SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜூன் 15 முதல் 21 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல ஆதாயம் மிகுந்த பெரிய மாற்றம் ஏற்படுமுங்க. புதிய தொழிலமைப்புக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனா, அரசுத்துறை ஊழியர்கள் ரொம்பவும் கவனமா செயல்படணுமுங்க. முக்கியமா எந்தக் கையெழுத்துப் போடுமுன்னாலும் நல்லா படிச்சுப் பார்த்துட்டு போடுங்க. உங்களைக் கவிழ்க்கறதுக்குன்னே காத்துகிட்டிருக்கறவங்களோட சதிவலையில சிக்கிக்காதீங்க. உத்யோகம் மட்டுமல்லாம, பிற எல்லா விஷயத்திலேயும் நீங்க எடுக்கற முடிவுதான் சரியானதுன்னு விவாதம் பண்ணாதீங்க. பிறர் சொல்லக்கூடிய யோசனைகளும் குறிப்பிட்ட விஷயத்துக்கு நல்ல பலன்களைக் கொடுக்குமுங்க. ரத்தத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க. ஏற்கெனவே சர்க்கரை, ரத்த அழுத்த பாதிப்பு இருக்கறவங்க முறையாக பரிசோதனையும் மருத்துவமும் எடுத்துக்கணுமுங்க.

பணிபுரியும் இந்தத் தேதிப் பெண்களுக்கு புது கௌரவம் கிட்டும். புதன்கிழமை பெருமாள் தரிசனம் பண்ணுங்க; பெரிய நன்மைகள் காத்திருக்குங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பார்த்த இடத்லேர்ந்து நல்ல செய்திகள் வருமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுமுங்க. பதவி, சம்பள உயர்வுகளும் சலுகைகளும் கிடைக்குமுங்க. பொதுவாகவே யோகம் மிகுந்த வாரம்ங்க இது. தொடர்ந்து வந்த மன அயர்ச்சி, நம்பிக்கையற்ற தன்மைகள்லாம் மாறுமுங்க. புத்துணர்வோடு செயல்படுவீங்க. அனுபவ அறிவால புதுப் பிரச்னைகளை சமாளிப்பீங்க. சிலர் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. பயணத்தின் போதும் போகிற நாட்டிலும் கூட இருக்கறவங்ககிட்ட எச்சரிக்கையா இருங்க. முதல் பயணப் பதட்டத்தை வெளிக் காண்பிச்சுக்காதீங்க. சளி உபத்திரவம் தெரியுதுங்க; தொண்டைப் பகுதி பாதிக்கப்படலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு ஏற்படலாம்; சிறு உடல் உபாதையையும் அலட்சியப்படுத்தாம, உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை தரிசனம் பண்ணுங்க; தொட்டது துலங்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோக, தொழில், வியாபார இனங்கள்ல உங்க முயற்சிகள், யோசனைகள், அணுகுமுறைகள் எல்லாம் உங்களைப் புது உயரத்துக்குக் கொண்டு போகுமுங்க. மறைமுக எதிரிகள் பலம் குறையும். நேரிடையாக எதிர்த்தவங்களும் தங்களோட எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, நட்புக் கரம் நீட்டுவாங்க. பழைய கசப்பான சம்பவங்களை நினைவுபடுத்தி, அவங்களை தர்மசங்கடப்படுத்தாதீங்க. நரம்பு மண்டலம் மற்றும் கண்கள்ல கோளாறு வரலாமுங்க. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தவங்க, அதற்கான மருந்துகளை, மருத்துவர் சொல்படி, இடைவிடாம எடுத்துக்கணுமுங்க. விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவோ, சுற்றுலா அல்லது தொழில் நிமித்தமாகவோ மேற்கொள்ற பயணங்கள் எதிர்கால நன்மைகளைத் தருமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்குத் தடைபட்டிருந்த சுப விசேஷங்கள் நிறைவாக நடந்தேறுமுங்க. வியாழக் கிழமை அனுமன் தரிசனம் பண்ணுங்க; விட்டதையெல்லாம் பிடிப்பீங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல உங்க முயற்சிகளுக்கு பாராட்டும் சாதனைகளுக்கு விருது மற்றும் பிற சலுகைகளும் கிடைக்குமுங்க. தொழில்ல ஈடுபட்டவங்க அது கூட்டுத் தொழிலாக இருந்தா, அதிலேர்ந்து விலகி, தனிப்பட்ட முறையில தொழிலை ஆரம்பிப்பீங்க; புது ஒப்பந்தங்களும் கிடைக்குமுங்க. கணவன்-மனைவி உறவில் எந்த நெருடலும் இல்லாம பார்த்துக்கோங்க. உங்க அன்யோன்யத்தைக் கண்டு பொறாமைப்படறவங்க அந்த உறவுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணக் காத்திருக்காங்க. அதனால பிற குடும்ப விவகாரங்கள்ல நீங்க தலையிடாதீங்க; உங்க குடும்ப விவகாரங்கள்ல பிறர் தலையிடறதையும் அனுமதிக்காதீங்க. இதனால ஏற்கெனவே இருந்த பல சிக்கல்கள் சுலபமாகத் தீர்ந்திடுமுங்க. உஷ்ணத்தால வயிற்றில் பிரச்னைகள் வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு வெள்ளிப் பொருள் சேர்க்கை ஏற்படுமுங்க. பெருமாளை வெள்ளிக்கிழமையில தரிசனம் பண்ணுங்க; புது யோக காலம் பிறக்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல இனிய சுபவிசேஷங்கள் நடந்தேறுமுங்க. வீட்டுப் பெரியவங்க முயற்சியால, பூர்வீகச் சொத்தின் உரிய பங்கு கிடைக்குமுங்க. இந்தத் தேதி இளைஞர்களோட வாழ்க்கைத் தரம் உயருமுங்க. முன்னேற்றமே குறிக்கோளாக உழைக்கற இளைஞர்களுக்கு இந்த வாரம் பல நல்ல வாய்ப்பு களைத் தருமுங்க; கெட்டியாகப் பிடிச்சுக்கோங்க. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. சிலருக்கு உயர் படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்கான முதல் பயணமாக இருக்கலாம். வேறு சிலருக்கு, அது தொழில் சார்ந்த வழக்கமான பயணமாகவும் இருக்கலாம். உத்யோகத்ல உங்க யோசனை ஏற்கப்படுமுங்க. வியாபாரம், தொழில்லேயும் புது அணுகுமுறையால லாபம் பெறுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தொழிலதிபர்களாக இருந்தா மேன்மை நிச்சயமுங்க; பிற பெண்கள் அவரவர் துறையில சிறப்பு பெறுவீங்க. வியாழக்கிழமை, மகான் ராகவேந்திரரை தரிசனம் பண்ணுங்க; மகிமை பொங்க வாழ்வீங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எல்லா விஷயங்களுமே இந்த வாரம் அனுகூலம் பெறுமுங்க. வியாபாரம், தொழில் இனங்கள் முன்னேற்றம் காணுமுங்க. உத்யோகத்ல உங்களுக்கு நியாயமான உயர்வுகள் கிடைக்கும்; அதே சமயம் இதனால் பகையும் வளருங்கறதால யாரையும் துச்சமாகப் பேசாதீங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல உங்க மதிப்பு உயரும். புது நண்பர்கள் அறிமுகமாவாங்க; அவங்களால எதிர்கால நன்மைக்கு அஸ்திவாரம் போட்டுக்க முடியுமுங்க. ஆனாலும், அவங்க நட்பு எல்லையை வீட்டுக்கு வெளியவே வெச்சுக்கறது நல்லதுங்க. குடும்ப சிக்கல்களை குடும்பத்தார் ஆலோசனையோடு தீர்க்கப் பாருங்க. செல்லப் பிராணிகள் வளர்க்கறவங்க ஜாக்கிரதையா இருங்க; ஏதேனும் பிரச்னை ஏற்படலாம். காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல சிக்கல் ஏற்படலாம்; சளித் தொந்தரவை உடனே கவனிங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்குத் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். சனிக்கிழமை சிவ பெருமானை தரிசனம் பண்ணுங்க; எல்லாம் சீராகும்.


7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொடர் முயற்சிகள் வெற்றி பெறுமுங்க. வியாபார விஸ்தரிப்பு, தொழில் அல்லது பணி மாற்றத்துக்காக செய்யற முயற்சிகளால எதிர்பார்த்ததைவிட கூடுதல் ஆதாயம் பெறுவீங்க. கணவன் மனைவி அனாவசியமா வாக்குவாதத்ல ஈடுபடாதீங்க. நியாயமான பிரச்னைக்காக விவாதிக்கறது தப்பில்லே; ஆனா, இதிலே ஈகோ பார்த்து, யார் விட்டுக் கொடுக்கறதுன்னு யோசிக்காம, எந்தப் பக்கம் நியாயம் இருக்கோ அந்தப் பக்கத்துக்கு ஆதரவா இருந்திடுங்க. அதேபோல சகோதர உறவுகள்லேயும் எந்த விவகாரத்தையும் பேசியே தீர்த்துக்கணுமுங்க; இதுக்காக மத்தியஸ்தம் பண்ண மூன்றாவது நபரோட உதவியை நாடாதீங்க; அவங்க உங்க மோதல்ல குளிர் காய்வாங்க; அப்புறம் அவமானமாகப் போயிடும். அஜீர்ணம், உணவு எதுக்களிப்பதுன்னு உபாதை வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு நீண்ட நாள் கனவு நனவாகுமுங்க. திங்கட்கிழமை சிவபெருமான் தரிசனம் பண்ணுங்க; சிறப்புகள் கூடும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் ஏற்படலாமுங்க. நன்மைதான். மறைமுக எதிரிகள் மனம் மாறுவாங்க; புதிய நட்புகள் பலம் சேர்க்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருக்கறவங்க ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணுமுங்க. உணவுக் கட்டுப்பாடு ரொம்பவும் அவசியமுங்க. பிள்ளைகளோட வாக்குவாதம் பண்ணாதீங்க. அவங்க போக்கு  பிடிக்கலேன்னாலும், அதைப் பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. பிற குடும்பத்துப் பிள்ளைகள் யாரையும் உதாரணம் காட்டாம, குடும்பச் சூழ்நிலையை விளக்கி, அதுக்கேற்றபடி நடந்துக்க அறிவுறுத்துங்க. அதே போல பெற்றோரிடமும் எந்த மனக்கசப்பையும் காட்டாதீங்க. வெளிப்படையா, ஆனா, நிதானமா பேசிடுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு வயிற்று உபாதை ஏற்பட லாம். சிலர் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். செவ்வாய்க்கிழமை அம்பிகையை தரிசனம் பண்ணுங்க; அனைத்தும் நலமாகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

படிப்பு, உத்யோகம், தொழில் காரணமாகப் பிரிந்த குடும்பம் ஒன்று சேருமுங்க; மனவேற்றுமையால பிரிஞ்சவங்க, வீட்டுப் பெரியவங்க முயற்சியால ஒண்ணு சேருவீங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல நன்மைகள் அதிகரிக்குமுங்க. உங்க வளர்ச்சிக்குப் புது நட்புகள் வழிகாட்டுமுங்க. இந்தத் தேதி இளைஞர்களின் காதல் திருமணத்துக்குப் பெற்றோரின் ஆதரவு கிடைக்குமுங்க. வெளி மாநிலம், வெளி நாட்டிலிருக்கற உறவுக்காரங்க, நண்பர்களோட யோசனை, உதவிகள் எல்லாம் உங்களை ஒருபடி மேலே உயர்த்துமுங்க. உத்யோகத்ல மேன்மை உண்டுங்க. சிலருக்குக் கூடுதல் ஊதியம், சலுகைகள் கொண்ட புது வேலையும் கிடைக்கலாம். கழிவுப்பாதையில் கோளாறு தெரியுதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள், உறவினர் மத்தியில மதிப்பு கூடப் பெறுவீங்க. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை தரிசனம் பண்ணுங்க; தனித்து அடையாளம் காணப்படுவீங்க.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்