SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்-கோயில்கள்

2022-06-15@ 14:35:54

?எனக்கு மிதுன ராசி என்று தெரியும். மிருகசீரிஷம் நட்சத்திரம். ஆனால், எந்த நேரத்தில் பிறந்தேன் என்று எவரும் குறித்து வைக்கவில்லை. காலை மாலை என்று குழப்புகிறார்கள். எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. பரிகாரம் கூறுங்கள்.
- கணேசன், திருச்சி.

மிதுன ராசிக்காரரே! உங்களுக்கு பூர்வ புண்யாதிபதியாக சுக்கிரன் வருகிறார். நீங்கள் இந்த கேள்வி கேட்கும் நேரத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று அமர்ந்துள்ளதால் நிச்சயம் வெகு விரைவிலேயே குழந்தை பாக்கியம் உண்டு. தெய்வத்தை கொண்டாடுவதை போல பிள்ளைகளை கொண்டாடுவீர்கள். சக நண்பனை போல் சகஜமாக, உரிமையுடன் பிள்ளைகள் பேசும் அளவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள். நீங்கள் கொடுத்த தேதியையும் வருடத்தையும் வைத்து பார்க்கும்போது, இங்கே சில நுணுக்கமான ஜாதக விஷயங்களை உங்களுக்கு கூற விரும்புகிறேன். உங்களின் சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கிறார். சுக்கிரனுடன் உங்கள் ராசிநாதனான புதனும் சேர்ந்திருப்பதால் சிறந்த ஆடிட்டராகவும், சிற்ப கலைஞராகவும், கட்டிட, வாகன வடிவமைப்பாளராகவும் விளங்குவார்கள். தேர்வில் கூட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போது உங்கள் பிள்ளைகள் சொந்த நடையில் விடையளிப்பார்கள். மிருகசீரிஷம் 3, 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக 28 முதல் 34 வயதிற்குள் குழந்தை பாக்யம் அமைந்து விடும். ஏனெனில் ஏறக்குறைய 20 வயது முதல் பாதகாதிபதியான குரு தசை நடக்கும் போது தாமதத்திற்கு வாய்ப்புகள் உண்டு. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருக்கருக்காவூர் கர்பரட்சாம்பிகை கோயிலுக்கு சென்று வாருங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள குழந்தைகளுக்கு மரப்பொம்மைகள் வாங்கிக் கொடுங்கள். குல தெய்வ வழிபாட்டை விட்டிருந்தால் இனி தொடருங்கள். பொதுவாக உங்கள்குல தெய்வம் பெண் தெய்வமாக
இருக்கவே வாய்ப்பு அதிகம்.

?எங்களுக்கு சொந்தமாக நிலம், வீடு என்று எதுவுமே இல்லை. எப்போது வாங்குவேன். வாழ்க்கை முழுவதும் வாடகை வீடுதானா என்கிற கவலை என்னை வாட்டுகின்றது? தற்போது ஒரு இடத்தை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றேன். வழி கூறுங்கள்.
 - கமலா, திருத்துறைப்பூண்டி.

நீங்கள் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்திலேயே பிறந்திருக்கிறீர்கள்.  சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக வருவதால் அரசாங்க அலுவலகங்கள், தலைவர்களின் சிலைக்கு அருகில் வீடு அமையும் வாய்ப்பு அதிகம். அதிலும் நீங்கள் வசிக்கும் வீடு ஊரின் கிழக்குப் பகுதியாக இருந்தால் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.   மகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள்தான் வீட்டு விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டுவீர்கள். பெட்ரூம் தவிர, தனக்கென்று தனி அறை என்றும் நீங்கள் அமைத்துக் கொள்வீர்கள். அதுபோல அடிக்கடி வீடு மாற்றுவது. அட்ரஸ் மாற்றுவது என்கிற விஷயமெல்லாம் பிடிக்காது.  இன்னும் ஒருவருடத்திற்குள் சிறிதாக லோன் போட்டு வீடு கட்டுவீர்கள். போகப்போக பக்கத்து இடம் ஏதாவது விலைக்கு வருகிறதா என்று பார்த்து வாங்குவீர்கள்.

சகோதரனோ அல்லது சகோதரிக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் சில முரண்பாடான சூழ்நிலையில் உங்களுக்கு வந்து சேரும். மகம் நட்சத்திரம் ஞானகாரகனாகிய கேதுவின் ஆதிக்கத்தில் வருவதால்,  கோயிலுக்கென்று இடத்தை ஒதுக்குவீர்கள்.  உங்கள் ராசிநாதன் சூரியன். நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த இரண்டும் இணைந்த அமைப்பு கிரகணத்தை காட்டுகிறது. எனவே,   யாரேனும், ‘‘அடுத்த வருஷம் இந்த இடத்துக்கு பக்கத்துல இருநூறு அடி ரோடு வரப்போகுது.  அடுத்த வருஷம் பத்து மடங்கு கூடிடும்’’ என்றால் உடனே நம்பிவிடாதீர்கள். நம்பிக்கைக்கு உரிய செய்தியா என்று விசாரித்துதான் வாங்க வேண்டும்.  

சிறு தொழிற்சாலை, வெல்டிங், லேத் கம்பெனி, மெக்கானிக் ஷெட் போன்றவை உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்காது பார்த்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் இந்த வருட இறுதிக்குள் வாங்கி விடுவீர்கள்.  சிம்ம ராசிக்கு நான்காம் இடமாக அதாவது வீட்டு யோகத்தை தரும் இடமாக விருச்சிக ராசி வருகிறது. அந்த ராசிக்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். பொதுவாகவே செவ்வாய்க்கு அதிபதியாக முருகன் வருகிறார். எனவே முருகனை தரிசிப்பது மிகவும் அவசியமாகும். அப்படி நீங்கள் தரிசிக்க வேண்டிய தலமே கந்தன்குடி ஆகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் & காரைக்கால், மயிலாடுதுறை & காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன்குடி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்