SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-03-21@ 15:25:32

21-3-2022 திங்கட்கிழமை- காரைக்கால் அம்மையார் குரு பூஜை

மூன்று பெண் நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மூத்தவர். இயற்பெயர் புனிதவதியார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும், காரைக்கால் அம்மையார் என்று வழங்கப் பெறுகிறார். இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவர். தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவர். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களைத்தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. பன்னிரு திருமுறைகளில், பதினொன்றாம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன.

காரைக்கால் சிவன் கோயிலில், இவருக்கென தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயில் “அம்மையார் கோவில்” என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது. அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சந்நதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப்பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது. இறைவன், இவரிடம் வேண்டுவன கேள் என, அதற்கு அம்மையார் கேட்டார், `` பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா... உனை யென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’’ என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

திருஞானசம்பந்தர் தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப்பாடலிலும், பதிக வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அதற்கு முன்னோடியாக அமைந்தவர் காரைக்கால் அம்மையார் ஆவார். திருஞானசம்பந்தர் தனக்குப் புது வழிமுறை காட்டிய காரைக்கால் அம்மையார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பதற்கு ஆறுமுகநாவலர் எழுதிய காரைக்கால் அம்மையார் புராணத்தில் வரும் செய்தி சான்றாக அமைகிறது. அம்மையார் தங்கிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சித் தயங்கினார் என்பது அச் செய்தி.

22-3-2022- செவ்வாய்க்கிழமை - ரங்க பஞ்சமி - அவமாகம்

இன்று ரங்கபஞ்சமி. “ரங்க” என்ற வடமொழிச் சொல்லுக்கு வண்ணங்கள் என்று பெயர். வடநாட்டில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது. அதில் நிறைவு நாளாக, இந்த ரங்கபஞ்சமி நாள் கொண்டாடப்படுகிறது. ஐந்து வண்ணக் கலவைகளால், ஒருவர் மீது ஒருவர் கொண்டாடுவர். ஐந்து வண்ணங்களும் பஞ்சபூத தத்துவத்தை சொல்வதாகச் சொல்கின்றார்கள். இன்றைய தினம் “அவமாகம்.” “அவமாகம்” என்பது அபூர்வமான ஒரு பஞ்சாங்க நிகழ்வினைக் காட்டுகின்றது.

மூன்று திதிகளும் அல்லது  மூன்று நட்சத்திரங்களும் அல்லது மூன்று யோகங்களும், இதில் ஏதாவது ஒன்று ஒருநாளில் வருகின்ற பொழுது, அந்த நாள் “அவமாகம்” என்று சொல்லப்படுகிறது. அன்று எந்த சுபகாரியங்களும் செய்யப்படுவதில்லை. திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட அபூர்வ நாளில் இறை வழிபாடு செய்வது சிறந்தது. இன்று காலை சதுர்த்தி,பின் பஞ்சமி,நாளை விடிவதற்கு முன் சஷ்டி என மூன்று திதிகள் உள்ள அபூர்வமான நாள். இறைவனை வணங்க ஏற்ற நாள். நாளை புதன்கிழமை (23.3.2022) முருகனுக்குரிய சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்