SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈகைத் திருநாள்..!

2022-05-02@ 13:21:36

ரமலான் மாதம் முழுவதும் நோன்புக் கடமையை நிறைவேற்றியவர்கள், அதற்கு அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாள் கொண்டாடும் பண்டிகைதான் ஈகைத் திருநாள். இதற்கு ஈகைத் திருநாள் என்று ஏன் பெயர் வந்தது? என்ன காரணம்?பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னர் ‘ஃபித்ரா’ எனும் கட்டாய தர்மத்தை  ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும். எவ்வளவு வழங்கிட வேண்டும்?ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரையும் கணக்கிட்டுத் தலைக்கு இரண்டரை கிலோ அரிசி அல்லது அதன் விலையை ஏழைகளுக்குத் தர்மமாய்த் தந்துவிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனில் தலைக்கு இரண்டரை கிலோ அரிசி - அதாவது பத்து கிலோ அரிசி அல்லது அதன் விலையைத் தர்மமாக வழங்க வேண்டும்.இந்த அரிசியின் தரத்தை எப்படிக் கணக்கிடுவது? நம் வீட்டில் அன்றாடம் சமைப்பதற்கு எந்த விலையில் உள்ள அரிசியைப் பயன்படுத்துவோமோ அந்த விலை அரிசியையே தர்மத்துக்கும் தேர்ந்தெடுக்க வேண்டும்.கிலோ அறுபது ரூபாய் விலையுள்ள அரிசியைத்தான் நாம் அன்றாடம் சமைக்கிறோம் எனில், தர்மம் வழங்க கிலோ முப்பது ரூபாய் அரிசியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அறுபது ரூபாய் விலையுள்ள அரிசியைத்தான் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கவேண்டும்.இந்த ‘ஃபித்ரா’ எனும் தர்மத்தை வழங்குவதன் நோக்கம் என்ன? இரண்டு காரணங்கள். ஒன்று, மகிழ்ச்சி நிறைந்த பெருநாள் அன்று எந்த ஏழையும் “இன்று சாப்பாட்டுக்கு வழியில்லையே” என்று தவித்து விடக்கூடாது. பெருநாள் அன்று யாரும் பட்டினியால் வாடக் கூடாது என்பது முதல் நோக்கம்.

அடுத்து, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றபோது நாம் அறிந்தோ அறியாமலோ சிறுசிறு தவறுகள் செய்திருப்போம். அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைந்துவிடுகிறது. “பெருநாள் தர்மத்தை யார் வழங்கவில்லையோ அவருடைய நோன்பு வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும்” என்று எச்சரித்த நபிகளார்(ஸல்),  “ஃபித்ரா தர்மம் அந்தத் தடையை அகற்றி நோன்பை வானுலகம் அடையச் செய்கிறது” என்று கூறியுள்ளார்.ஆகவே, பெருநாளன்று தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாக ‘ஃபித்ரா’ எனும் தர்மத்தை வழங்கி, ஏழை எளியோரின் பசிப் பிணி போக்கும் பெருநாளாக இருப்பதால்தான் இந்தப் பண்டிகை “ஈகைத் திருநாள்” என்று குறிப்பிடப்படுகிறது.

“ஒரு மாதம் நோன்பிருந்தோம்...வழிபாடுகளில் ஈடுபட்டோம்.. இறைவேதத்தை இதயம் உருக ஓதினோம். ஓதியதைச் செவிதாழ்த்திக் கேட்டோம். தான தர்மங்கள் செய்தோம்..பெருநாள் கொண்டாடினோம். பிரியாணி சமைத்தோம். நாமும் உண்டு நண்பர்களுக்கும் வழங்கினோம். முடிந்தது ரமலான்... முடிந்தது நோன்பு... இனி மனம் போன போக்கில் வாழலாம்” என்று சிலர் கருதக் கூடும்.இது தவறு. தூய ரமலான் மாதத்தில் என்னென்ன ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றோமோ அந்தப் பயிற்சிகள் எல்லாம் அடுத்து வரும் 11 மாதங்களிலும் நம் அன்றாட வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் இறைநம்பிக்கையும் இறையச்சமும் வெளிப்பட வேண்டும். இல்லையேல் நோன்பின்போது பெற்ற ஆன்மிகப் பயிற்சியால் என்ன பயன்?இந்த ஈகைத் திருநாள் எனும் இன்பத் திருநாளில் ஒரு நல்ல மனிதனாய், இறைவனை வணங்கியும் இல்லாதோருக்கு வழங்கியும் ஒரு நல்ல முஸ்லிமாய் வாழ்வோம் என்று
உறுதியேற்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்