SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வராஹம் எனும் வேத ஞானம்

2022-05-12@ 17:52:07

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வராஹ ஜெயந்தி எப்போது?

கஸ்யப மகரிஷிக்கும், திதிக்கும் தவறான நேரத்தில் பிறந்த இரண்யாட்சனும், இரண்யகசிபுவும் தேவர்களை துவம்சம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தனர். தர்மம் பெருகிவிட்டதே என அக்கூட்டமே கவலையாய் அமர்ந்திருந்தது. ஆனால், அதில் இரண்யாட்சன் எனும் இரண்யகசிபுவின் தம்பி மட்டும் பிழைத்திருந்தான். அவனுக்குள் மட்டும் கனல் கிளர்ந்து கிடந்தது. பூலோகமும், தேவலோகமும் சிதறடிக்கப்படவேண்டும் என்று குறியாய் அலைந்தான். பூலோகத்தின் ஆதாரம் எது என்று தேடினான். வேதமும், யாகமும் நெருக்கமாக பின்னப்பட்டு பூமி தூக்கி நிறுத்தப்பட்டிருப்பதை நினைவில் நிறுத்தினான். ஒருநாள் தன் மாபெரும் கூட்டத்தை ஒன்றாய் திரட்டினான். ‘என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்’ என்று முஷ்டி மடக்கிக் காட்டியது.

இரண்யாட்சன் தன் மாபெரும் படைகளோடு பூமியின் மையத்திற்கு வந்தான். பூலோகத்தின் ஈர்ப்புச் சக்தியாய் விளங்கிய வேதமெனும் வேர் மெல்ல அறுபட்டது. யாகம் எனும் தீப்பிழம்பு அணைய ஆரம்பித்தது. தர்மம் தலைகீழாய் தொங்கியது. மானிடர்கள் மனம் குமைந்து குலுங்கி அழுதார்கள். அசுரர்களின் அநியாயத்தால் பூமாதேவி தளர்ந்தாள். அவர்களின் வேகம் தாங்காது சோர்ந்தாள். பூமியின் பாரம் அவளை ஒரே அழுத்தாய் அழுத்த நிலைகுலைந்த பூமாதேவி தன் நிலை பிசகினாள். பூமி பேரதிர்வாய் அதிர்ந்தது. மெல்ல தன் பாதையில் பிழன்றது.  ஓர் மாபெரும் சமுத்திரத்தை நோக்கி அதிவேகமாய் சரிந்தது. சமுத்திரம் அந்த பூமிப்பந்தை அப்படியே ஹோ... என்று உள்வாங்கியது. மூவுலகும் ஒருமுறை அதிர்ந்து நின்றது. அதலபாதாளத்தில் சென்று மறைந்தது. அது விழுந்தவுடன் அதனின்று தெறித்த சாரல் வைகுண்டம் வரை வீசியது.

 பாற்கடல் பரந்தாமன் சட்டென்று எழுந்து அமர்ந்தார். அவர்கள் அதற்குள் தேவலோகம் போய்விட்டிருந்தார்கள். இந்திரனும் தேவக் கூட்டமும் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அட்டூழியம் தாங்காது அலறித் துடித்தார்கள். ‘எம்பெருமானே... எம்பெருமானே...’ என்று கைதொழுதார்கள். பிரம்மாவின் படைப்புத் தொழில் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. பிரம்மா படைக்கப் படைக்க அழித்துக் கொண்டே இருந்தார்கள். பிரம்மா கண்கள் மூடினார். கண்களில் நீர் வழிய வைகுண்ட வாசனைத் தொழுதார்.

தேவர்களும், முனிவர்களும் இதென்ன விசித்திரம் என்று வியந்தார்கள். எல்லா தேவர்களும், முனிவர்களும் அங்கு பிரசன்னமாயினர். அதன் பிரகாசம் அசுரர்களின் கண்களை கூசச் செய்தது. தேவர்கள் அதில் அழகாய் ஒளிர்ந்தார்கள். அதன் நாசியும், முகமும் நீண்டு பலமான முகவாயோடு இடதும், வலதும் அசைந்தது. அசையும்போது பிடரி சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பு மணியோசைபோல் எட்டு திக்குகளிலும் எதிரொலித்தது. எம்பெருமானின் கண்கள் அதிகூர்மையாக எல்லையற்ற பார்வையாய் படர்ந்தது.

அதன் நாசியிலிருந்து வெளிப்பட்ட மூச்சு வேதசப்தங்களாக எதிரொலித்தன. ஓர் இனிய நாதம் மூவுலகையும் ஆட்கொண்டது. எம்பெருமான் வேதாந்த வராஹமாய் கர்ஜித்தார். உடலிலுள்ள ஒவ்வொரு ரோமக் குழிகளிலும் யாகங்கள் மறைந்திருந்தன. யாக சொரூபியாக இருந்ததால் எல்லா தேவதைகளும் அவருக்குச் சமீபமாய் விளங்கினர். எம்பெருமானின் காதுகள் விடைத்து மேலே தூக்கியிருந்தன. பரந்த மார்போடும், திரண்ட தோள்களோடும் நடந்து வந்தார். நெடிதுயர்ந்து நிற்கும் எம்பெருமானை சகல தேவர்களும், ரிஷிகளும் தொழுது நின்றனர்.

அவர்கள் பார்த்திருக்கும் போதே பகவான் யக்ஞவராஹர் பூமியை விழுங்கிய மகாசமுத்திரத்தைப் பார்த்தார். அந்த கரைகளற்ற சமுத்திரத்தை தன் நீண்ட குளம்புகளால் பிளந்து கொண்டு பாதாளம் வரை சென்றார். இரண்யாட்சன் தன் அசுரக் கூட்டத்தோடு வந்தான். வராஹரின் வினோதம் பார்த்தான். வாய்விட்டுச் சிரித்தான். தன் கதையால் அவரை தொடர்ச்சியாய் தாக்கினான். வராஹர் வஜ்ரமாய் நின்றார். அதைக் கண்ட இரண்யாட்சன் இருண்டான்.

அந்த இருளான பாதாளத்தில் வராஹர் வைரமாய் ஜொலித்ததைப் பார்த்துப் பயந்தான். தன் பயம் மறைத்து, கோபமாய் அவரை தாக்க அந்தக் கூட்டத்தோடு பாய்ந்தான். வராஹர் அந்தக் கூட்டத்தை நசுக்கி நீரில் தூக்கிப் போட்டார். வராஹருக்கும், இரண்யாட்சனுக்கும் கடுமையான போர் நடந்தது. வராஹர் இரண்யாட்சனை இரண்டாகப் பிளந்தார். அவன் அலறலால் மூவுலகமும் அதிர்ந்தது. வராஹர் அஞ்ஞானம் எனும் சமுத்திரத்தில் வீழ்ந்த பூலோகத்தை தன் நாசியின் நுனியில் தாங்கினார். இரண்யகசிபுவையும் வராஹர் நோக்கினார். மீண்டும் உனக்காக வருவேன் என்பதுபோல அந்தப் பார்வை இருந்தது.

வீ  ட்டிலும் மற்ற இடங்களிலும் வராக ஜெயந்தி ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப் பட்டாலும், ஸ்ரீரங்கத்திலும் வராகத் தலமான ஸ்ரீமுஷ்ணத்திலும் 29.4.2022 (சித்திரை 16) வெள்ளிக்கிழமை (சித்திரை ரேவதி நட்சத்திரம்) அனுசரிக்கப்படுகிறது. சில ஜெயந்தி மகோத்சவங்கள் இவ்வாறு இருதேதிகளிலும் கொண்டாடப்படுவது என்பது இயல்புதான். ஏனெனில், வராகம் போன்ற அவதாரங்கள் காலத்திற்கு உட்படாத காலாதீதமான புராணகாலங்களில் நிகழ்ந்தன. எனவே பக்தர்களின் விருப்பத்திற்கும் தொன்றுதொட்டு வந்த நடைமுறையாலும் இருதேதிகளில் கொண்டாடப்படுகின்றது.

தொகுப்பு: திருவருணை ஸ்ரீ கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்