ஷீரடி சாய் பாபாவிடம் வரம் பெற்ற பீமாஜி பாட்டீல் பிரார்த்தனை
2022-03-02@ 16:07:06

அந்த நாட்களில் (1909ம் ஆண்டில்) க்ஷயரோகம், பிளேக் போன்ற வியாதிகள் ஆபத்தானவை. அந்நாட்களில் இவைகளுக்கு எந்த வைத்தியமும் கிடையாது. நாராயணகாவ்ங் என்னுமிடத்தைச் சேர்ந்த பீமாஜி பாட்டீல் தீவிரமான க்ஷயரோகத்தால் துன்பப்பட்டார். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. மரணம் நெருங்கிய நாட்களில் நானாஸாஹேப் பீமாஜிபாட்டீலுடன் சீரடி சென்று பாபாவை தரிசித்தார். அவருக்குள்ள தீவிரமான க்ஷய ரோகம் குறித்து பாபாவிடம் விவரித்து அவரை ரட்சிக்குமாறு பிரார்த்தித்தார். முந்தைய தீய கருமங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக் காண்பித்து, முதலில் இதில் தலையிட தீர்மானம் இல்லாதவராய் இருந்தார். இருந்தும் பீமாஜி பாட்டீலின் பிரார்த்தனையைக் கேட்டு பாபாவின் உள்ளம் உருகியது.
இம்மசூதியில் கால் வைத்த உடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார் என்று கூறினார். அன்று இரவு, பீமாஜி பாட்டீலுக்கு பயங்கரமான கனவு தோன்றியது. இக்கனவின் மூலம் அவரின் பூர்வஜென்ம பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்தார் பாபா. கனவில் அவர் பட்ட கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்தது. அதற்கு நன்றி தெரிவிக்குமாறு பாட்டீல் பிரதி ஆண்டும் தனது கிராமத்தில் சாயி ஸத்ய விரதம் மேற்கொண்டு பாபாவிற்கு நன்றி செலுத்தி வந்தார். நாமும் சாயிநாதரின் கருணையை நினைவு கூர்ந்து, இச்சரித்திர பாராயணமும், ஸப்த ஸப்தாஹா விரதத்தையும் மேற்கொண்டு, சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறுவோம்.
மேலும் செய்திகள்
குடும்பத்தின் வறுமை நிலை நீங்க எளிய முறையிலான விநாயகர் வழிபாடு..!!
தீராத குடும்ப கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு..!!
எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா வழிபாடு..!!
கடன் பிரச்சனை தீர வேண்டுமா?: கேட்ட வரங்களை வாரி வழங்கும் பெருமாள் வழிபாடு..!!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா?: வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும்..!!
சௌபாக்கியத்தை தரும் லக்ஷ்மி அஷ்டகம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!