SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

2022-07-14@ 14:23:44

எனக்கு நிறைய பிரச்னைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அலுவலகத்தில் முக்கியமாக வருகின்றது. கடனும் நோயும் என்னை அலைகழிக்கின்றன.
 -  ஸ்ரீ ராம், விருதுநகர்.

நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் ஆறாம் இடத்தை விருச்சிக செவ்வாய்தான் தீர்மானிக்கிறார். நீங்கள் காவல்துறை, மின்சாரத்துறை, நில அளவையாளர் போன்ற துறை சார்ந்த இடங்களில் வேலை செய்தால் அடிக்கடி எதிர்ப்புகள் வந்தபடி இருக்கும். அடிக்கடி உங்களுக்கு இடமாற்றத்தை கொடுப்பார்கள். தவிர்க்க முடியாது. இந்த ஆறாமிடத்து செவ்வாய் பிரச்னைகளை கொடுத்து அதைப் பெரிதாக்கி படிப்பினையையும் தருவார். பலவித வேண்டாத நட்பைக் கொடுத்தெல்லாம் வாழ்க்கை அனுபவங்களை கூட்டுபவராகவும் செவ்வாய் செயல்படுவார். வேகமாக பேசுபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கோபக்காரர்களின் எப்படி ஒதுங்கியிருக்க வேண்டும் என்றெல்லாமும் செவ்வாய் சொல்லித் தருவார்.  பக்கத்து தெருவுக்கு வண்டி எடுத்துக்கொண்டு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், கடந்த கால நினைவுகளை மறந்துபோதல் போன்ற மூளை சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் வயதான காலத்தில் பெரும்பாலும் வரும். ஆனால், உங்களுக்கு விபத்து ஏற்படும்போது மிக முக்கியமாக தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவுகளை மறத்தல் போன்ற தொந்தரவுகளை தவிர்க்கலாமல்லவா. ஜனன இந்திரியங்களுக்கு உரியதாகவும் செவ்வாய் வருவதால் ஆண்களுக்கு விதைப்பை வீக்கம் போன்ற தொந்தரவுகள் வந்துநீங்கும்.

ஆறு மாதங்களில் செலுத்த வேண்டிய கடனை ஒரே மாதத்தில் தரச் சொல்லி கடன் கொடுப்பவர் கழுத்தை பிடிப்பார். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்களால் உங்களில் பலர் கடனாளியாவீர்கள். ‘‘நல்லது, கெட்டதுக்கு சீர் செனத்தி பண்ணியே போண்டியாகிட்டேன்’’ என்று உங்களில் பலர் கூறுவதுண்டு. காலத்திற்கு தகுந்தாற்போல எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று யோசித்துச் செய்ய வேண்டும். எப்போதுமே வீட்டுப் பத்திரங்களை வைத்து கடன் வாங்கக் கூடாது. தங்கத்தை வைத்து வாங்குங்கள்.
அப்படிப்பட்ட தாக்குபிடிக்கும் சக்தியை இறையருளால் நாம் பெறலாம். இந்த ஆறாம் இடம் வெறும் அச்சுறுத்தலாக இருக்கிறதே என்று பயப்படாதீர்கள். இறைவனின் அருளால் துணிவை கூட்டும்படியாக செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு துணிவையும், தாங்கும் சக்தியையும், பெரிய பிரச்னைகள் வந்தால் எளிதாக எடுத்துக் கொண்டு மடைமாற்றும் வித்தையும் மகாசக்தியான சரபேஸ்வரர் தருவார். சரபேஸ் வரர் நரசிம்மரின் ஆக்ரோஷத்தையே அடக்கியவர். நரசிம்மரின் ஆக்ரோஷத்தை குறைக்க ஈசன் சரபம் என்கிற பறவையின் உருவில் வந்தார். சிங்கத்தின் ஆவேசமான முகமும், கண்களில் சூரியன் உஷ்ணத்தைக் கக்க, சந்திரன் அமிர்தத்தை பொழிய நின்றார். ஒரு சிறகில் பிரத்யங்கரா எனும் காளி அம்சமும், மறு சிறகில் சூலினி துர்க்கையும் அவரின் சக்தியை உந்த அவர் தன் கூர்மையான அலகால் பூமிப்பந்தை குத்திக் கிளறி வாயுவை விட வேகமாக நகர்ந்து நரசிம்மரின் முன்பு நின்றார். தேவர்கள் வானத்தை நிகர்த்த இவ்விரு பெருமான்களையும் அண்ணாந்து பார்த்தனர். அப்படிப்பட்ட சரபேஸ்வரரை கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் தலத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தின் ஓரமாக உள்ள ஒரு தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இனி வாழ்வில் எழவே முடியாது என்கிற அளவுக்கு பிரச்னைகள் உள்ளவராக இருந்தாலும் சரிதான் இவரின் சந்நதியில் நின்றாலே போதுமானது. உங்களின் சகல பிரச்னைகளும் தீரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்