SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனித்து, துணிந்து செயல்பட வைக்கும் கவசம்

2022-06-30@ 13:59:20

இந்த கவசம் மரணமில்லா வாழ்வை வழங்கக்கூடியதாகும். இந்த கவசத்தை கூறுவது சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சிறந்த வழியாகும். இந்த மகா ம்ருத்யுஞ்ஜய கவசம் கூறுவதால் நமக்கு  கிடைக்கும் நன்மைகள் என்ன வென்று பார்க்கலாம்.அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சிவபெருமானின் சிலை அல்லது உருவப்படத்திற்கு முன் அமர்ந்து இந்த கவசத்தை 108 முறை கூறவும். இந்த மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து கூறுவது உங்களின் மனதில் இருக்கும் பயத்தை விரட்டுவதுடன் உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற மகா ம்ருத்யுஞ்ஜய கவசம் மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்க உதவும். இது தேர்வு பற்றி அவர்கள் மனதில் இருக்கும் பயத்தைப் போக்கி அவர்களை தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள உதவும். மேலும் இது அவர்களின் கவனம், ஆர்வம் போன்றவற்றை அதிகரிக்கும்.

காலையில் சீக்கிரம் எழுந்து சிவபெருமானின் சிலைக்கு முன்னால் அமர்ந்து இந்த கவசத்தை 21 முறை கூறவும். அதன்பின் நீங்கள் கடினமென நினைக்கும் பாடங்களை படியுங்கள். அவ்வாறு படிக்கும் போது அதிக தெளிவாக உணருவார்கள். தேர்வுக்குச் செல்லும் முன் இந்த கவசத்தை கூறிவிட்டு செல்லவும்.

கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். கடன் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அமைதியைப் பறித்து துன்பத்தில் ஆழ்த்தக்கூடும். தூக்கமின்மை, வாழ்க்கையில் ஆர்வமின்மை, தற்கொலை எண்ணம் போன்றவற்றை கடன் பிரச்சினை தூண்டும். இந்த பிரச்னையை மகா ம்ருத்யுஞ்ஜய கவசம்  போக்கும்.

தொழிலில் முன்னேற ஒவ்வொருவரின் தொழில் வாழ்க்கையும் தனித்துவமானது. பெரும்பாலும் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் போட்டியை உணரலாம். இந்த சூழ்நிலையில் இந்த கவசம் உங்களின் பதவி உயர்வு மற்றும் செல்வத்தை வழங்கும். இது உங்களின் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி உங்கள் இலட்சியத்தை அடைய உதவும்.
மஹா ம்ருத்யுஞ்ஜய கவசம்

ஸ்ரீபைரவ உவாச:-
ஸ்ருணுஷ்வ பரமேசானி கவசம் மன்முகோதிதம் |
மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்யாஸ்ய நான்யத்து
பரமாத்புதம் ||
யம் த்ருத்வா யம்படித்வா ச ஸ்ருத்வா ச கவசோத்தமம் |

த்ரைலோக்யாதிபதிர் பூத்வா ஸுகிதோஸ்மி மகேஸ்வரி ||
ததேவ வர்ணயிஷ்யாமி தவப்ரீத்யா வரானனே |
ததாபிபரமம் தத்வம் ந தாதவ்யம் துராத்மனே ||

அஸ்யஸ்ரீ மஹாம்ருத்யஞ்ஜய கவசஸ்ய ஸ்ரீபைரவ ரிஷி:
காயத்ரி சந்த: ஸ்ரீ மஹாம்ருத்யஞ்ஜயோ
மஹாருத்ரோதேவதா ஓம்
பீஜம் ஜும் சக்தி: ஸ: கீலகம் அஹமிதி தத்வம் சதுர் வர்க
ஸாதனே ம்ருத்யஞ்ஜய கவசபாடே விநியோக: ||

த்யாநம்:-
சந்திரமண்டல மத்யஸ்தம் ருதரம்பாலே
விசிந்தியதம் ||
தத்ரஸ்தம் சிந்தயேத் ஸாத்யம் ம்ருத்யும்
ப்ராப்தோபிஜீவதி
ஓம் ஜும் ஸோஹௌம் சிர:பாது தேவோ
ம்ருத்யுஞ்ஜயோமம
ஓம் ஸ்ரீம் சிவோ லலாடம் மே ஓம்ஹௌம் ப்ருவௌ சதாசிவ
நீலகண்டோ அவதாந் நேத்ரே சுபர்தீ மே
அவதாத்ச்ருதீ |

த்ரிலோசனோ அவதாத் கண்டௌ நாஸாம் மே த்ரிபுராந்தக: ||
முகம் பீயூஷ கடப்ருத் ஓஷ்டௌ மே க்ருத்தி காம்பர: |
ஹனும் மே ஹாராகேனோ முகம் வடுக பைரவ: ||
கந்தராம் கால மதனோ களம் கணப்ரியோவது |
ஸ்கந்தௌ ஸ்கந்தபிதா பாது ஹஸ்தௌ
மேகிரிஸோ வது ||

நகான்மே கிரிஜாநாத: பாயாதங்குலி சம்யுதான் |
ஸ்தனௌ தாராபதி: பாது வக்ஷ: பஸுபதிர்மம ||
ருக்ஷிம் குபேரவாத: பார்ஸ்வௌ மே மாரசாஸன: |
சர்வ: பாதுததாநாபிம் சூலி ப்ருஷ்டம் மமாவது |
சிஸ்நம்மேசங்கர: பர்து குஹ்யம் குக்யக வல்லப: |

கடிம் காலாந்தக: பாயாதூரு மேந்தக காதக: |
ஜாகரூகோவதாஜ்ஜாநூ ஜங்கே மேகால பைரவ: |
குல்பௌ பாயா ஜ்ஜடாதாரீ பாதௌ ம்ருத்யுஞ்ஜயோவது ||
பாதாதி மூர்த்த பர்யந்தம் அகோர: பாதுமே ஸதா |
சிரஸ: பாதபர்யந்தம் சத்யோ ஜாதோ மமாவது ||
ரக்ஷாஹநம் நாமஹீநம் வபு: பாத்வ ம்ருதேஸ்வர: |

பூர்வே பலவிகரணோ தக்ஷினே காலசாஸன: ||
பஸ்சிமே பார்வதீநாதோ ஹ்யுத்தரே மாம் மனோன்மந: |
ஐஸான்யா மீஸ்வர: பாயாதாக்னேய்யா மக்னிலோசந: ||
நைர்ரித்யாம் சம்புரவ்யா த்வாயவ்யாம் வாயு வாஹன: |
ஊர்த்வம் பலப்ரமதந: பாதாலே பரமேஸ்வர: ||
தஸதிக்ஷு ஸதாபாது மஹாம்ருத்யுஞ்ஜயஸ்ச மாம் |

ரணே ராஜகுலேத்யூதே விஷமே ப்ராணஸம்சயே ||
பாயாதோம் ஜும்மஹாருத்ரோ தேவதேவோ தசாக்ஷர: |
ப்ரபாதே பாது மாம் ப்ரம்மா மத்யான்ஹே பைரவோsவது ||
ஸாயம்பலப்ரமதநோ நிஸாயாம் நித்ய சேதன: |

அர்த்தராத்ரே மஹாதேவோ நிஸாந்தே மாம் மனோன்மணி:
ஸர்வதா ஸர்வத:பாது ஓம் ஜும் ஸோ ஹௌம் ம்ருத்யுஞ்ஜய:
இதீதம் கவசம் புண்யம் த்ரிஷுலோகேஷு
துர்லபம் ||
ஸர்வமந்த்ரமயம் குஹ்யம் ஸர்வதந்த்ரேஷு கோபிதம் |
புண்யம் புண்யப்ரதம் திவ்யம் தேவதேவாதி தைவதம் ||
ய இதம் ச படேன் மந்த்ரீ கவசம் பார்ச்சயேத்தத: |

தஸ்ய ஹஸ்தே மஹாதேவி த்ரியம்பகஸ்யாஷ்ட ஸித்தய: ||
ரணேத்ருத்வா சரேத்யுத்தம் ஹத்வா சத்ரும் ஜயம் லபேத் |
ஜபம்க்ருத்வா க்ருஹம் தேவி ஸம்ப்ராப்ஸ்யதி ஸுகீ புந: |
மஹாபயே மஹாரோகே மஹாமாரீ பயே ததா |
துர்பிக்ஷேசத்ரு ஸம்ஹாரே படேத் கவச
மாதராத் ||

ஸர்வம் தத் ப்ரஸமம் யாதி ம்ருத்யுஞ்ஜய
ப்ரஸாதத: |
தநம் புத்ரான் ஸுகம் லக்ஷமீ மாரோக்யம் ஸர்வஸம்பத: ||
ப்ராப்நோதி ஸாதக: ஸத்யோ தேவி ஸத்யம்
ந ஸம்சய: |
இதீதம் கவசம் புண்யம் மஹாம்ருத்யுஞ்ஜயஸ்யது||

கோப்யம் ஸித்திப்ரதம் குஹ்யம் கோபநீயம் ஸ்யோவத் |
இதிஸ்ரீருத்ரயாமலே தந்த்ரே ஸ்ரீதேவீ ரஸ்யே |
ம்ருத்யுஞ்ஜய கவசநிரூபணம் நாம த்ரிசத்வாரிம் ச: படல: ||

அனுஷா

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்