SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

2022-07-19@ 13:50:25

என் மகனுக்கு ஐந்து வயதும், இன்னொரு மகனுக்கு ஏழு வயதும் ஆகின்றது. இருவரின் எதிர்காலம் எப்படியிருக்கும். மற்ற குழந்தைகளை விட சேட்டை அதிகமாகச் செய்கின்றனர். ஒரு பெற்றோராக நாங்கள் மிகவும் கவலைப்படுகின்றோம். என்ன செய்வது?
 - சுந்தரமூர்த்தி, அம்பாசமுத்திரம்.

உங்களின் முதல் குழந்தை உத்திரம் ஒன்றாம் பாதத்திலும் இரண்டாம் குழந்தை இரண்டாம் பாதத்திலும் பிறந்துள்ளனர். ஜனன காலத்தில் முதல் ஐந்து வயது வரை சூரிய தசை நடைபெறுகிறது. இந்த ஐந்து வயதில் கல்வியில் ஒன்றும் பெரிய மாற்றங்கள் உண்டாகப் போவதில்லை. 6 வயதிலிருந்து 15 வரை சந்திர தசை நடக்கும்போது கொஞ்சம் பள்ளி வாழ்க்கை சவாலாகவே இருக்கும். ஏனெனில், சந்திரன் விரய ஸ்தானாதிபதியாகவும், பன்னிரெண்டுக்குரியவனாகவும் வருவதால் ‘‘பையன் படிக்கவே மாட்டேங்கறான். என்ன பண்ணப்போறானோ’’ என்று கவலைகள் சூழும். ஆனால், இவையெல்லாமுமே 12 வயது வரையும்தான். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், புத்தகம் எதிர்காலம் என்றெல்லாம் தெரியாத வயது அது. அதனால், தேவையில்லாமல் அழுத்தம் கொடுக்காதீர்கள். அடிப்படை கல்வியை தெரிந்து கொள்ளச் செய்யுங்கள். 13லிருந்து 19 வரை நடைபெறும் செவ்வாய் தசை சிறப்பாக இருக்கும். இதுவரை சரியான பள்ளியில் படிக்கவில்லையே என்கிற ஏக்கம் தீரும். மதிப்பெண்கள் உயரும். கல்லூரியில் அரசியல், நிர்வாகம். எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுங்கள். மருத்துவத் துறையில் எலும்பு, கண், மூளை, கபாலம் சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் எச்.ஆர்., பைனான்ஸ் துறை ஏற்றது.

உங்கள் இரண்டாவது மகன் பிறந்த உத்திரத்தின் இரண்டாம் பாதத்தை சூரியன், புதன், மகரச் சனி ஆட்சி செய்கின்றனர். எட்டாம் வகுப்பு படிக்கும்போது மட்டும் நண்பர்களின் சகவாசத்தில் கவனம் வேண்டும். தமிழ், ஆங்கிலம், மற்றும் அயல் மொழிப்பாடங்களை ஆர்வத்துடன் படிப்பார். கணக்கு கசக்கும். அடுத்து வரும் 15லிருந்து 22 வயது வரையிலான காலம் செவ்வாய் தசை நடைபெறும். படிப்பைவிட அதிகமாக விளையாட்டு, ராணுவம் என்று சேரத்தான் ஆசைப்படுவார். சேம்ப்பியன் ஆகவேண்டுமென்று துடிப்பார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுங்கள். அதேபோல கட்டிட திட்ட வரைபடம், ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகளை படித்தால் எதிர்காலம் வளம் பெறும். கலைத்துறை எனில் ஓவியம் மிக நன்று. விஸ்காம், டி.எப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். ஐ.ஏ.எஸ். தேர்வின் மீது உத்திர நட்சத்திரக்காரர்கள் பொதுவாகவே ஒரு கண் வைப்பது நல்லது.

சூரியனும் சனியும் இணைந்துள்ள அம்சமான ஈசனை வழிபடுதலே இந்த நட்சத்திரத்திற்கு ஏற்றதாகும். அதிலும் வேறு எந்த தலத்திலும் இல்லாத ஒரு அம்சமாக அது இருத்தல் வேண்டும். சனி என்றாலே பிரமாண்டத்தை குறிக்கிறது. எனவே, லிங்கத்திலேயே மகாலிங்கம் என்றழைக்கப்படும் தலமான திருவிடைமருதூர் எனும் தலத்தை வழிபடுங்கள். லிங்கம் என்று ஈசன் அழைக்கப்படும் தலங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய தலமாக விளங்குவதே திருவிடை மருதூர். கோயிலும் பிரமாண்டமானது. லிங்கத்தின் அம்சமும் பிரமாண்டமானது. எனவே, மகாலிங்கேஸ்வரரை வணங்குங்கள். இந்த தலத்தை மத்யார்ச்சுணம் என்பார்கள். இரு மருதமரங்களுக்கு இடையில் தோன்றியவராதலால் இடைமருதீசர் என்று அழைத்தார்கள். தலத்தின் பெயரும் திருவிடைமருதூர் என்றானது. கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
 
“திருருணை”
 கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்