திருமணத்தடை நீங்க பழஞ்சிறை தேவி வழிபாடு
2022-07-01@ 14:44:05

கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள். நவராத்திரி விழா நாட்களில் கோவிலின் முன் அணையாத ‘ஹோமம்’ நடைபெறும். நவராத்திரி ஒன்பது தினங்களிலும் சண்டி ஹோமம் நடத்தப்படும். கோவிலின் வெளிப்பக்கம் அரசமரம் செண்பகமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகொடிகள் வளர்ந்து அழகு சோலையாக காட்சியளிக்கின்றது. இதனை ‘சர்ப்பக்காவு’ (நாகர் சோலை) என அழைக்கின்றனர். இங்குள்ள நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு–கேது தோஷம் நீங்கப்பெற்று நலன் பெறுவர். பழஞ்சிறை தேவி கோவிலுக்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்குகிறது. தேவிக்கு வழிபாடாக மாங்கல்யம் அணிவிக்கும்போது மாங்கல்ய பாக்கியம் ஏற்படுகிறது. பழஞ்சிறை தேவிக்கு ஆடை அணிவித்து அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்கின்றனர். பழஞ்சிறை தேவியை வழிபடுவோருக்கு இனி பிறவி இல்லை என்பதோடு இப்பிறவியில் தொல்லைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்வு அமையும் என்று நம்பப்படுகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் பாதையில் ‘அப்பலத்தரா’ என்ற இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில்.
மேலும் செய்திகள்
ஓம் முருகா: தடைகள் நீங்கி சகல காரிய வெற்றிதரும் வேலன் வழிபாடு..!!
வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஸ்ரீ கருமாரியம்மன் வழிபாடு..!!
குடும்பத்தின் வறுமை நிலை நீங்க எளிய முறையிலான விநாயகர் வழிபாடு..!!
தீராத குடும்ப கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு..!!
எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா வழிபாடு..!!
கடன் பிரச்சனை தீர வேண்டுமா?: கேட்ட வரங்களை வாரி வழங்கும் பெருமாள் வழிபாடு..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!