SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேழைக்குள் பராசக்தி இருக்கும் ஆலயங்கள் உள்ளனவா?

2022-06-01@ 10:04:43

ஆம், பேழைக்குள் பராசக்தியாக ஏழு தலங்களில் பேரருள் பெருக்கி வீற்றிருக்கிறாள். காரைக்கால் அருகேயுள்ள திருமலைராயன் பட்டினத்தில் ஆயிரங்காளியம்மனாகவும், வாழ்மங்கலத்தில் வீரமாகாளியம்மனாகவும், திருக்களாச்சேரியில் பத்ரகாளியாகவும், காட்டுச் சேரியில் வனபத்ரகாளியாகவும், குடவாசலில் வீரமகாளியாகவும், புன்னைநல்லூர் - மாரியம்மன் கோயில் இருக்கும் தலத்திற்கு அருகேயே வீரமாகாளியாகவும், வலங்கைமானில் பத்ரகாளியம்மனாகவும் திருப்பேழை எனும் பெட்டிக் காளியம்மனாக அருள்பாலிக்கிறாள். ஒரே நூலில் தொடுத்த ரெட்டைப் பூக்கள்போல ஒரே மாதிரியான சரிதமும், தொடர்பும் இக்கோயில்களுக்குள்
காணலாம்.  

இந்த ஏழு கோயில்களிலும் பேழைதான் காளி. மூடிய பேழையைத்தான் எல்லோரும் வணங்கி வருவர். ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேழையைத் திறந்து காளிக்கு உருவம் அமைத்து மாபெரும் உற்சவமாகவும் விழாவாகவும் கொண்டாடி மீண்டும் பேழைக்குள் வைத்து விடுவர். சக்தி என்பவள் உருவமுள்ளவளா. ஆமாம், அருவமும் அவளே. இதுவே பெட்டிக்குள் வைத்து மறைத்தல். அருவமானவள் உருவமாகி மீண்டும் அருவுருவாக பேழைக்குள் இருத்தலே அவளின் காம்பீர்யம். பேழையே அவளின் பீடம். அங்கிருந்தே பக்தர்களை காக்கிறாள். வளர்க்கிறாள். வளம் பெறவும் வைக்கிறாள். ‘‘தாயே மீண்டும் உருவிலே வா’’ என அழைக்கும்போது ஆண்டுக்கோ சில ஆண்டுகளுக்கோ ஒருமுறை காட்சி தருகிறாள். மீண்டும் பேழைக்குள் சென்று பிரிவுத் துயர் தருகிறாள். சக்தியின் மீதான பக்தியை பெருக்க வேண்டி தாபத்தை கூட்டுகிறாள்; அதற்குப் பிறகு அருவ ஆட்சிதான். அவள் எப்படி வேண்டுமானாலும் இருப்பாள் என்பதின் தீர்மானமே இம்மாதிரியான வழிபாடுகள் வெளிப்படுத்துகின்றன.

இன்னொரு புறம் பார்த்தால் உடலுக்குள் உயிராக சக்தியான காளி திகழ்கிறாள். உடலே இங்கு பேழை. மாயை வயப்பட்டு ஜீவன் தான் இந்த உடலோ என்று நினைக்கும்போது உள்ளுக்குள்ளிருந்து பொங்கி எழுந்து நானே உன்னை இயக்குகிறேன். நீயாக எதையும் செய்யவில்லை என்று குருவாகவும் போதிக்கிறாள். உடல் கிடக்கட்டும் உள்ளுக்குள் எது உடலை இயக்குகிறது என்பதைக் கவனி என்கிற வேதாந்தமும் உள்ளது. கடைசியில் நீ என்னை புரிந்துகொள்ள முடியாது. உடல், உயிர் அனைத்தும் நானே எனவும் அத்வைதமாகியும் நிற்கிறாள். மனதால் பிடிக்கமுடியாத மகோன்னதமான சக்தி இது என்று காட்டவே இத்தனை விசித்திரக் கோலம் பூணுகிறாள்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்