SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காயத்ரி மந்திர மகிமை

2022-05-04@ 12:26:58

காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி, சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத்தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றதாகும். விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.

காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும்:
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”

காயத்ரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ஒவ்வொரு வருடைய இஷ்ட கடவுளை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. நாம் நாள்தோறும் ஆட்டோ, பஸ், ரயில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், விமானம் மற்றும் கால்நடையாக பயணம் செய்கிறோம்.

நாம் பயணம் செய்யும்போது பலவிதமான இன்னல்கள், பிரச்னைகள் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இம்மாதிரியான தொந்தரவுகளிலிருந்து நாம் விடுபட சில காயத்ரி மந்திரங்களை சொல்வதால் கஷ்டங்கள் விலகி நன்மை அடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. ஆன்மீக பலன் வாசகர்கள் அனைவரும் இந்த காயத்திரி மந்திரங்களை படித்து நன்மை அடைய வேண்டுகிறோம்.

விநாயகர்

ஏகதந்தாய வித்மஹே சூர்பகர்ணாய தீமஹி தன்னோ தந்தி: ப்ரசோதயாது!

முருகன்

கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தன்னோ ஷண்முக: ப்ரசோதயாது!

சிவன்

தத் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ர: ப்ரசோதயாது!
தன் மஹே சாய வித்மஹே வாக் விசுத்தாய தீமஹி தன்னச்சிவ: ப்ரசோதயாது!
நிரஞ்சனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தன்னோ ஷுஷ்ம: ப்ரசோதயாது!

பார்வதி

மஹா தேவ்யைச வித்மஹே ருத்ர பத்னீச தீமஹி தன்னோ கௌரி: ப்ரசோதயாது!
கணாம்பிகாய வித்மஹே பராசக்தியைச தீமஹி தன்னோ கௌரி: ப்ரசோதயாது!

துர்கா

காத்யாயநாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி தன்னோ துர்க்கி: ப்ரசோதயாது!

சூரியன்

பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்ய: ப்ரசோதயாது!

சந்திரன்

சீதப்ரபாய வித்மஹே சோடசகலாய தீமஹி தன்னோ ஸ்ஸோம: ப்ரசோதயாது!

அங்காரகன்

ஆங்கீரஸாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம: ப்ரசோதயாது!

புதன்

ஆத்ரேயாய வித்மஹே சோமபுத்ராய தீமஹி தன்னோ சௌம்ய: ப்ரசோதயாது!

குரு

ஆங்கீரஸாய வித்மஹே ஸுராச்சார்ய தீமஹி தன்னோ குரு: ப்ரசோதயாது!

சுக்கிரன்

பார்க்கவாய வித்மஹே ஸுராச்சார்ய தீமஹி தன்னோ சுக்ர: ப்ரசோதயாது!

சனி

சனைச்சராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி தன்னோ மந்த: ப்ரசோதயாது!

ராகு

பிரும்ம புத்ராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி தன்னோ ராஹூ: ப்ரசோதயாது!

கேது

ஜைமினி கோத்ராய வித்மஹே தூம் ரவர்ணாய தீமஹி தன்னோ கேது: ப்ரசோதயாது!

நந்திகேசர்

வேத்ரஹஸ்தாய வித்மஹே டங்க ஹஸ்தாய தீமஹி தன்னோ வ்ருஷப: ப்ரசோதயாது!
தீஷ்ணச்ருங்காய வித்மஹே வேதபாதாய தீமஹி தன்னோ விருஷப: ப்ரசோதயாது!

சண்டிகேசர்

டங்க ஹஸ்தாய வித்மஹே சிவசிந்தாய தீமஹி தன்னோ சண்ட: ப்ரசோதயாது!

மஹாலட்சுமி

மஹாலக்ஷ்மீச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹி தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாது!

காளி

பிசாசத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ காளீ: ப்ரசோதயாது!

சாஸ்தா

கஜத்வஜாய வித்மஹே ஸ்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ சாஸ்தா: ப்ரசோதயாது!

விருஷபம்

தீஷ்ண சிருங்காய வித்மஹே வேத ஹஸ்தாய தீமஹி தன்னோ விருஷப: ப்ரசோதயாது!
யானை (கஜம்)
சுவேத வர்ணாய வித்மஹே வேத ஹஸ்தாய தீமஹி தன்னோ கஜ: ப்ரசோதயாது!
மயில் (மயூரம்)
பக்ஷி ராஜாய வித்மஹே சுக்ல பங்காய தீமஹி தன்னோ சிகி: ப்ரசோதயாது!

சரஸ்வதி
வாக்தேவீச வித்மஹே விரிஞ்சி பத்னீச தீமஹி தன்னோ வாணி: ப்ரசோதயாது!
சுதர்சனர்
சக்ர ராஜாய வித்மஹே சஹஸ்ர ஜ்வாலாய தீமஹி தன்னோ சக்ர: ப்ரசோதயாது!
பிரும்மா
ஹம்சருடாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி தன்னோ பிரும்ம: ப்ரசோதயாது!

(அருள் பெருகும்)

குடந்தை நடேசன்


- அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை.

தலையங்கம் கண்டேன், சிவராத்திரியின் பயனை கூறி சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். தூக்கம் வரும்போது நம்முடைய மனம், ஆத்மா எனும் சிவத்தை பிடித்துக்கொண்டால் தரிசித்துவிட்டால் அன்று தான் சிவராத்திரி என்பதனை அறிந்துகொண்ட போது அதிர்ந்துபோனேன். சிவராத்திரியின் மகிமையை கண்டு மெய்சிலிர்த்து போனேன். போஜேஸ்வர் ஆலயத்தைப் பற்றி அழகாக விவரித்தது கண்கொள்ளாக் காட்சி. பார்க்கபார்க்க மனம் பரவசத்தில் மிதந்தது. ஆன்மிகம் என்றாலே ‘சிற்பமும் சிறப்பும்’ தாங்க மனம் குளிர்ந்து மனமாரப் பாராட்டுகிறேன். ‘முத்துக்கள் முப்பது’ சிவராத்திரியின் அத்தனை அம்சங்களையும் எங்களுக்கு தந்தது மறக்க முடியாதது.
- வண்ணை கணேசன், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்