SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக உயரமான ராஜ கோபுரம்

2022-02-15@ 13:15:02


கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் உள்ள கோபுரங்களில் மிகவும் உயரமான கோபுரம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கோபுரம். 135 அடி உயரம் கொண்டது. ஏழு நிலைகளை கொண்டு, கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. சுசீந்திரத்தை தாண்டி பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் இந்த கோபுரத்தை தரிசிக்கமுடிகிறது.கோபுரத்தின் முதல் 25 அடி கல்லால் ஆனது. மேல் பகுதி செங்கல், சுதை, மரம் ஆகிய வற்றாலும் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் வெளிப்பகுதியில் புராண, இதிகாச காட்சிகள் சுதை உருவங்களாக அமைக்கப்பட்டுள்ள உருவங்களில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடல் கடைதல், நரசிம்மன் தூணில் இருந்து வெளிப்படுதல், கிருஷ்ணன் கோபியரின் ஆடைகளை கவருதல் போன்ற நிகழ்வுகள் புடைச்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கோபுரத்தின் அஸ்திவார வேலை கி.பி.1545-ல் தொடங்கப்பட்டுள்ளது. விஜய நகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் ராமராய விட்டலதேவராயர் என்பவரால் கோபுர வேலை தொடங்கப்பட்டுள்ளது. கோபுர வாசலுக்கு நான்கு வித கல் தூண்கள் வாயில் நிலைகளாக பயன்படுத்தப்பட்டு உள்ளன. நிலையின் உயரத்துக்கு அனைத்து வாயில் கதவுகளில் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கதவுகளின் முக அமைப்பு தாமரைப்பூ வடிவின் நடுவே வாழைப்பூ கூம்பு போன்று கூர்மையான இரும்புக் குமிழ்கள் அதிகம் காணப்படுகின்றன. பாதுகாப்பு கருதியே மன்னர் ஆட்சியில் இப்படி அமைத்திருக்கலாம். சக்திவாய்ந்த கதவில் முற்கால நாழிப்பூட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் போது அவசரத் தேவைக்காக சிறிய கதவு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்கோபுர வாசல், ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் உறுதியோடு நிற்கிறது. கோபுரத்தின் வெளி அழகு அடுக்கடுக்கான சிற்பங்கள் என்றால் கோபுரத்தின் உள்ளே பலரும் அறிந்திராத அழகழகான ஓவியங்கள் உள்ளன. ராமாயண காவியமும், சுசீந்திர தல வரலாறும் கோபுரத்தில் ஒவ்வொரு அடுக்குகளிலும் அழகாக தீட்டப்பட்டுள்ளன.ரசாயனக் கலவை இல்லாத அற்புத மூலிகைகளை கொண்டு இந்த வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
- கோட்டாறு ஆ.கோலப்பன்,

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்