SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்காரக சதுர்த்தி... இந்த வார விசேஷங்கள்

2022-04-04@ 13:52:20

4-4-2022 - திங்கட்கிழமை, சௌபாக்கிய கௌரி விரதம்

யுகாதி பண்டிகைக்குப் பின்  வருகின்ற வளர்பிறை திருதியை அன்று இதைக்  கொண்டாடுவார்கள். அம்பாளை கொண்டாடுகின்ற இந்த பண்டி கையை, மிக எளிமையான பூஜையின் மூலம் நாம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள். அடுத்து வரும் திருதியை அட்சய திருதியை. அந்த அட்சய திருதியை வரைக்கும்  கலசத்தை ஆவா கனம் செய்து தினந்தோறும் அம்பாளை பூஜித்துக் கொண்டாடுவதன் மூல மாக பற்பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். திருமணமான பெண்கள் வாழ்வு சிறக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு  நல்ல கணவன் கிடைக் கவும்  இந்த விரதத்தைக்  கொண்டாடுவார்கள். இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகளெல்லாம்  தடை நீங்கி நடக்கும். இது வீட்டிலே கொண்டாட முடியாதவர்கள் இந்த நாளில் ஆலயம் சென்று பெருமாள் ஆலயத்தில் தாயாருக்கும், சிவாலயமாக இருந்தால் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

5-4-2022 - செவ்வாய்க்கிழமை - அங்காரக சதுர்த்தி

செவ்வாய்க் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை ‘‘அங்காரக சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.அன்று செவ்வாய் பகவானின் அருளைப் பெற விரதம் இருந்து விநாயகரை வணங்க வேண்டும்.பூமி யோகம் தரும் மங்களகாரகனான செவ்வாய், பெண்களுக்கு நல்ல கணவன் அமையும் படி அருள் தருவார். அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் விளக்கேற்றி, அருகம்புல் மற்றும் வாசனை மலர்களை வைத்து தூப தீப, நைவேத்தியம் காட்டி பூஜை செய்யவும். மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.  அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். அன்று சந்திரனையும்  தரிசித்து வேண்ட வேண்டும். சிறப் பான கல்வி அறிவு, புத்திக் கூர்மை, ஆயுள், செல்வம், சத் சந்தானம், புகழ் பதவி  என பலவிதமான
நன்மைகளைத் தரும் விரதம் இது.

6-4-2022 - புதன்கிழமை -
சிவனேச நாயனார் குருபூஜை

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிவனேச நாயனார் ஒருவர். காளர் மரபில் அவதரித்தவர்.அறுவையார் குலத்தில்(சாலியர்) பிறந்த இவர் சிவ னடியார்கள் மீது  நேசம் மிக்கவர் என்பதால் இவருக்கு சிவநேசர் என் கின்ற திருநாமம் . நெசவுத் தொழிலை செய்து வந்தார். அதில்  கிடைத்த பணத்தை சிவனடியார்களுக்குச் செலவிட்டு வந்தார். அதுமட்டுமில்லை. தானே அவர்களுக்குத் தேவையான ஆடைகளையும் நெய்து கொடுத்தார். தாம் செய்கின்ற தொழிலின் மூலமாகவே தம்முடைய இறை பக்தியையும் இறையடியார்கள் நேசத்தையும் காட்டமுடியும் என்பதை உறுதி யோடு கடைபிடித்தவர்  சிவநேச நாயனார். இந்த உள்ள உறுதியால் சிவனருள் பெற்று சிவ ஜோதியில் கலந்தார் அவருடைய குரு பூஜை, பங்குனி மாதம் ரோகிணியில்.
அதாவது இன்று.

8-4-2022 - வெள்ளிக்கிழமை - கமல சப்தமி, சந்தான சப்தமி
திதிகளில் ஏழாவது திதி புனிதமானது. சப்தமி என்று பெயர்.சூரிய வழி பாட்டிற்கு சிறப்பானது.பங்குனியில் வளர்பிறை சப்தமி திதி சந்தான சப்தமி என்று வழங்கப்படுகிறது.அன்று வெள்ளிக்கிழமை சேர்ந்திருந்தால் கமலா சப்தமி என்று மஹாலஷ்மி வழிபாட்டிற்கும் உரியதாகிறது.இந்த நாளில் சூரிய பகவானையும்,மஹாலஷ்மியையும் வணங்கினால்,சந்தான விருத்தி உண்டாகும்.குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கண் நோய்கள் தீரும்.கண்கள் ஒளி பெறும்.

8-4-2022 - வெள்ளிக்கிழமை -
கணநாத நாயனார் குரு பூஜை
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் கணநாத நாயனார். அந்தணர் குலத்தில் பிறந்தவர் . இவர் சீர்காழியில் ஆளுடைப் பிள்ளையார் அவ தரித்த திருஞான சம்பந்தரிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர். சிவனடி யார்களிடம்  உருகி உருகி அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவார். எப்போதும் வாயில் சிவநாமம் ஜெபித்துக் கொண்டு சிவ சிந்தனையோடு இருப்பார். சீர்காழி தோணியப்பரிடம் அகலாத அன்பு கொண்டவர். இந்த அன்பின் காரணமாக நல்லதோர் சிவ வாழ்வு வாழ்ந்து  சிவஜோதியில் கலந்தார்.கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்
கணநாதர் திருத்தோணிக் கடவுளார்க்கு
நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து
    நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி
வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி
    வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்
புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்
பொருவில்கணத் தவர்காவல்
பொருந்தினாரே.  
என்ற பாடல் அவர் வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாகச் சொல்லும்.
அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் திருவாதிரை நாள், இன்று.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்