தேசம் என்னும் சிவாகமக் கலைகள் தோன்றிய பூமி எனவும் மற்ற  தேசத்தவர்களால் புகழப்படுகிற இந்த மண்ணில் அருட்செல்வங்களாக ஆலயங்கள்  உள்ளன. அவற்றை அந்தந்த பகுதிக்குச் செல்லும்போது, ஒரே நாளில் சென்று  தரிசித்து நலம் பெறவேண்டும்.

சக்தி என்று சொல்லுங்கள் சங்கடங்கள்  தீரும். சிவம் என்று சொன்னால் மங்களங்கள் கைகூடும். நாராயணா! என்போருக்கு  நன்மைகள் மட்டுமே பின்தொடர்ந்து வரும். ஆன்மிகப் பொக்கிஷங்களாக அருள்  வழங்கும் மூர்த்தங்களை வணங்கி வாழ்வில் குறைகள் அகன்று குறைவற்ற செல்வங்களை அடைவோம்.

K. குமாரசிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்