SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் கோயில்கள்

2022-06-01@ 12:23:38

?என் வாழ்க்கை சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறு விஷயத்திற்கு கூட கடன் வாங்கி வாழ்வை நடத்தும் சூழல் உள்ளது. திருமண வாழ்வும் பிரச்னையாக உள்ளது. ஏதேனும், யோக காலம் அமைந்து முன்னேறுவேனா?
 - சங்கரன், விருதுநகர்.

நீங்கள் புனர்பூசம் நட்சத்திரம், மிதுனம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமை பெற்றவர்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். உங்களின் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரிதான். இந்த மூன்று கிரகங்கள் நினைத்தால் எல்லாமுமே சந்தோஷமாக மாறும்.உங்களின் லக்னாதிபதியான புதன், சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயோடு சேர்ந்திருப்பதால் கொஞ்சம் போராட்டமான, எதற்கெடுத்தாலும் கை ஏந்தும் நிலையில் இருக்கிறீர்கள். இதனாலேயே எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள். சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் குழந்தைபோல கோபப்படுகிறீர்கள். திருமண வாழ்வும் நிம்மதியற்று இருக்கின்றது. உணவில் பச்சைப் பயறு, சுண்டைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக சனி பகவான் உங்களுக்கு பாக்கியாதிபதியாக அதாவது ஒன்பதாம் இடத்திற்குரியவராக வருகிறார். அதே சமயம் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். இதனால் அலைச்சலை கொடுத்து ஆதாயத்தை அதிகரிக்கச் செய்கிறார். தாமதப்படுத்தினாலும் தரமானதைத் தருவார். உங்களின் சொந்த ஜாதகத்தில் சனி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றார். அதனால் கவலை வேண்டாம். வரும் 2023ம் வருடம் மார்ச் மாதத்திலிருந்தே நல்ல நேரம் தொடங்கி விடும். உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான் அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி, 8, 17, 26, சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப் படுத்த முதியோர்களுக்கு உதவுங்கள். சாலை விபத்தில் சிக்கிக் கொள்வோருக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். பதவி, பூர்வ புண்ணியானாம் என்பார்கள். அது நன்றாக இருப்பதற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் முக்கியமாகும். உங்களுக்கு எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களில் சுக்கிரனும் ஒருவர். உங்களுக்கு சுக்கிரனும் நன்றாக இருப்பதால் இப்போதைக்கு பிரச்னை இருப்பதாக தெரிந்தாலும் போகப்போக சரியாகும்.

கீழேயுள்ள அபிராமி அந்தாதி பாடலை தினமும் 11 முறை கூறுங்கள். திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்கஎங்கட் கொருதவம் எய்தியவா! எண் இறந்த விண்ணோர்தங்கட்கும் இந்தத் தவம் எய்து மோதரங் கக்கடலுள்வெங்கட்பணி அணை மேல்துயில்கூரும் விழுப்பொருளே

?நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். தற்போது ஒரு T.V. தொடர் தயாரித்து, இயக்கி உள்ளேன். கடன் உள்ளது. தொழிலில் வெற்றி பெற்று கடனை அடைப்பேனா?
 - விஜய்ராஜ், சென்னை.

நீங்கள் கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். துலாம் லக்னம் என்பது சுக்கிரனுக்கு எழுச்சி வீடு. கூட்டம், மேடை, எழுத்து, திரைப்படம் என்று எது கிடைத்தாலும் வெளுத்து வாங்குவீர்கள். உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் உங்களை மறந்தாலும் சனி, புதன், சந்திரன் மூவரும் மறக்காமல் நல்லதையே செய்வார்கள். மேலும் அவர் சுகாதிபதியும், பூர்வபுண்ணியாதிபதியும் ஆவார். உங்கள் ஜாதகத்திலுள்ள சனியை பலப்படுத்த எள் உருண்டையை சாப்பிடுங்கள்.  பறவைகளில் புறா உள்ளிட்ட இன்னபிற பறவைகளுக்கு தானியங்கள் வையுங்கள். மாற்றுத் திறனாளிகளை தேடிச்சென்று உதவுங்கள்.

உங்களுக்கு இப்போதுதான் குரு தசை முடிந்திருக்கிறது. துலா லக்னத்திற்கு குரு மூன்றுக்கும் ஆறுக்கும் உடையவன். அதுமட்டுமல்லாது குரு லாப ஸ்தானத்தில் பதினோராம் இடத்தில் அமர்ந்திருக்கின்றார். நீங்கள் லாபம் எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்திருந்தாலும், ஆறுக்குரியவராக குரு இருப்பதால் கடனை கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. இப்போது குரு தசை முடிந்து இப்போதுதான், சனி தசை தொடங்கி, சுய புக்தி நடந்து கொண்டிருக்கின்றது. சனியும் உங்களுக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்து நீசமடைந்திருக்கின்றார். ஆனாலும், உங்களின் யோகாதிபதியே சனி பகவான்தான்.

மேலும், சனியை குருபகவான் ஒன்பதாம் பார்வையாக பார்க்கின்றார். அதனால், சனி கொஞ்சம் சுபத்துவம் அடைகின்றார். இப்போது கோசாரத்தில் சனி நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மேலும், சுக்கிரனை பார்க்கிறார். அதுமட்டுமல்லாது கோசாரத்திலேயே குரு பகவான் மீனத்தில் அமர்ந்திருக்கிறார். கடன்களை முதலில் அடைக்க பாருங்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் சந்நதிக்குச் சென்று தீபமேற்றி வர கடன்கள் அடையத் தொடங்கும்.

சனி தசை, சுயபுக்தி 2024ல் முடிவுறும். 2023 பாதி தாண்டும்போதே உங்களின் வெற்றிக் கணக்கை தொடங்குவீர்கள். சுக்கிரன் உங்களுக்கு நல்லதே செய்வார். அவர்தான் திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் உங்களை மிளிரச் செய்பவர். அதனால், வரும் 2023 மார்ச் மாதம் நிகழப் போகின்ற சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே வரும். ஏனெனில், நான்குக்கு உரிய சனி பூர்வ புண்ணியத்திற்கு வரும்போது நிச்சயம் சாதிக்க தொடங்குவீர்கள். மந்தனான சனி கொஞ்சம் மெதுவாகத்தான் செயல்படுவான். அதனால் கொஞ்சம் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும், மீன ராசியிலிருந்து குரு பகவான் வெளியே வந்து பிறந்த சுய ஜாதகத்திலுள்ள சனியை தாண்டிச் செல்ல வேண்டும். மேலே சொன்ன காலமே மிகச் சரியாக இருக்கும். உங்களுக்கு அரசின் ஆதரவு உண்டு. ஏனெனில், பத்திலே அமர்ந்த சூரியன் அதைச் செய்வார்.

நீங்கள் மீனவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று பாருங்கள். குறைந்த பட்சம் அன்னதானம் செய்யுங்கள். அந்த எண்ணிக்கை எட்டாக இருந்தால் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாது சனிக் கிழமையன்று விரதம் இருந்து நவக்கிரகத்தில் சனிக்கு விளக்கு போடுங்கள். அனுமன் சாலீஸா எனும் வடமொழி நூலை கேட்கலாம். படிக்கலாம். அப்படியில்லையெனில் சுந்தர காண்டத்தை எடுத்துக் கொண்டு ஏதேனும் சில அத்தியாயங்களை படியுங்கள். 12ல் கேது கன்னி வீட்டில் அமர்ந்திருப்பதால் தனிமையில் இருக்கும்போதெல்லாம் மகாகணபதி மந்திரத்தை யாரிடமேனும் தீட்சையாக பெற்றுக் கொண்டு ஜபியுங்கள். அது உங்களை ஆன்மிகத்தில் தீர்க்கமாக கொண்டு செல்லும். உங்களின் அனைத்து தடைகளையும் அது தவிடு பொடியாக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்