SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு சொர்க்கமாக...

2022-05-10@ 15:52:38

இஸ்லாமிய வாழ்வியல்

பேராசிரியராய் இருக்கும் நண்பர் ஒருவரின் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. பேராசிரியர் நல்ல எழுத்தாளரும்கூட. ஆகவே, அன்புத் தம்பியின் திருமண நிகழ்வை ஒட்டி, இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படையில், மகிழ்ச்சியான குடும்பம் அமைவதற்கான சில ஆலோசனைகள், வழிகாட்டுதல் களை அவரே எழுதி நூலாக்கினார். அந்தச் சிறிய நூல் திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அந்த நூலில் இருந்து சில துளிகள்:

1. கணவர், எந்த அளவுக்கு அவருடைய தாயை நேசிக்கிறாரோ அதைவிட அதிகமாக மனைவி, தன் மாமியாரின் மீது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

2. பெரும்பாலும் தனிமையைத் தவிர்த்து மாமியாரோடு இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
3. மாமியாரோடு (இரண்டாம் நிலை பெற்றோர்) அதிகம் பேச வேண்டும்.

4. மாமியார் - மாமனார், கொழுந்தன் - கொழுந்தியாள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது கணவன் - மனைவி தனிமையில் (அறையில்) இருக்க வேண்டாம்.

5. தாய்வீட்டிற்குத் தொலைபேசியில்  பேசும் போது தனி அறையில் அமர்ந்து பேசவேண்டாம். முக்கியமான விஷயங்கள் பேசும்போது மட்டும் தனிமையைப் பயன்படுத்தலாம்.

6. ‘இவர்கள் இப்படித்தான்’ என்று மற்றவர்களை நீங்கள் மதிப்பிடும் ‘அந்த’ எதிர்பார்ப்புகளைக் குறைத்துவிட்டு, “அனைவரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும்” என்ற வைராக்கியத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

7. அனைவரும் அமர்ந்திருக்கும் போதோ (அ) மாமியாரிடமோ தாய்வீட்டுப் பெருமைகளை அதிகம் பேச வேண்டாம்.

8. எதிர்மறைச் சிந்தனைகளை உங்கள் மனதிலிருந்து அகற்றிவிட  வேண்டும்.

9.எப்போதும் நேர்மறைச் சிந்தனைகளோடு பேச வேண்டும்.

10. வீடுகளில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை உடல்நிலை சரியில்லை எனும்போது அவர்களை நலம் விசாரிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களுடன் இருந்து உதவி- ஒத்தாசைகள்  செய்ய வேண்டும்.

11. புதிதாக ஒரு பெண் வீட்டிற்கு வரும்போது ‘தாய்’ என்ற ஸ்தானத்தில் ஒவ்வொரு மாமியாரும் செயல்பட வேண்டும்.

12. தனது பெண்குழந்தையை இன்னொரு வீட்டில் கட்டிக்கொடுத்து அவள் கஷ்டப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத உங்கள் மனநிலை போன்றுதானே, உங்கள் வீட்டிற்கு வந்த மருமகளின் தாய்க்கும் இருக்கும்.

13. உங்கள் மகள் கஷ்டப்படக்கூடாது என்று விரும்பும் நீங்கள், உங்கள்  ம(றுருமகளைக் கஷ்டப்படுத்தக் கூடாது எனும் யோசனை ஏன் உங்களுக்குள் ஏற்படுவதில்லை என்பதை நீங்களே உங்கள்
மனதிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

14. உங்கள் மகளிடம் பேசுவது போன்றே உங்கள் மருமகளிடமும் பேசப்பழகுங்கள்.

15. ஒரு தலைமுறை உருவாக்கத்தின் அடிப்படையாய், ஆணிவேராய் அமைந்திருக்கும் ‘மாமியார்’ என்ற சிறந்த ஆளுமையை உங்கள் தீய சிந்தனைகளால் நீங்களே ஏன் உடைத்துக்கொள்கிறீர்கள்?

16. மகளுக்கும் - (மரு)மகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் வாழக் கற்றுக்கொடுங்கள்.

அருமையான வழிகாட்டுதல்கள்.

கொஞ்சம் விட்டுக்கொடுத்தல், கொஞ்சம் புரிதல், நிறைய அன்பு ஆகியவை நம்மிடம் இருக்குமானால் ஒவ்வொரு வீடும் சுவனப் பூங்காதான்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதிபெற வேண்டும் என்பதற்காக.” (குர்ஆன் 30:21)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்