SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேட்டை நட்சத்திரம் மூத்தவருக்கு ஆகாது என்கிறார்களே உண்மையா?

2022-07-18@ 14:31:19

கேட்டை நட்சத்திரம் மூத்தவருக்கு ஆகாது. விசாக நட்சத்திரம் இளையவருக்கு ஆகாது. மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று சில கருத்துக்கள் ஜோதிடத்தில் உலாவுகின்றன. இதனால் பல நல்ல திருமணங்கள் நின்று விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம். ஜோதிடத்தின் அடிப்படையில், எந்த தர்க்கவாதத்திலும் பிடிபடாத விஷயம் இது. இதன் காரண காரியங்கள் கொடுக்கப்படவில்லை. கேட்டை நட்சத்திரம் உள்ள ஒரு ஜாதகம் எப்படி மூத்தவர் ஆயுளை போக்கும். அப்படியானால், அந்த மூத்தவரின் தனிப்பட்ட ஜாதகம் வேலை செய்வதில்லையா, அது வேலை செய்வதை கேட்டை நட்சத்திரம் தடுக்கிறதா, எப்படி தடுக்கிறது என்பதை குறித்து யாரும் கவனத்தில் கொள்வதில்லை.

முதல் பிரமாணம் என்னவென்றால், எந்த ஒரு ஜாதகத்தின் பலாபலன்களையும் தனிப்பட்ட ஒரு நட்சத்திரம் தீர்மானித்து விடுவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதைப்போலவே, தனிப்பட்ட கிரகங்களும் தீர்மானித்து விடுவதில்லை.இதைத் தெரிந்து கொள்ளாமல் கேட்டை நட்சத்திரம் மூத்தவருக்கு ஆகாது என்று சொல்வது எந்த விதத்திலும் பொருந்தாது. அந்த ஒரேயொரு விஷயத்தை வைத்துக்கொண்டு ஜாதகத்தை ஏற்றுக் கொள்வதோ தள்ளுவதோ சரியான ஒரு ஜோதிட ஆராய்ச்சியாக இருக்க முடியாது. எத்தனையோ குடும்பங்களில் கேட்டை நட்சத்திரம் அல்லாத நட்சத்திரத்தில் பெண் எடுத்திருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் மூத்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டதையும் கண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் அவருடைய தனிப்பட்ட ஜாதக குணதோஷம் தானே தவிர கேட்டை நட்சத்திரம் அல்ல.

ஆனாலும், கூட நாம் எதேச்சையாக ஏதேனும் நடந்தால் கூட அது கேட்டை நட்சத்திரத்தால் தான் நடந்தது என்று நினைக்கும் படி ஆகிவிட்டது. என்ன செய்வது? இதற்கு அச்சம்தான் முதல் காரணம். இந்த அச்சம் பரம்பரையாக வழி வழியாக விதைக்கப்பட்டதால் பல ஜோதிடர்கள் ``கேட்டை நட்சத்திரமா... ஏன் வம்பு வேறு ஜாதகம் பார்’’ என்று சொல்லி விடுகிறார்கள். இதனால் திருமணம் ஆக வேண்டிய ஜாதகம் திருமணம் ஆகாமல் போய்விடுகிறது. இரண்டாவது, அது மிக நல்ல வரனாக இருக்கும். தேவை இல்லாமல் அதை நாம் தள்ள வேண்டியது. இதில் ஜோதிடர்களின் பொறுப்பு அதிகம். சரி... இப்படிப்பட்ட பிரச்னையை எப்படி கையாளுவது? தேவைப்பட்டால் ஒன்று செய்யலாம். கேட்டை நட்சத்திரம் பெண் வருகின்ற பொழுது மாப்பிள்ளை அண்ணன் ஜாதகத்தை கொண்டு வரச் செய்து, தசா புத்திகளை கணக்கிட்டு அவருடைய ஆயுள் பார்த்து  பரிந்துரைக்கலாம். அப்படி கேட்டை நட்சத்திரம் பெண் எடுத்த மாப்பிள்ளையின் மூத்தவர்கள் நன்றாக இருக்கக்கூடிய பல ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். எந்த பரிசீலனையும் இல்லாமல் பார்த்த உடனேயே கேட்டை நட்சத்திரம், தூக்கி தூரப்போடு என்று சொல்வது ஏற்புடைய கருத்தல்ல.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்